У нас вы можете посмотреть бесплатно மேலமருத்துவக்குடி அபிராமி அம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோயில் விருச்சிக ராசி தலம் Viruchiga Rasi Temple или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவில் மருத்துவகுடி இறைவன்: ஐராவதேஸ்வரர். இறைவி: அபிராமி அம்மை. தலப்பெயர்கள்: இடைகுளம் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரினி தலவிருட்சம்: வில்வம் ஊர்: மேலமருத்துவக்குடி மாவட்டம்: மயிலாடுதுறை தேவார பாடல்: திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகத்தில் போற்றப்பட்டுள்ளது. இது ஒரு வைப்பு தலமாகும். கிழக்கு பார்த்த திருகோவில். ஆறு அடுக்கு ராஜ கோபுரம். மிகப்பெரிய மதில் சுவர்கள் கோவிலை சுற்றி. கோவில் செம்பியன்மாதேவியால் புனரமைக்க பட்ட ஸ்தலம் இது. புராண கால ஊர் பெயர் இடைகுளம் தற்போது மருத்துவக்குடி. ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர். சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் பெற்றார். சந்திரன் தீர்த்தத்தை உருவாக்கினார். இத்தல தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்று பெயர் பெற்றது. ஸ்ரீ கிருஷ்ணர் இத் தலத்தை வழிபட்டு ருக்மிணி தேவியை அடைந்தார். ஸ்ரீ ஆதிஷேசன் இங்கு வழிபட்டு பூமிதேவியைத் தாங்கும் வலிமையையும் பெற்றார். அகத்திய முனிவர் வழிபட்டதலம். ஸ்ரீ ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனி சுயம்பு ஆவார். வெள்ளை களிமண்ணால் உள்ள லிங்கம் இது. பார்வதி தேவி இக்கோவிலில் அபிராமி அம்மையாக அருள்பாலிக்கிறார். விநாயகர் விருச்சிக விநாயகராக உள்ளார். விஷப்பூச்சி கடிகள் ஏற்பட்டுபவரின் விஷத்தன்மை இவ்விநாயகரை பிராத்தித்தால் குணமடைகின்றனர். அழகிய முருகப்பெருமான் இத் தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் முருகன் மீது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பேறு பெற்றது. மருத்துவாசுரனும் நந்தியும் மருத்துவாசுரன் பிறந்து ஆட்சி செய்த ஊர் இது. ஆகையால் மருத்துவகுடி எனும் பெயர் வந்தது. முன்னொரு காலத்தில் ஜலந்தாசுரன் என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் மருத்துவாசுரன். இவன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவாசுரன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அப்போது அந்த அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். இதனையடுத்து சிவபெருமான் அவனுக்கு சூலாயுதத்தை வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்லகாரியங்களை செய்யமால், உலகத்தில் உள்ள தேவர்கள், மனிதர்கள் ஆகியோரை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான். அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். காயத்தோடு உள்ள நந்தியெம்பெருமான் இத் தலத்தில் தரிசிக்கலாம். சிவனுக்கு நேரே இல்லாமல் சற்று தள்ளி இருக்கிறார். இவரது பெயர் பானநந்தி. இந்திரனும் ஐராவதமும் தேவலோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள். இவர்களில் வித்யாதரர்கள் என்போர், கல்வி மற்றும் கலைகளில் சிறப்புற்று விளங்குபவர்கள். ஒருமுறை, வித்யாதரப் பெண் ஒருவர், திருமாலையும், லட்சுமியையும் துதித்து பாடி வீணை மீட்டினாள். இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமி தேவி, தான் சூடியிருந்த மணம் மிகுந்த மாலை ஒன்றை, அவளுக்கு பரிசாக வழங்கினாள். அதை பிரசாதமாக ஏற்ற வித்யாதரப் பெண், அங்கிருந்து புறப்பட்டாள். வழியில் அந்தப் பெண், துர்வாச முனிவரை சந்தித்தாள். துர்வாச முனிவர், லட்சுமி தேவியின் தீவிர பக்தன் என்பதால், தேவி தனக்கு அளித்த மணம் மிகுந்த மாலையை, வித்யாதர பெண், துர்வாச முனிவருக்கு வழங்கினாள். அதை வாங்கிய துர்வாசர் அதை தன்னுடைய சடா முடியில் சூடிக்கொண்டார். துர்வாச முனிவர் சிறிது தூரம் சென்றபோது, எதிரில் யானையின் மீது வந்து கொண்டிருந்தான் இந்திரன். அவனுக்கு அந்த மாலையைக் கொடுத்தார் துர்வாசர். அவன் அதை கண்களில் ஒற்றி, யானையின் மத்தகத்தின் மீது வீசினான். மாலை, யானையின் மீது விழுந்ததும், அது ஓடிய வேகத்தில், மாலை கீழே விழுந்து யானையின் காலடியில் மிதிபட்டது. அதைப் பார்த்ததும், துர்வாசருக்கு கோபம் வந்து விட்டது. ‘தேவேந்திரா! செல்வச் செருக்கில், நான் அளித்த புனிதமான மாலையின் பெருமையை உணராமல், யானை மீது வீசி விட்டாய். அது தரையில் விழுந்து புனிதம் கெட்டு விட்டது. உன் இத்தகைய அலட்சிய மனோபாவத்திற்காக, நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்’ என்று சாபமிட்டார். பலமிழந்த இந்திரனும், தேவர்களும் அசுரர்களிடம் சிக்கி அல்லல்பட்டனர். யானையும் கருத்து போய் அசிங்கமான தோற்றம் உடையதாய் ஆனது. இந்திரனும் ஐராவதமும் இங்கு வந்து பாவம் போகவேண்டும் என வேண்டி பாவத்தை இறைவன் அருளால் போக்கிகொண்டனர். திருநீலக்குடி சப்தஸ்தானம் மருத்துவகுடி திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். நடைதிறப்பு காலை 7மணி முதல் 11 வரை மாலை 5.30 to 8வரை கோவில் திறந்திருக்கும். அமைவிடம் கும்பகோணத்தில் இருந்து 13km. கும்பகோணத்தில் இருந்து திருபுவனம திருவிடைமருதூர் வண்ணகுடி வழியாக மருத்துவகுடி சென்றடையலாம். திருவிடைமருதூரில் இருந்து 3km. ஆடுதுறையில் இருந்து 1.5km. கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண் 9443853212 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 7994347966 கோயில் Google map link https://maps.app.goo.gl/BomBqg7tHg3ZJ... if you want to support us via UPI id 9655896987@ybl Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்