У нас вы можете посмотреть бесплатно பஞ்சமி நிலங்கள் l முக்கிய உயர்நீதி மன்ற தீர்ப்புகள் l panchami land l பஞ்சமி நிலங்களை வாங்கலாமா? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அரசாணை எண் 1010/10A வருவாய்துறை நாள் 30/09/1892-ன் படி ஆங்கில அரசால் SC/ST க்கு 12 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது அரசாணை நிபந்தனை: குறிப்பிட்ட ஆண்டுகள் பரிவர்த்தனை செய்ய கூடாது. அதன் பிறகு SC/ST க்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. SC/ST தவிர பிற சாதியினர் பஞ்சமி நிலத்தை கிரயம் வாங்கினால் அந்த கிரயம் செல்லாது. SC/ST வகுப்பினருக்கு வாரிசு இல்லை என்றால் அந்த நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும். SC/ST prevention of atrocities act 1989: இதன் சட்ட திருத்தம் 2016 சட்டப்பிரிவி 3(1)f இதில் SC/ST மக்களின் நிலங்களை இதர சாதியினர் உரிமை மாற்றம் செய்தாலோ (அ) ஆக்கிரமிப்பு செய்தாலோ குற்றம் என திருத்தப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது.. (அரசாணை எண் ஜி-1/4868/90 நாள் 15.7.1991) அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் 85,744.01 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10,922.54 ஏக்கர் நிலம் பிறரது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து தலித் மக்களிடம் ஒப்படைப்பதற்கென 1996 ஆம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பஞ்சமி நிலங்கள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் செய்வதற்கென 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மருதமுத்து தலைமையில் நில நிர்வாக ஆணையர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான மணிவண்ணன், வே.கருப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் கேட்டபோது தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் சுமார் 12 லட்சம் ஏக்கர் இருப்பதாக நில வருவாய் ஆணையர் தகவல் கொடுத்தார். தலித் மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. கோயம்புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த வீரநத்தம் கிராமத்தில் விஜிபி பிரேம் நகர், விவேகானந்தா நகர், குமரன் நகர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டுவதற்காக மனை வாங்கிப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அது தலித் மக்களுக்கு ரெவின்யூ போர்டின் நிலை ஆணை எண் 15இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலமாகும். எனவே, அந்த நிலத்தில் வீடு கட்டக் கூடாது எனத் தடை போடப்பட்டதால், வீடு மனைகளை வாங்கியவர்களால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது (VGP Prem Nagar Minvariya Kudiyirupor Sangam Vs The State Of Tamil Nadu, Dt 07.11.2008, High Court of Madras). தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அதன்பிறகு அதை விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், உரிய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தடை ஆணை பெற்ற பிறகே அந்த நிலம் வாங்கப்பட்டு முறையாகப் பதிவு செய்யப்பட்டு மனைகளாகப் பிரித்து விற்கப்பட்டிருக்கிறது” எனவும் வாதிடப்பட்டது. வாதங்கள் எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தனது தீர்ப்பில் பஞ்சமி நிலம் எதனால் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மிராசுதார்கள் எத்தகைய கொடுமைகளை அந்த மக்களுக்குச் செய்தனர் என்பதையும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். வாதங்கள் எல்லாவற்றையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தனது தீர்ப்பில் பஞ்சமி நிலம் எதனால் தலித் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மிராசுதார்கள் எத்தகைய கொடுமைகளை அந்த மக்களுக்குச் செய்தனர் என்பதையும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 1882ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெற்ற ரெவின்யூ போர்டு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் சுருக்கத்தைத் தனது தீர்ப்பில் அவர் அட்டவணைப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமின்றி தலித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான இடுக்கண்கள் குறித்து Dr. அம்பேத்கர் கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “அவர்கள் வறுமையால் பீடிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிலமற்ற விவசாயக் கூலி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது பொருளாதார நிலையைப் பற்றி மட்டும் பேசினால் போதாது, அப்படிச் சொல்வது உண்மை என்றாலும்கூட. ஒடுக்கப்பட்டோரின் வறிய நிலை அவர்களுக்கு எதிரான சமூகப் பகைமையினால் வந்தது. அந்தப் பகைமையின் விளைவாக அவர்கள் செய்வதற்குத் தயாராக இருந்தாலும் பல்வேறு வேலைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தலித் தொழிலாளர்களை பிற சாதித் தொழிலாளர்களிலிருந்து வேறுபடுத்துகிற, அவர்களுக்கிடையே அடிக்கடி சிக்கல் வருவதற்குக் காரணமாக அமைகிற உண்மை இதுதான்” என்ற கூற்றை (Dr.Babasaheb Ambedkar: Writings and Speeches Vol. No.II: Page Nos.552 and 553) அப்படியே எடுத்துத் தீர்ப்பில் தந்திருக்கிறார். ரெவின்யூ போர்டின் நிலை ஆணை 15ஐயும், 1941ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையையும் (G.O.Ms.2217, Rev. d.1.10.41) விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது, அதன் பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான் விற்க வேண்டும். அப்படி வேறு எவரேனும் அதை வாங்கியிருந்தால் எந்தவித இழப்பீடும் தராமல் அந்த நிலத்தை அவரிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்பதே பஞ்சமி நிலங்களுக்கான நிபந்தனை என விரிவாக விளக்கமளித்தர் நீதிபதி கே.சந்துரு.