У нас вы можете посмотреть бесплатно தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம்-ஓம் நமச்சிவாய ஓம்-vaidyanathar pathigam(Lyrics Below) или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - https://t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn ராமர் பூஜித்த லிங்கம், தன் பத்து தலைகளை கொய்து ஆஹுதி செய்த ராவணனின் துயர் துடைத்த லிங்கம், தீராத வலியையும் தீர்த்துவைக்கும் லிங்கம், கொடிய நோய்களை குணப்படுத்தும் லிங்கம், வைத்தியத்தின் பிறப்பிடமாய் அவதரித்த லிங்கம், உலகமக்கள் உடல்நலத்தைக்காக்க பூமியில் உதித்த லிங்கம் "வைத்தியநாத சுவாமி". இந்தியாவில் வைத்தியநாதருக்கு பல ஆலயங்கள் உண்டு. ஒவ்வொரு ஆலயத்திலும் சித்தாமிர்த தீர்த்தங்கள் உண்டு. அத்தீர்த்தில் குளித்து வைத்தியநாதரை தொழுதால் அலோபதி வைத்தியத்தால் தீர்க்கமுடியாத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. வைத்தியநாதரின் பாடல்களை பாடுவதும் கேட்பதும் ஆரோக்கியமான உடல் நலத்தை அளிக்கும். அவ்வண்ணம் ராமசாமி ஐயாவின் " ஸ்ரீ வைத்தியநாதர் பதிகத்தை" பாடி/கேட்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை வேண்டுவோம். Singer : Akila Natesan Poet : Ku. Se. Ramasamy Editor : Bharane Chidambaram Description : Vishalakshi Meyyappan பாடல் வரிகள்: ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய! உன்னையன்றி வேறு தெய்வம் உள்ளம் எண்ண வில்லையே ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்யநாதனே (ஓம் நமசிவாய) தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள் தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள் பூஜைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே போற்றும் என்னை வாழ்விலே முன்னேற்று வைத்யநாதனே (ஓம் நமசிவாய) ஒதும் நாலு வேதமும் உலாவுத் திங்கள், ஞாயிறும் உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும் பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே பாதிகொண்ட தையலோடு வாழி வைத்யநாதனே (ஓம் நமசிவாய) ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய் அடித்து வைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய் பாலன் நஞ்சு தேடவோ? பன்றி வேட்டை ஆடவோ? படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்யநாதனே (ஓம் நமசிவாய) வாத பித்த சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம் மனித ராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம் வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்? மேலும் என்ன கூறுவேன்? கண்பாரும் வைத்யநாதனே (ஓம் நமசிவாய) ஆயுர் வேதம் ஆங்கிலம் அமைந்த சித்த வைத்தியம் ஆன வேறு வகையிலும் அனேகமான பத்தியம் பாயும் நோயும் போனதோ? பலித்து நன்மை ஆனதோ? பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரம் வைத்யநாதனே (ஓம் நமசிவாய) அங்கு மிங்கும் ஓடி என்ன? அகலவில்லை நோய்களே ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே மங்கை பாகன் நீயிருக்க எங்குசெல்வோம் சேய்களே? மனமிரங்கி அருள் வழங்கு வாழி வைத்யநாதனே (ஓம் நமசிவாய) கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே கால் இல்லாத முடவருக்கும் கால் கொடுக்கும் போஜனே எண்ணில்லாத நோயின் கூட்டம் இடமில்லாமல் ஓடவே, என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்யநாதனே (ஓம் நமசிவாய) சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய் திசுக்குள், தோல், நரம்பு, எலும்பு, குருதியில் செறிந்த நோய் எந்த நோயும் போக்குவாய் எதிர் வராமல் ஆக்குவாய் இசைந்த கந்த புரியிலே அமர்ந்த வைத்யநாதனே (ஓம் நமசிவாய) நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே சாம வேத கீதனே சடாயு போற்றும் பாதனே தஞ்சம், தஞ்சம் தஞ்சம் என்னைத் தாங்கு வைத்யநாதனே (3) (ஓம் நமசிவாய)