У нас вы можете посмотреть бесплатно நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருமங்கலம் உலகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் கோயில் மூலவர்: சாமவேதீஸ்வரர் அம்மன்: உலகநாயகி ஊர்: திருமங்கலம் தலவிருட்சம்: பலாமரம் தீர்த்தம்: பரசுராமர் தீர்த்தம் மாவட்டம்: திருச்சி பித்ருஹத்தி, மாத்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலமாகவும் சாம வேதியர்களுக்கான தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது லால்குடி திருமங்கலத்தில் அமைந்துள்ள லோகநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு சாமவேதீசுவரர் திருக்கோயில். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலத்தில் அமைந்துள்ள இக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் பெருமான் ஆகியோரால் பாடல் பெற்ற இத்திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புப் பெற்றது. தல சிறப்பு திருமகள் வந்து சுவாமியை வழிபட்டதால் திருமங்கலம் என ஆயிற்று. பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும் இக்கோயில் இறைவனை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றிருக்கின்றனர். இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் இதைத் தவிர 63 நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து, முக்தியடைந்தது இத்திருமங்கலத்தில்தான். மேலும் நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பதும் தனிச்சிறப்புடையது. தலவரலாறு இக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் சாமவேதீசுவரர் லிங்க ஸ்வரூபியாகக் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் இறைவன் அருளால் ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000 சாகைகளாகப் பிரித்தார். அதனால் இவ்விறைவனுக்கு சாமவேதீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள், இசை விரும்புக்கூத்தன் என்று இத்திருக்கோயில் இறைவனையும் குறிப்பிட்டிருக்கிறார். கோயிலின் உள் பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும், ஆனாய நாயனருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது. இதற்கு அருகிலேயே ஆனாய நாயனருக்கு முக்தி கொடுத்த அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. ஆனாயநாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மன் தனி சன்னதி. மாத்ருஹத்தி தோஷ நிவர்த்தி பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி என்னும் தோஷம் நீங்க, இத்திருக்கோயில் இறைவனை வழிபட்டார். இறைவன் அருளால் பரசுராமருக்கு அத்தோஷம் நீங்கப்பெற்றது. இதனால் கோயிலிலுள்ள தீர்த்தம் பரசுராமர் தீர்த்தம் என்றும், இவ்வூர் பரசுராமேசுவரம் (திருமங்கலம்) என்றும் அழைக்கப்படுகிறது. பிராத்தனை முன்னோர்கள் விட்ட சாபங்கள், தோஷங்கள், ஏழேழு ஜன்மங்களாக இருந்த தோஷங்கள் நீங்க இக்கோயில் வந்து சுவாமி, அம்மனுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி, 11 முறை சிவனை வலம் வந்துசென்றால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம். காசிக்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன் இங்கு உனக்கு கிடைக்கும் என இறைவன் ரிஷிக்கு அருளினாராம். எனவே நீத்தார் கடன்களைக் காசியிலும், கங்கையிலும் செய்தால் என்ன பலனோ அப்பலன் இந்நதியிலும் நீராடி, இறைவனை வழிபட்டால் கிடைக்கும். பித்ரு கடன்கள், பித்ரு சாபங்கள் நீங்கி நன்மை பெறலாம். அபயமுத்திரையுடன் தட்சிணாமூர்த்தி பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி சின்முத்திரையுடன்தான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், திருமங்கலம் கோயில் இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. அபயஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி அபயமுத்திரை காட்டி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கப் பெற்று குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய், பால், தேன் அபிஷேகம் செய்து, தயிர் சாதம், சுண்டல் நைவேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும். 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது இத்திருக்கோயிலுக்கு வந்து பலனடைந்தவர்கள் கூற்றாக உள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை மஹிச வாகனமின்றி சிம்ம வாகனத்தில் இருப்பது தனிச் சிறப்பாகும். திருமணமாகாத பெண்கள் 11 வெள்ளிக்கிழமை வழிபட்டு, முடிவில் மஞ்சள் காப்பணிந்து நேர்த்தி செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆனாய நாயனார் ஆனாய நாயனார் இறைவனுடன் இரண்டறக் கலந்த கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் இக்கோயிலில் குருபூஜை விழா நடைபெறுகிறது. அமைவிடம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் வருபவர்கள் நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை வழியாகவும், லால்குடி சந்தைப்பேட்டை வழியாகவும் சென்று அங்கிருந்து 4. கி.மீ. தொலைவிலுள்ள திருமங்கலம் கோயிலை அடையலாம். நன்றி அகஸ்தியர் விஜயம் கோயில் Google map link https://maps.app.goo.gl/hug8gwi8Tobwt... ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9865422027 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 if you want to support our channel via UPI Id nava2904@kvb Join Our Channel WhatsApp Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathina கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில் தரிசனம் • கோபுரப்பட்டி அவனீஸ்வரர் கோயில் தமிழ்