У нас вы можете посмотреть бесплатно ஹைதராபாத் ஐக்கிய தமிழ் மன்ற தமிழ்ச் சங்கமம் - 2025 Aikkiya Tamil Mandram - Tamil Sangamam - 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஐக்கிய தமிழ்மன்றத்தின் பெருமை மிக்க தமிழர் சந்திப்பான நான்காம் தமிழ்ச் சங்கமம் 27.12.2025 அன்று ஹைதராபாத், மெட்டுகுடாவில் உள்ள ரயில்வே ஆஃபீசர்ஸ் கிளப் (A/C ஹால்) வளாகத்தில், 300 கும் மேற்பட்ட உறுப்பினர்களின் அரங்கம் நிறைந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, 3:30 மணி முதல் லைஃப்லைன் துளசி மருத்துவமனை, ஹைதராபாத் வழங்கிய இலவச மருத்துவ முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக நலனில் ஐக்கிய தமிழ்மன்றத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் 4:15 மணியளவில், தமிழ் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரையை திருமதி ஜெயா மணி, பொதுச் செயலாளர், ஐ.த.ம அவர்கள் வழங்க, ஆண்டு அறிக்கையை திரு செல்லம், பொருளாளர், ஐ.த.ம அவர்கள் சிறப்பாக எடுத்துரைத்தார். தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், திருமதி ரோஷன், செயற்குழு உறுப்பினர், ஐ.த.ம அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்றது; குழந்தைகளின் திறமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகளுடன் குழந்தையாக அவர்களின் தந்தையரும் இணைந்து மேடை ஏறி ஆடியது நிகழ்ச்சி மீது பார்வையாளர்களுக்கு இருந்த உற்சாகத்தை எடுத்துக் காட்டியது. சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜே. எஸ். ராஜ்குமார், தலைவர், லைஃப்லைன் மருத்துவமனைகள், சென்னை அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பித்ததுடன், சமூக சேவை, மருத்துவம், தமிழ் இலக்கியம் என அனைவரையும் கவரும் வண்ணம் மேடை பேச்சில் ஈர்த்ததோடு மட்டுமின்றி, புகழ் பெற்ற இரு தமிழ் பாடல்களையும் மேடையில் பாடி அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்து உள்ளங்களை கொள்ளை கொண்டார். அந்த ஆர்ப்பரிப்பு அடங்கும் முன் மேடையேறிய பாடகர்கள் திரு நரேஷ், Dr. ரவிசங்கர், திருமதி ரமணி சுயம்பு, திருமதி புவனேஸ்வரி ஆகியோர் அரங்கத்தின் ஆர்பரிப்பை அடங்க விடாமல் தங்களது தமிழ் கரோகி பாடல்கள் மூலம் ஆட வைத்தனர்.. அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா மற்றும் விருந்தினர் கௌரவிப்பு விழா மிக சிறப்பாக நடை பெற்றது. 2026 தமிழ் நாட்காட்டியை தலைமை விருந்தினர் திருமதி. அனுகிரஹா ஆதிபகவன் வெளியிட நமது மூத்த உறுப்பினர் திரு. தண்டபாணி அவர்கள் பெற்றுக் கொண்டார். சுமார் 8 மணியளவில் அரங்கம் அதிர மேடை ஏறிய திருமதி. அனுகிரஹா ஆதி பகவான், தனது பேச்சால் அடுத்த ஒரு மணி நேரம் அனைவரையும் அகல விடாமல் செய்ததோடு, சிரிப்பும், சிந்தனைக்குமான சிறப்பான ஒரு பேச்சை தனக்கே உரிய பாணியில் பேசி பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில், நன்றியுரையை திரு குணசேகர், இணைச் செயலாளர், ஐ.த.ம அவர்கள் வழங்கினார். முழு நிகழ்ச்சியையும் திரு ஸ்ரீராம் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர், ஐ.த.ம அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். வாழை இலை இரவு உணவு விருந்துடன், தமிழ்ச் சங்கமம் 2025 இனிய நினைவுகளோடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. உறுப்பினர்கள் அனைவரும் கை நிறைய பரிசுப் பொருட்கள் மற்றும் காலண்டருடன் மீண்டும் ஒரு மகிழ்ச்சிகரமான தமிழ்ச் சங்கம நினைவுகளை சுமந்து வீடு திரும்பினர். நிகழ்ச்சியை சிறப்பாக, சிரமேற்கொண்டு நடத்திய தலைவர் திருமதி. நிர்மலா ரவிசங்கர், பொதுச்செயலாளர் திருமதி. ஜெயா மணி மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ் உறவுகள் தங்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 🌸