У нас вы можете посмотреть бесплатно Malai Madha Church, Konalai (மலை மாதா திருத்தலம், கொணலை) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
S.A.Clements - Located at Trichy - Chennai Highway, Konalai, Tamil Nadu 621 132. This church is 20 kms from Chathiram Bus Stand. மலைமாதா திருத்தல வரலாறு அமைவிடம் வேதங்களின் விளைநிலமாம் பாரத திருநாட்டின் தென்பகுதியில் தேனமுதத் தமிழகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்திற்கு வடக்கே சுமார் 6 கல் தொலைவில் கொணலை என்னும் சிற்றூர் உள்ளது. அதற்கு கிழக்கே அக்காலத்தில் திராட்சைகளுக்குப் பெயர் பெற்ற கல்பாளையத்தில் கேரளாவிலிருந்து வந்த திரு. ஜோசப் என்னும் நாடோடிப்பாடகர் ஒருவர் தங்கியிருந்தார். கனவில் கண்ட காட்சி ஒருநாள் அந்த நாடோடிப் பாடகர் கனவில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு நீரூற்று இருப்பதைக் கண்டார். காலையில் எழுந்ததும் அந்த ஊற்றை தேடிப் புறப்பட்டார். அவர் கண்கள் வியக்கும் வண்ணம் இந்த இரண்டு ஊர்களுக்கு இடையில் நெடுஞ்சாலைக்குக் கீழ் திசையில் அந்த வறண்ட காலத்திலும் ஒரு சிறு குழியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டார். இந்த வறட்சிமிகு காலத்தில், குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்ற வேளையில் இந்தத் தண்ணீர் எப்படி வந்தது? என்று வியந்தனர்! அள்ள அள்ள குறையாத அமுத ஊற்று அவர் அந்தத் தண்ணீரை அள்ளிப் பருகினார். தேனமுதாக இனித்த அத்தண்ணீர் அள்ள அள்ள குறையாமல் இருப்பதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். "தாயே! மலைமாதாவே! தாகம் தீர்க்க வந்தவளே! எங்களை காப்பற்று" என்று கூறி அங்கே ஒரு சிலுவையைக் கொண்டு வந்து நட்டார். பாவம் போக்கும் நீரூற்று அந்த நாடோடிப் பாடகர் பிறகு ஊர் ஊராகச் சென்று தன்னுடைய பாடல்கள் மூலம் அன்னையின் புகழைப் பரப்ப ஆரம்பித்தார். மக்களும் அந்த இடத்தை நாடி வந்து நீரூற்றைக்கண்டு அதனை தீர்த்தமாக பாவித்து அள்ளிப்பருக ஆரம்பித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரியாது "இது தாகம் தீர்க்கும் நீரூற்று மட்டுமல்ல, பாவம் போக்கும் நீரூற்றும் ஆகும் என்பது,"ஏனெனில் சில மாதங்களிலேயே அந்த சிலுவைமேடை ஒரு சிற்றாலயமானது. ஒளியாகத் தோன்றிய அன்னை மரியா 15.05.1968 ஆம் ஆண்டு திருச்சி கிராப்பட்டியைச் சார்ந்த திரு. எட்வர்டு நெட்டோ, திரு.ஜோசப் பெர்ணான்டஸ், திரு சில்வெஸ்டர் ஆகிய மூவரும் முயல்வேட்டைக்கு அங்கு வந்தனர். அந்த இடத்திற்குச் சற்று மேற்கே உள்ள மலை உச்சி அதாவது தற்போதைய குருசடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென ஒரு ஒளி தோன்றுவதையும் அங்கு ஒரு பெண்மணி நிற்பதையும் கண்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அந்தப்பெண்மணி மறைந்து போக அங்கு ஒரு நீரூற்று இருப்பதையும் அதன் அருகே ஒரு சிலுவை நடப்பட்டிருப்பதையும் கண்டு வியந்தனர். மாதா சுரூபம் செய்ய ஆலோசனை "இந்த இடம் புதுமைகள் நிறைந்த இடம். இதற்கு நாம் ஏதேனும் செய்யவேண்டும்" என்றெண்ணி வீடு சென்றனர். பிறகு திருச்சி ஆர்.சி பள்ளி ஆசிரியர் திரு. அந்தோணிசாமியிடம் ஒரு மாதா சுரூபம் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். அன்னையின் அற்புதம் அதே ஆண்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த லாரி ஒன்று நள்ளிரவில் கொணலைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென்று நின்றுவிட ரேடியேட்டரில் தண்ணீர் இல்லை என்றறிந்த டிரைவர் திகைத்து நின்றபோது, தெற்கே சிறிது தூரத்தில் ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது பெண்மணி மறைந்து அங்கே ஒரு நீரூற்று இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியுடன் அந்த நீரை எடுத்து ரேடியேட்டருக்கு ஊற்றி தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அது முதல் லாரி ஓட்டுநர்கள் அந்த இடத்தில் ஒரு உண்டியல் வைத்து காணிக்கை செலுத்த ஆரம்பித்தார்கள்.