У нас вы можете посмотреть бесплатно 20 புங்கனூர் குட்டை ரக மாடுகள் விற்பனை | தகவல்கள் | World shortest cows | Punganur cows for sale или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Tamilnadupets #Tamil #Punganurcows புங்கனூர் மாடுகள் விற்பனை மற்றும் தகவல்கள் புங்கனூர் குட்டை மாடானது சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசத்தை பூர்விகமாக கொண்டது. இந்த பசுவின் பால் அதிக கொழுப்புச் சத்துக் கொண்டது. அதாவது 8% கொழுப்பு சத்து இந்த பாலில் உள்ளது. மேலும் இந்த பாலில் அதிக மருத்துவ குணம் உள்ளதாக நம்பப்படுகிறது. பொதுவாகப் பசும்பாலில் 3.5 முதல் 4 சதவீதம் வரையான கொழுப்புச் சத்துதான் இருக்கும். ஆனால் இந்தப் புங்கணூர் பசுவின் பால் எருமைப் பாலைப் போல் 8 % கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது. புங்கனூர் பசுக்கள் வெள்ளை, பழுப்பு, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. இதன் சராசரி உயரம் 70 - 90 செ.மீ ஆகும். இதன் எடை 110-200 கிலோ ஆகும். இவை ஒரு நாளைக்கு சராசரியாக 3 முதல் 6 லிட்டர் பால் தரவல்லது. இவை ஒரு நாளுக்கு 5 கிலோ தீவனம் உண்ணும். ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கட்டாயம் என்ற நிலை இருந்தது. தற்பொழுது வீடுகளில் மாடுகள் இருப்பது கௌரவம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, எந்திரங்கள் / ட்ராக்டர்கள் வரவுக்கு பின்னால் மாடுகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து விட்டது என்ற சொல்லியாக வேண்டும் பெரும்பாலான தொழுவங்களில் ! நாடு மாடுகளின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது! இந்த "புங்கனூர் குட்டை" என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அழிந்து வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புங்கனூர் இன காளைகளை உழவுக்கு கூட நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த காளைகள் மற்றும் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இந்தவகை மாடுகளுக்கு பாயும் பழக்கம் இல்லாததால் அனைவரும் பயமில்லாமல் இவ்வகை மாடுகளை பண்ணையிலும் வீடுகளிலும் வளர்த்து பராமரிக்கலாம். மேலும் வறட்சி காலங்களிலும் கூட உள்ள தீவனத்தை வைத்தே இவற்றை பராமரிக்கலாம். இந்த "புங்கனூர் குட்டை" மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் சித்தூர் பலமனேர் கால்நடை துறையில் இந்த காளைகள் மற்றும் பசுக்கள் வளர்த்து பராமரிக்கப்படுகிறது. பசுக்களுக்கு சினாய் ஊசியும் இந்த மையத்தில் போடப்படுகிறது. ஆந்திராவில் இந்த மாடுகள் மூலம் பெறப்படும் பாலில் ஆன்மீக சக்திகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக திருப்பதிக்கு அரங்கனுக்கு இந்த மாட்டின் நெய்யை அபிஷேகம் செய்கின்றார்கள். மேலும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கும் இந்த புங்கனுர் மாடுகளின் நெய்யை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது மேலும் சிறப்பு வாய்ந்தது. கலப்பினங்களின் வரவு அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய இனங்களை நாம் மறந்து வருகிறோம். அதன் வெளிப்பாடுதான், குட்டை ரகத்தை கண்காட்சிப் பொருளாக ஆச்சரியப்பட்டு பார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். விற்பனை தகவல்கள் : ஆந்திராவில் உள்ள குபேரா டைரி பார்ம் என்ற பண்ணை மூலம் புங்கனூர் குட்டை மாடுகள் தற்பொழுது விற்பனைக்கும் உள்ளன நீங்கள் தற்பொழுது பார்த்து கொண்டிருக்கும் அனைத்து மாடுகளும் இந்த பண்ணையில் விற்பனைக்காக இருக்கும் மாடுகளாகும். மொத்தம் 20 குட்டைரக புங்கனூர் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் 3 மாடுகள் சினையாக உள்ளது. இவற்றின் தகவல்களை பார்க்கலாம். அனைத்து மாடுகளும் ஒன்றரை வயது முதல் இரண்டு வயது ஆன மாடுகளாகும். 2 ஆம் ஈத்து மற்றும் 3 ஆம் ஈத்து மாடுகள். இந்த புங்கனூர் குட்டை ரக மாடுகளின் சிறப்பம்சமே உயரம் குறைவான மாடுகளாக இருக்கும். மாடுகளின் உயரங்களானது 2 அடி, 2.5 அடி, 3 அடி உயரமுள்ள மாடுகள் தற்பொழுது விற்பனைக்கு உள்ளன. நிறைய மாடுகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் பார்ப்பதற்கு ஒரே மாடுகள் போன்ற தோரணையை அளிக்கும். மாடுகளின் விலையானது ரூபாய் 35000 முதல் 65000 வரை ஒவ்வொரு தரத்திற்கும் ஏற்றார் போல மாறுபடுகின்றது. மேலும் சிறப்பம்சமாக இந்திய முழுவதும் இந்த மாடுகள் டெலிவரி செய்ய முடியும் என்று பண்ணை உரிமையாளர் தெரியப்படுத்துகிறார். மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பண்ணையில் புங்கனூர் மாடுகள் விற்பனைக்கு கிடைக்கும் என்பதனை பண்ணை உரிமையாளர் தெரியப்படுத்துகிறார். மாடுகள் விற்பனைக்கு வாங்க விருப்பப்படும் நண்பர்கள் வீடியோவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள பண்ணையாளரின் அலைபேசி என்னை தொடர்பு கொள்ளவும். நீங்களும் "TAMILNADU PETS" இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கை தொடவும். "Tamilnadu pets" YOUTUBE CHANNEL👇 / @tamilnadupets3667 "Tamilnadu pets" FACEBOOK PAGE👇 / tamilnadupetsassociation "Tamilnadu pets" INSTAGRAM👇 / tamilnadupets "Tamilnadu pets" TELEGRAM CHAT GROUP👇 https://t.me/tamilnadupetsassociation "Tamilnadu pets" TELEGRAM CHANNEL👇 https://t.me/Tamilnadupets "Tamilnadu pets" Whatsapp குரூப்பில் இணைய மற்றும் உங்கள் கால்நடைகள் / வேளாண் பொருட்களை விற்பனை செய்ய / நமது சேனலில் ஒளிபரப்பு செய்ய உங்களது அலைபேசி எண்ணை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நாங்கள் எங்கள் குழுவில் இணைக்கிறோம். Mail ID : 👇 [email protected] நன்றி !!! 🙏 Tamilnadu Pets