У нас вы можете посмотреть бесплатно வாசி யோகம், தியானம்,அன்னதானம் அதிசயத்தில் ஆழ்த்தும் வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி | Desiayavthi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழகத்தை பொறுத்தவரை ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் பஞ்சமே இல்லாத மாநிலம் என்றே சொல்லலாம். பல்வேறு ரிஷிகள் முனிவர்கள் சித்தர்கள் என்று பலரும் இந்த புண்ணிய பாரதத்தில் அவதரித்து நாட்டுமக்களுக்கு தேவையானவற்றை கொடுத்துச்சென்றுள்ளார். நம் வாழ்நாளில் ஒரு முறையாவது சித்தர்கள் பற்றியோ முனிவர்கள் பற்றியோ அல்லது ஞானிகள் பற்றியோ அறிந்திருப்போம். அவர்களின் தவத்தினால் பெற்ற ஞானத்தினை மக்களின் வாழ்க்கைக்கு பயன்படுமாறு பல்வேறு அற்புதங்களை விட்டு சென்றிருக்கின்றனர். அப்படியான ஞானியை பற்றி தான் இன்று நாம் இந்த காணொளியில் காணப்போகிறோம். கோயம்புத்தூரிலிருந்து பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டிற்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி என்ற பெயருடன் அமைந்திருக்கிறது. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் பற்றி : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் என்பவர் 1938 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்தார். குற்றாலம் சங்கராஸ்ரமத்தின் நிறுவனரான சங்கரானந்தரிடம் சீடராக சேர்ந்திருக்கிறார். பின்பு தனது குருவான சங்கரானந்தரின் ஆணைப்படி இமயமலை சென்றார். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும்போது தென் கைலாயம் என்று அனைவராலும் அறியப்படும் வெள்ளிங்கிரியில் தன் ஜீவ ஈஸ்வர ஆகும் இடம் வெள்ளிங்கிரி சுவாமிகள் உணர்கிறார். அதன் படி 1965 ஆம் ஆண்டு இமயமலையில் இருந்து வெள்ளிங்கிரிக்கு நடைப்பயணமாகவே வந்தார் என்று அறியப்படுகிறது. குருபரம்பரை வழக்கத்தின்படி ரிஷிகள், முனிவர்கள் , சித்தர்கள் ஆகியோர் ஆற்றங்கரை யோரம் தவக்குடில் அமைத்து தவமிருப்பது மரபு அதன்படி 1965 ஆம் ஆண்டு இமயலையில் இருந்து வந்த வெள்ளிங்கிரி சுவாமிகள் முள்ளாங்காடு கிராமத்தின் பின்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் அருகில் மேட்டுப்பகுதியினை தேர்வுசெய்து தவக்குடில் அமைத்து தவம் செய்துவந்தார். நொய்யல் ஆற்றின் அருகில் மேட்டுப்பகுதியினை தேர்வுசெய்து தவக்குடில் அமைத்த சுவாமிகள் நோயாளிகளுக்கு வைத்தியம், பக்தர்களுக்கு வாசியோகப்பயிற்சியும், சித்த மருத்துவ பயிற்சியும் அன்னதானமும் வழங்கிவந்துள்ளார். #vellingiri #swamigal #Desiyavathi