У нас вы можете посмотреть бесплатно மனமும் பிராணனும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஜனவரி 23. வியாழன் மனமும் பிராணனும் —-------------------------------------------- எண்ணுதல், சிந்தித்தல் மனத்தின் வேலை; ஆனால் மனம் சடம், சுயசக்தி யற்றது பிராணன் சக்தி சொரூபம். மனதின் இயக்கத்திற்கு காரணம் பிராணன். குதிரை மேல் சவாரி செய்யும் ஜாக்கி போல், மனம் சுவாசக்காற்றின் மேல் இயங்குகிறது மனதிற்கும் மூச்சிக் காற்றின் இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் அமைதியாக இருக்கும் போது கவனித்தால் சுவாசம் சீராகவும் முறையாகவும் இருக்கும் மனம் அமைதியற்று சலனப்படும் போது சுவாசம் முறையற்று இருக்கும். ஒருவர் கோபப்படும் போது அவருடைய சுவாசத்தைக் கவனித்தால், அது வேகமாகவும் முறையற்றும் ஓடும் மனமும், பிராணனும் ஜீவன் என்ற மரத்தின் இரண்டு கிளைகள். அவைகள் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தே தோன்றும் உளமும் உயிரும் உணர்வும் செயலும் உளவாம் கிளை இரண்டு உந்தீபற ஒன்றவற்றின் மூலம் உந்தீபற என்ற பகவான் ரமணரின் உபதேச உந்தியார் பாடல் மனம், பிராணன் இவை இரண்டின் மூலம் ஒன்றே என்று உணர்த்துகிறது “பிராணாயாமம்” சுவாசத்தை முறைப்படுத்தி, மனதை அடக்க அட்டாங்க யோகத்தில் கையாளப்படும் பயிற்சி. ஒரு சற்குருவின் வழிகாட்டுதலில் பிராணாயமப் பயிற்சியை பயின்று தியானிப்பது நல்லது. பிராணாயாமத்தில் நான்கு நிலைகள் உள்ளன. மூச்சை உள்ளே இழுப்பதற்கு “பூரகம்” (inhalation) என்றும், வெளியே விடுதற்கு “ரேசகம் “( exhalation) என்றும். உள்ளே தக்கவைப்பதற்கு (holding) “கும்பகம் “என்றும் கூறுவார்கள். இழுத்த மூச்சை உள்ளே சற்று நேரம் தக்க வைப்பதற்கு “அந்தர் கும்பகம்” என்றும், மூச்சை வெளிவிட்டு மறுபடியும் உள்ளே இழுக்கும் முன் வெளியில் மூச்சை தக்க வைப்பதற்கு “பாஹ்ய கும்பகம்” என்று பெயர் மூச்சை உள்ளே நிறுத்தி இருக்கும் போது ( அந்தர் கும்பகத்தின் ) மனம் இயக்க சக்தியற்று உள்ளே அடங்கும். இது யோக முறையில் மனதை அடக்கும் ஒரு உபாயம். இயக்கமற்ற மனதின் இந்த நிலைக்கு “மனோலயம் “என்று பெயர் இதையே பகவான் ரமணர் உபதேச நூன்மாலையில் “வளியுள் அடக்க வலைபடு புட்போல் உளமும் ஒடுக்கமுறும் உந்தீபற ஒடுக்க உபாயம் இது உந்தீபற” என்று உபதேசிக்கிறார். வலையில் அகப்பட்ட பறவைபோல் மனம் கும்பகத்தில் வசப்படும். இதுவே “மனோலயம்”. மனோலயத்தால் மனம் நாசமடைவதில்லை. மூச்சு வெளிவிடும் போது மறுபடியும் பகிர்முகப்படும். “மனோநாசமே” மனதை அழித்து ஆத்ம சாட்சாத்காரம் கூட்டுவிக்கும் மனோலயத்தில் அடங்கிய மனத்தை ஒருமுக சிந்தனையுடன் “தன்னை யார்” என்று உணரச் செய்ய வேண்டும் எண்ணங்களற்று, . சிந்தனையற்று “தன்னை யார்” என்று பார்க்கும் மனதிற்கு “ஆத்மாவே” தன் சுயசொரூபம் என்பது புரியும். அந்தப் புரிதல் உறுதிப்பட்டு மனம் ஆத்மாவில் இரண்டற கலக்க வேண்டும் “ ஓம் தத் சத் “ —----------------------------------------------- Title: “MIND”and “PRANA “ are two branches of the tree “JEEVAN”; make the “MIND” to realize its true nature “ATMA” during “KUMBAGAM”