У нас вы можете посмотреть бесплатно கல்யாண மண்டப ஸ்டைலில் சாம்பார் செய்முறை 800பேருக்கு /How to prepare mandabam stylesambar/chefMurali или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மஞ்சள் தூள் 150 கிராம் துவரம்பருப்பு 17 கிலோ(மெனுவை பொருத்து மாறுபடும்) கடலை பருப்பு ஒரு கிலோ மிளகா வத்தல் நீட்டு 250 கிராம் மிளகாய் வற்றல் குண்டு 100 கிராம் தனியா 1 கிலோ புளி இரண்டு கிலோ கடுகு 200 கிராம் வெந்தயம் 25 கிராம் மிளகு 25 கிராம் சீரகம் 25 கிராம் பெருங்காய கட்டி 50 கிராம் தனி மிளகாய் தூள் 300 கிராம் தனி மல்லித்தூள் 300 கிராம் ஆயில் 2 1/2லிட்டர் தண்ணீர் 60 லிட்டர் கல் உப்பு சுமாராக அரை கிலோ முருங்கைக்காய் 50 நம்பர் கத்தரிக்காய் 4 கிலோ பரங்கிக்காய் 3 கிலோ தக்காளி 4 கிலோ பச்சை குடைமிளகாய் 3 கிலோ தேங்காய் 3 பச்சை மிளகாய் 10 கருவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை ஒரு கட்டு செய்முறை முதலில் ஒரு கடாயில் 200ml ஆயில் விட்டு ஆயில் சூடானதும் 25 கிராம் அளவுக்கு பெருங்காய கட்டியை அதில் போட்டு ஃப்ரை செய்ய வேண்டும் பிறகு ஒரு கிலோ கடலை பருப்பை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும் பிறகு அதில் 25 கிராம் அளவுக்கு வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும் பிறகு மிளகு சீரகம் இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும் பிறகு முழு தனியா ஒரு கிலோசேர்த்து வறுக்க வேண்டும் தனியா சிறிது வறுத்த பிறகு காய்ந்த மிளகாய் நீட்டு கால் கிலோவை போட்டு நன்றாக வறுக்க வேண்டும் வறுக்கும் பொழுது சிறிது கருவேப்பிலை போட வேண்டும் பிறகு தேங்காய் 3 உடைத்து திருகி அதோடு சேர்த்து வறுக்க வேண்டும் அப்பொழுது ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் பொடி சேர்த்து வறுக்க வேண்டும்வறுத்த மசாலாவை கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் அளவுக்கு ஆயில் ஊற்றி ஆயில் சூடானதும் முதலில் காஞ்ச மிளகாய் குண்டு போட்டு வறுக்க வேண்டும் பிறகு கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம் போடவேண்டும் பிறகு சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும் பெரிய வெங்காயம் தேவை என்றால் போட்டுக்கொள்ளவேண்டும் வெங்காயம் வதங்கியதும் வெட்டிய காய்கறிகள் பரங்கிக்காய் கத்திரிக்காய் முருங்கைக்காய் இவைகளை ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்வதக்கும் பொழுது சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவேண்டும் பிறகு 4 கிலோ தக்காளியை எட்டு எட்டாக வெட்டி காய்கறிகளோடு சேர்த்து வதக்க வேண்டும் வதக்கும் பொழுது சுமார் 400 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்து வதக்கவேண்டும் பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரை சுமார் மூன்று லிட்டர் அளவுக்கு புளிப்பின் அளவு பொருத்து மாறுபடும் பிறகு சாதா தண்ணீர் காய்கறி முழுகும் அளவுக்கு சேர்த்து வேக வைக்கவேண்டும் வேகவைக்கும் பொழுது மிளகாய்தூள் மல்லி தூள் இவற்றை போட்டு கொதிக்க வைக்க வேண்டும் இதற்கு இடையே தனி அடுப்பில் 17 கிலோ துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவேண்டும் பருப்பின் உரு தெரியாத அளவிற்குபருப்பை வேக வைக்கவேண்டும் பருப்பு வேகும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவேண்டும் பிறகு வெந்த காய்கறிகளை உதாரணமாக ஒரு முருங்கைக்காயை எடுத்து பார்க்க வேண்டும் முருங்கைக்காய் வெந்து இருந்தால் அனைத்து காய்கறிகளும் வெந்து இருக்கும் ஆகவே வெந்த காய்களை வெந்த பருப்பு போடு சேர்க்க வேண்டும் இப்பொழுது புளிப்பு உப்பு காரம் இவைகளை சரி பார்க்க வேண்டும் இவ்வாறு சரி பார்க்கும்பொழுது சாம்பாரில் காரம் என்பது சிறிது கம்மியாக இருக்க வேண்டும் காரணம் நாம் ஏற்கனவே சொன்னது போல் மசாலாவை அரைத்து தண்ணீர் ஊற்றி கலந்து இந்த சாம்பாரில் சேர்ப்போம் ஆகவேகாரம் சிறிது கம்மியாக இருக்க வேண்டும் பிறகு குடை மிளகாயையும் சேர்க்க வேண்டும் இப்பொழுது சாம்பாரில் உப்பு காரம் புளிப்பு இவை அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் சாம்பார் மசாலா ஊற்றிய பிறகு சாம்பார் வெகுநேரம் கொதிக்க கூடாது காரணம் சாம்பார் கொதிக்க கொதிக்க சாம்பாரில் உள்ள மசாலாவின் வாசனை வெளியே சென்றுவிடும் அதோடு இல்லாமல் சாம்பார் நேற்றைய குழம்பு போல் ஆகிவிடும் ஆகவே மசாலா ஊற்றிய பிறகு ஒன்று அல்லது இரண்டு கொதி களில் சாம்பாரை ஆப் செய்துவிடவேண்டும் பிறகு இதில் கொத்தமல்லி இலையை அலங்கரித்து பரிமாறலாம் குறிப்பாக சாம்பாரில் நெய் ஊற்றி சாப்பிடும்பொழுது அருமையாக இருக்கும் இப்பொழுது சுவையான கல்யாண மண்டப ஸ்டைல் அரவை சாம்பார் ரெடி #CHEFMADRASMURALI/#KALYANAMANDABAMSTYLEMIXVEGSAMBAR/#CHEFMURALI https://play.google.com/store/apps/de... / chefmurali73 / muralidharansugandhi.c.7 http://sreebalaacatering.com / chefmadrasmurali