У нас вы можете посмотреть бесплатно பலிக்குப் பலி எடுத்து பட்டத்தை மீட்ட பட்டவன் வடமலை சுந்தத்தேவர் யுத்த வரலாறு||Vadamalai Sunthathevar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கள்ளர் நாட்டில் பட்டவன் தெய்வங்களின் வீர வரலாற்றையும் தியாக உணர்வையும் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் அதிகாரப்போட்டியால் இரு மாமன் மைத்துனர்களுக்கு இடையே நடந்த போரில் இன்றும் வாளில் இரத்தம் மணக்கும் பட்டவன் வடமலை சுந்தத்தேவரின் வரலாற்றைக் காண்போம். பாண்டிய மண்டலத்தில் தன்னரசுக்கொடிகட்டி பறக்கும் கள்ளர்களின் நாடுகள், எந்த ஒரு வேற்று ஆட்சியதிகாரத்தின் நிழல் தன் நிலத்தில் ஒரு அடி கூட படரவிடாமல், காலங்காலமாய் சகஉதிரங்களுடன் சுதந்திரக்காற்றைப் பகிர்ந்து வாழ்ந்த கள்ளர்களின் தன்னரசு நாடுகள் பாண்டிய நாட்டிற்குப் பேரரண்கள். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தில் நடந்த டெல்லி சுல்தான்களின் ஆட்சியை அகற்றி தென்னாட்டில் ஆட்சிக்கு வந்த விஜநகர அரசின் பிரதிநிதிகளான நாயக்க அரசு, பாண்டிய நாட்டிற்கு அரணாக விளங்கிய கள்ளர்நாடுகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்துத் தோல்வியடைகிறது. ஏழுபத்தி ரெண்டு பாளையங்களாகப்பிரித்து தென்னாட்டில் அதிகாரஞ்செலுத்திய மதுரை நாயக்க அரசால் தன்னரசு கள்ளர் நாடுகளுக்குள் ஒரு பாளையத்தை உருவாக்க முடியதவகையில் வலிமை பெற்றிருந்தார்கள் தன்னரசு நாட்டுக்கள்ளர்கள். கள்ளர்களுக்கும் மதுரை நாயக்க அரசுக்கும் காலங்காலமாய் இருந்து வந்த விரோதப்போக்கு திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் உச்சத்திற்குச் சென்றது. அவரின் கடைசி காலங்களில் தான் கள்ளர் நாடுகளுடன் சமாதானமாய் போக நினைத்து அதன் படி பிறமலை நாட்டு கள்ளர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து பிறமலை நாடு எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து நீதிபரிபாலனம் செய்யும் உரிமையை கீழஉரப்பனூர் திருமலை பின்னத்தேவருக்கும் அவருக்குத் துணை தேவராக பின்னத்தேவரது மைத்துனர் வடமலை சுந்தத்தேவருக்கும் கொடுத்து பிரதிநிதிகளாக நியமிக்கிறார் திருமலைநாயக்கர். கீழ உரப்பனூரை இராஜதாணியாக வைத்து எட்டு நாட்டுக்கும் இருபத்திநான்கு உபகிராமத்திற்கும் காரியத்தணம் செய்து வாழ்கின்றனர். அப்படி இரண்டு மூன்று தலைமுறைகள் சென்ற பின் திருமலை பின்னத்தேவர் பட்டத்திலிருந்தவருக்கும், வடமலை சுந்தத்தேவர் பட்டத்திலிருந்தவருக்கும் இடையில் அதிகாரப்போட்டி சிறிது சிறிதாக உருவேற ஆரம்பிக்கிறது. திருமலைப்பின்னத்தேவரை விட வடமலை சுந்தத்தேவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியதால் கோபமுற்ற திருமலை பின்னத்தேவர் தனது மைத்துனர் வடமலை சுந்தத்தேவரை குடும்பத்துடன் கொலை செய்ய நாட்குறித்து விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துப் பந்தலில் பட்டியக்கற்களை வைத்து அவர்கள் உணவருந்தும் வேளையில் பந்தலைத் தள்ளிவிட்டு குடும்பத்துடன் அவர்களை கொலை செய்துவிடுகிறார். அப்போது கருவுற்றிருந்த வடமலை சுந்தத்தேவரின் மனைவி வாக்குளத்தில் தன் தகப்பன் வீட்டிற்கு தனது மகனுடன் சென்றிருந்தார். வடமலை சுந்தத்தேவரின் வம்சத்தையே கருவறுக்க எண்ணி அவர்களையும் கொல்வதற்க்காகத் தேடுகின்றனர். வடமலை சந்தத்தேவரது மகன் அதில் தப்பித்து பொன்னமங்கலம் பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலில் ஒளிந்திருந்து கோவிலுக்கு வைக்கும் பொங்கலை சாப்பிட்டு திரிகையில் கோவில் பூசாரிக்கு அதுதெரிந்து சுந்தத்தேவர் மகனுக்கு ஆதரவாக பொங்கலை சேர்த்தே வைத்து செல்ல கோவில் பூசாரியின் மனைவிக்கு இது தெரிந்துவிட சுந்தத்தேவரது மகனை அப்பூசாரி தெற்கு நோக்கி அனுப்பிவிடுகிறார். சிவகிரி பாளையத்தை அடைந்த சுந்தத்தேவரது மகன் சிவகிரி பாளையத்துக்குச் சொந்தமான நிலங்களை உழுது விவசாயம் செய்துகொண்டிருந்த பள்ளர் வீட்டில் தஞ்சம் புகுகிறார். தன் கதையைச் சொல்லாமலேயே வளர்கிறார். அவர்கள் நிலத்தை நெடுக, உழும்போது இவர் நிலத்தின் மையத்தில் ஏர்கலப்பையைப் பூட்டி வட்ட, வட்டமாய் உழுது சீக்கரம் உழவை முடித்துவிடுவாராம். அவரை மெச்சி அந்த பள்ளர் குடும்பம் அவரை வளர்கிறது. அவர் வளர்ந்து வாலிபராகிறார் அப்பொழுது சிவகிரி பாளையக்காரரிடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது " ஊருக்குள் புகுந்து தொந்தரவு செய்துச்செல்லும் புலியை கொல்பவருக்கு தக்க சன்மானமும் அரசரிடம் வேண்டிய உதவியும் பெற்றுக்கொள்ளலாம் என்று" இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சுந்தத்தேவன் அப்புலியை கண்டுபிடித்து கொன்று புலியின் நுனிவாலை அறுத்துச் சென்று அரண்மனையில் கொடுத்து பாராட்டைப்பெறுகிறார். பாளையக்காரர் "அதற்குப் பரிசாக என்ன வேண்டுமென்று கேட்க தன் வரலாற்றைச் சொல்கிறார் தன் குடும்பம் அதிகாரச்சண்டையால் தன் மாமன் குடும்பத்தாலேயே பலியாகிதயும், தன் தந்தையின் பட்டத்தை மீட்டு தான் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்றும், பலி வாங்குவதற்கு படை வேண்டுமென்று கேட்கிறார். படையைப் பெற்றுக்கொண்ட சுந்தத்தேவன் தன் மண்ணுக்கு கிளம்புகிறார். நெல் அடித்து களத்தில் போட்டு முதல் மரக்கால் சாமிக்கு அளப்பது போல் உரப்பனூர் பகுதியில் யார் நெல் அளந்தாலும் முதல் மரக்கால் திருமலை பின்னத்தேவருக்கு அளப்பார்கள். அப்படி சுந்தத்தேவன் படையத்திரட்டி வரும் நாளில் நெல் அளப்பவரிடம் சுந்தத்தேவன் பெயரைச்சொல்லி அளக்குமாறு சொல்லப்படுகிறது. அன்று அளக்கும் போது வடமலை சுந்தத்தேவன் பெயரைச்சொல்லி அளக்கவும் சினமுற்ற திருமலை பின்னத்தேவர் அவன் கருவறுத்தப் பின்னாடி இல்லாதவன் பெயரைச் சொல்லி ஏன்டா அளக்றீங்க என்று அளப்பவனை அடிக்க போக மறைவான இடத்தில் வாளுடன் மறைந்திருந்த சுந்தத்தேவன் பின்னத்தேவரை குத்தி கொலை செய்துவிடுகிறார். பின் தன் படையாட்களுடன் ஊருக்குள் புகுந்து பின்னத்தேவரது குடும்பத்திலுள்ள அனைவரையும் கொலை செய்து பலியெடுக்கிறார். திருமலை பின்னத்தேவரின் தொட்டில் பிள்ளையை மட்டும் விட்டு விட்டு "அவன் மகன் அவனாகத்தான் இருப்பீங்க என்று சொல்லி" தன் வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று விட்டு வைத்து செல்கிறார். தன் தந்தையின் பட்டத்தை மீட்டு வடமலை சுந்தத்தேவராக பட்டம் சூடுகிறார். திருமலைப் பின்னத்தேவருக்குறிய அதிகாரத்தையும் சேர்த்துப் பெறுகிறார். கள்ளர் நாடு தன்னார்வலர்கள் #Kallarnadu_kovil #temple_history #kallar_history #madurai_temples #ettunadu_temples #8_nadu_history #Sunthathevar_history