Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Story of PK Sekar babu | பிகே.சேகர் பாபு கடந்து வந்த பாதை |About PK Sekarbabu| DMK minister| Dream x в хорошем качестве

Story of PK Sekar babu | பிகே.சேகர் பாபு கடந்து வந்த பாதை |About PK Sekarbabu| DMK minister| Dream x 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Story of PK Sekar babu | பிகே.சேகர் பாபு கடந்து வந்த பாதை |About PK Sekarbabu| DMK minister| Dream x

#pksekarbabu #mkstalin #dmkminister,#MinisterofHinduReligiousandCharitableEndowmentsDepartment,#dmkpoliticianhistory #latestnews,#chiefminister,#vadachennai,#sekarbabuhistory Story of PK Sekar babu | பிகே.சேகர் பாபு கடந்து வந்த பாதை |About PK Sekarbabu| DMK minister| Dream x கடந்த 2001 matrum 2006 சட்டமன்ற தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். வட சென்னை மாவட்ட அ.தி. மு.க. செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழகத்திலேயே அதிகமான பொதுக் கூட்டங்கள் நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஜெயலலிதா எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பார் சேகர்பாபு. இவரது உறவினர்தான் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன். இவரை வைத்து ஜெயலலிதாவின் நெருக்கமான வளையத்திற்குள் நுழைந்து வட சென்னை அதிமுகவை ஆட்டிப்படைத்து வந்தார் சேகர்பாபு. தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதில் தீவிரமாக இருந்தார். 2006 மாநகராட்சி தேர்தலின்போது திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பொதுவாக சென்னையில் அதிமுகவுக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்காது என்ற நிலையை மாற்றியவர்களுள் சேகர் பாபுவும் ஒருவர். கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் சென்னையில் அதிமுக அதிக தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது. பீல்டில் இறங்கி கடுமையாக உழைப்பவர் என்ற பெயரைப் பெற்றவர் சேகர்பாபு. இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சித் தலைமை சமீபத்தில் திடீரென நீக்கியது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு வட சென்னை மாவட்ட பொறுப்புகளில் இருந்த சேகர்பாபு ஆதரவு நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். நிர்வாகிகள் தொடர்ந்து மாற்றப்படுவதை எதிர்த்து வட சென்னை அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா வீட்டில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த விலகல் குறித்து சேகர்பாபுவிடம் கேட்டால், நான் நம்பி இருந்த தலைமை என் மீது நம்பிக்கை இழந்து விட்டது. நான் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சிலர் என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதில் குறியாக உள்ளனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் அரசியலில் இப்படியே இருப்பதிலும் அர்த்தமில்லை. 2011 ம் ஆண்டு தி மு க தலைவர் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.தி மு க வில் இணைந்ததும் அந்த தேர்தலில் ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டது .அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். கழகத் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று மாநில, மாவட்ட நிர்வாகிகளை அணுகி செயல்திட்டங்களை வகுப்பதும், பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை கலந்து கழகப் பணியாற்றுவதில் மதிப்புறு மாவட்டச் செயலாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். வட சென்னையில் அதிமுக வேட்பாளர்களை காலி செய்யும் மிகப் பெரிய பணியும் அவரிடம ஒப்படைக்கப்பட்டது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையும், கழகத் தலைவர் தளபதியின் பிறந்த நாளையும் வியப்புறும் விழாக்கள் நடத்தி அறிவுசார் திருவிழாவாகவும், திராவிட இயக்க பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவை நடத்தி விழாக்களின் நாயகராக விளங்குவதில் இவருக்கு நிகர் இவரே. தி மு க தலைவர் கலைஞர் மறைந்த தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் அவர் நினைவிடத்தில் பூக்களால் அலங்கரித்து வணங்கி மரியாதை செய்து தன் பணி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அவரின் செயல் சிலிர்ப்பூட்டும். CAA போராட்டம், விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம், என கழகம் முன்னெடுத்த. மாபெரும் அரசியல் களத்தில் வியக்க வைக்கும் பணியாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பெருமை சேர்த்தத்திலும் இவரின் ஆற்றல் மிக மிக பாராட்டப்பட்டது . அனிதா பயிற்சி மையத்தின் மூலம் கொளத்தூர் தொகுதியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட கழகத் தலைவர் பாதையில் துறைமுகம் தொகுதியில் தயாளு அம்மாள் பயிற்சி மையம் உருவாக்கி பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வேலை கிடைக்கச் செய்தும், அழகுக்கலை பயிற்சி வழங்கி வழங்கி பெண்களை தன் சொந்தக் காலில் சுயமரியாதையோடு வாழும் வகை செய்து வருகிறார் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள். எளியோரை உயர்த்துதல் தான் ஏற்ற பதவிக்கு கௌரவம் ஆகுமென்று கணந்தோறும் உழைக்கிறார் "மக்களை அணைத்துக்கொள், உன்னை சங்கம மாக்கு, மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பிறருக்காக வாழும் பொதுநல அக்கறை கொண்டோரை காலம் ஒரு போதும் கை விடுவதில்லை அப்படியான மக்கள் பணிக்காக அர்ப்பணிப்போடு வாழ்பவர் தான் பி. கே.சேகர் பாபு. #pksekarbabu #stalin #kingmaker #tamil #DREAMX #latestnews #lifeofsekarbabu #aboutsekarbabu

Comments