У нас вы можете посмотреть бесплатно அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
மன அமைதி பெற மனதை மயக்கும் இனிமையான சிவன் பாடல். Mesmerizing song of lord shiva பாடல் : அருள் வடிவாகிய ஆதிசிவனே ஆல்பம் : எல்லாம் சிவமயம் பாடியவர் : பிரபாகர் இசை : அன்புராஜ் இயற்றியவர் : செங்கதிர்வாணன் வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் விஜய் மியூஸிக்கல் Karthigai Deepam Sivan Songs -Tamil Devotional Song Song : Arul Vadivagiya Aadhisivane - Album : Ellaam Sivamayam Singer : Prabhakar Lyrics : Senkathirvanan Music : Anburaj Video : Kathiravan Krishnan Produced : Vijay Musicals #vijaymusical#tophitsivansong#sivanpadalgal#arulvadivagiyaadhisivane பாடல்வரிகள் | LYRICS அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே