У нас вы можете посмотреть бесплатно 🔴நெற்றிக்கண் : ஈபிஎஸ்-க்கு பதில் சொல்லி எனது தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை | மாலைமுரசு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🔴நெற்றிக்கண் : ஈபிஎஸ்-க்கு பதில் சொல்லி எனது தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை - மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரை ஏன் தவிர்க்கிறார் முதல்வர்? எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்- முதல்வர் ஸ்டாலின் ஒரேபோடு சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை கூறுவதற்காக அரைத்த மாவையே எடப்பாடி பழனிசாமி அரைத்து வருவதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, அவரைப் போல் காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என்றும் பதில் அளித்துள்ளார். கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமலாக்கத்துறை ரெய்டு காரணமாகவே மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வெள்ளைக் கொடியுடன் சென்றார் எனவும், 3 ஆண்டுகளாக ஏன் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் விமர்சித்தார். கொளத்தூரில் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையில் காரசார வாதம் நடந்து வந்தது. திமுக தரப்பில், உங்களை போல் 3 கார்கள் மாறி முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்லவில்லை என்றும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் திட்டங்களை தொடங்கிய ஸ்டாலின் கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் முதியோர் சிறப்பு இல்லத்தை திறந்து வைத்த அவர், மூத்த குடிமக்களுக்கான 3 உறைவிடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் பொதுத் தேர்தல் சாதித்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை அளித்தார். தரம் தாழ்ந்துவிடும் இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சியை பற்றி சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு பதில் அளித்து எனது தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை. கொள்ளையடித்த அதிமுக ஆட்சி டெல்லிக்கு வெள்ளைக் கொடியும் கொண்டு செல்லவில்லை. அவரிடம் உள்ள காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து அரக்கோணம் பாலியல் புகார் தொடர்பான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்த கேள்விக்கு, கொள்ளையடித்த கட்சியான அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி என ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வீம்புக்கு பேசி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிக்கிறார் ஸ்டாலின்: இபிஎஸ் கண்டனம் சென்னை: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் போலி குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி தெளித்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக கூறியதில் இருந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி இடையே சொற்போர் நீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என கூறிவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன், தமிழகத்துக்கான 'நிதி' க்காகவா, இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் 'நிதி'-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கான உண்மை பதில் என்ன? ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டுக்கு நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே, உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள 'நிதி'களையும், அவர்களுக்கு துணையான 'தம்பி'களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள். அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே? உங்கள் வீட்டுத் 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் யார், அவரிடம் என்ன சொத்து இருந்தது, என்ன தொழில் செய்தார், எவ்வளவு லாபம் பார்த்தார், இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன, எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர், இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா ஸ்டாலின், நீங்கள் கதறுவதை நான் மட்டுமல்ல; மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு பழனிசாமி பதிவிட்டுள்ளார். #malaimurasu #netrikann #debate #mkstalin #eps @malaimurasunewslive Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics. Follow on: Insta : / malaimurasutv_official twitter : / malaimurasutv facebook : / malaimurasu website : http://www.malaimurasu.com Live News : / malaimurasunewsdigital SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive