У нас вы можете посмотреть бесплатно முல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Music или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Mullaivanam | Album : Sri Garbarakshambikai | Singer : Padma Shri Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : Veeramani Kannan | Amutham Music முல்லைவனம் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : பத்ம ஸ்ரீ ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக் பாடல்வரிகள் : முல்லைவனம் நிற்கும் தாயே கர்பரக்ஷாம்பிகே எம்மை காத்தருள்வாயே தீர்த்தக்கரை அழகு வாவி திகழும் சிவன் வாமதேவனின் மேனியமர் தேவி கேட்கின்ற வரம் யாவும் தருவாய் தருவாய். . . வரம் யாவும் தருவாய். . . எங்கும் பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ போற்றுதலை ஏற்கின்ற தாயே வேண்டும் பொருள்யாவும் வார்கின்ற ஸ்ரீசக்ர மாயே ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே அகிலம் வளர்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயவுதரும் மாயே முகிலில் இருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருக்காவூர் தாயே சந்தனக் காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம் வந்தனம் தரிசனம் யோகம் ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசயத் தோற்றம் வளம் யாவும் தருகின்ற உருவாய் புண்ய வாஜபேயம் போன்ற வேள்வியில் எழுவாய் நனைகின்ற கருவிற்கு காப்பாய் அன்று வேதிகைக்கருள் செய்ய வேண்டுதலை ஏற்றாய் மழலைகள் தொழுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்பத்தைக் காக்கின்ற சீலம் அழகு முகம் ஆனந்தம் ஆகும் வானின் அமரர்க்கு உன் தாழே சரண மலர் பாதம் உற்சவத் தேரினில் ஏறி வீதி ஊர்வலம் செய்கின்ற உலகிதன் தேவி பற்பல வாத்தியம் முழங்க அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற வேணி அன்னையின் ஸ்தோத்திரம் பாடும் உள்ளம் அகிலத்தின் பாக்கியம் யாவும் கொண்டாடும் சன்னதியில் வந்துன்னைத் தேடும் அன்பர் சந்ததி வளர்ந்தோங்கும் சந்தோஷம் கூடும் காத்தருள்வாயே. . காத்தருள்வாயே.. காத்தருள்வாயே. . . திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும். ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. To Download / sri-garbarakshambigai Google Play Store: https://play.google.com/store/music/a... For More Videos: / amuthammusic / amuthammusicsanskritseries Follow us on: / amuthammusic #Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic