У нас вы можете посмотреть бесплатно 22 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய பரபரப்பு | Actress Soundarya Death | Malaimurasu Seithigal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
22 ஆண்டுகளுக்கு பிறகு கிளம்பிய பரபரப்பு | Actress Soundarya Death | Malaimurasu Seithigal தமிழ் சினிமாவில் கார்த்தியின் நடிப்பில் வெளியான பொன்னுமணி படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சௌந்தர்யா. தொடர்ந்து முத்துக்காளை, டியர் சன் மருது படங்களில் தோன்றியிருந்தாலும், ரஜினிகாந்துடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததில் இருந்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் 10-க்கும் குறைவான படங்களிலேயே நடித்திருந்தார். சூப்பர் ஹிட் படங்களான படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் சௌந்தர்யாவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வந்தது. 2003-ம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா, தெலுங்கு தேசம் கட்சியிலும் இணைந்தார். இந்நிலையில் 2004 ஏப்ரல் 17-ம் தேதியன்று தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் இறந்தபோது சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என புகார் அளித்துள்ளார். சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்தை வாங்குவதற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்த நிலையில் மோகன்பாபு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக புகாரில் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு மகன் மனோஜ் தனது வீட்டை ஆக்கிரமித்ததாக நடிகர் மோகன்பாபு புகார் அளித்திருந்தார். தற்போது சௌந்தர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பகீர் கிளப்பிய சிட்டிமல்லு, மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜூக்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ரகு, இந்த குற்றச்சாட்டுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நடிகர் மோகன்பாபுவுடன் எந்த தகராறும் இல்லை என்றும், தனது மனைவி சௌந்தர்யாவிடம் இருந்து மோகன்பாபு எதையும் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். #malaimurasu #actress #soundarya @malaimurasunewslive Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics. Follow on: Insta : / malaimurasutv_official twitter : / malaimurasutv facebook : / malaimurasu website : http://www.malaimurasu.com Live News : / malaimurasunewsdigital SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive