У нас вы можете посмотреть бесплатно அங்கும் இங்கும் எங்குமாய் - நடராஜர் பதிகம் - Angum Ingum Engumai - Natarajar Padigam (Lyrics Below) или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான சிவபெருமானின் திருவடிவங்களில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை நடனத் திருக்கோலத்தின் வழியே வெளிப்படுத்தும் அற்புதக் கோலம் நடராஜப் பெருமானுடையது. சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயனார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு. உடுக்கை ஒலி இந்த உலகைப் படைத்தலை உணர்த்தும். பிறவிப் பிணி தீர்க்கும் அக்னிச் சுடர் அவன் இடக்கையில் உள்ளது. அபயகரம் காத்தல் தொழிலைக் காட்டும். வீசிய இடக்கை `கஜஹஸ்தம்.’ அதன் ஒரு விரல் தூக்கிய திருவடியைக் காட்டிக்கொண்டிருக்கும். எடுத்த திருவடி பிறவிக் கடலில் தத்தளிக்கும் உயிர்களை மீட்டு அருளும். ஊன்றிய திருவடி ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று விதமாக நம்முள் இருக்கும் மாயைகளின் உருவகமான முயலகனை அழித்து மறைத்தல் தொழிலைச் செய்யும்.இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலம் ஐந்தொழில்களைப் புரிகிறான் என்கின்றன சாஸ்திரங்கள். நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. ரத்தின சபை – திருவாலங்காடு, கனகசபை – சிதம்பரம், ரஜதசபை – (வெள்ளி சபை) – மதுரை, தாமிரசபை – திருநெல்வேலி, சித்திரசபை – திருக்குற்றாலம் ஆகியன. தில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர்.இங்குள்ள நடராசர் ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சியளிக்கிறார்.மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார். அம்பலவாணர் அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தை தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம். ஆனால், நடராஜ ரூபத்துக்கோ ஓர் ஆண்டில் ஆறுதினங்களே அபிஷேகங்கள் -1. மாசி சதுர்த்தசி, 2. சித்திரை திருவோணம், 3. ஆனி உத்திரம், 4. ஆவணி சதுர்த்தசி, 5. புரட்டாசி சதுர்த்தசி, 6. மார்கழி திருவாதிரை. நடராஜர் அபிஷேகத்தை தரிசிக்க வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும், வறுமை அகலும், செல்வம் சேரும், பிறவிப் பிணி என்னும் பெரு நோயும் அகலும் என்று பாடுகின்றன திருமறைகள். நடராஜப் பெருமானை வழிபட்டு நம்மைப் பீடித்திருக்கும் கவலைகளிலிருந்தும் பிணிகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுபடுவோம். சிவனருள் நம்மை வழிநடத்தட்டும். அன்புடன், நிறை இசைக் குடம் Singer : Akila Natesan Editor : Bharane Chidambaram Description : Mani Venkatachalam Vani Palaniappan பாடல் வரிகள்: அருள்மிகு நடராஜர் பதிகம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே! ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே! மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே! (ஓம்) எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம் எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம் செந்தமிழ்ச் சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம் சிவந்தபாத பங்கயம் உவந்தருள் நடேசனே! (ஓம்) மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை என்றும் தீமை அனுகிடாமல் ஈசனே தடுத்து வை ஏத்தும் அன்பர் குழுவினில் என்னைச் சேர்த்துவை நடேசனே! (ஓம்) ஆபயந்த ஐந்தினோடு பால் பழம் பஞசாமிர்தம் ஆலைவாய்க் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம் நீபயந்த யாவையும் நினைக்களித்தேன் ஈசனே! நேர்த்தியாய் அனைத்துமாடி வாழ்த்துவாய் நடேசனே! (ஓம்) அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் வல்லனே ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே இட்ட மாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம் என்றும் நல்கவல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே! (ஓம்) வில்லினால் அடிக்கவோ வீசுகள் பொருக்கவோ? மிதித்த போதுகை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே! (ஓம்) ஆடநீ எடுத்தாய் அறிந்தவர் இயம்புவர் அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன் ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தக் கால் எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே! (ஓம்) மழுவெடுத்(து) எதை விளக்க மன்றுதோரும் ஓடினாய் மதியெடுத்த சிரம் இருக்க மத்தானாய் ஏன் ஆடினாய் கழுதெடுத்து நடனமாடும் காட்டில் என்ன தேடினாய் கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே! (ஓம்) எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே! இன்று நான் படைத்தயாவும் உண்ணுவாய் சபேசனே தடுத்த பண்டை வினையகற்றித் தாங்குவாய் சர்வேசனே சரணம் உன்னயன்றி ஏது தாங்குவாய் நடேசனே! (ஓம்) வாழி நீ படைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்! வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம் ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே! ஓய்ந்து சற்றென் நெஞ்சினைக் கண் சாய்ந்து கொள் நடேசனே! (ஓம்) ஓம் நமசிவாய ஓம் சிவாய நமரூபனே! ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே சங்கீதனே வாமியாய் தலைத்த சிவகாமி காதல் நேசனே மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே! (ஓம்) அருட்கவி கு.செ.ராமசாமி