У нас вы можете посмотреть бесплатно தென்பாகம் சந்தனமாரி அம்மன் பாமாலை/CJ Mike или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song Title : Thenbaagam Santhanamaari Composed by : CJ MIKE Lyrics : A.Pa. Raja Vocals. : Nanjil Gireesh Instrumentalist : Solomon Bruto. D.V. Produced by Vijisri’s DISA Creations Produced in CJ.Studio, Maduravoyal, Chennai-95 பாடல் வரிகள் ஓம்…….. வங்கக்கடல் ஈரத்திலே….🌊 முத்துநகர் ஓரத்திலே….. சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாயே…. நிர்கதியாய் வந்து நின்றோம் நாங்கள்…… பொற்பதமே… அற்புதமே… ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே….. சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாயே……. ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி கண்ணில் கடல் பொங்குதம்மா உந்தன் பெயர் சொல்லுதம்மா நெஞ்சில் ஒருவித ஏக்கம் உன் பார்வை பட துன்பம் தீரும் காளி உன்னைக் காண வந்தோம் அருள் புரியும் தாயே நாடி வந்த சந்ததிக்கு கதி அது நீயே சோதி வடிவாய் ஆனவளே🔥 செண்பகமே … எங்கள் மங்கலமே சோதி வடிவாய் ஆனவளே செண்பகமே … எங்கள் மங்கலமே தாக்கும் பிணிகள் உன்னை நோக்கும் நொடி ஓடும் நாளும் எங்களை நீ காத்தருள வேண்டும் சந்தனமாரி எங்கள் குங்குமக்காளி நீ தொட்டால் வினை காத்தோடு தான் விட்டோடும் தாயீ பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி☀️ சந்திரனைக் காதணியாய் அணிந்தாய் போற்றி🌙 தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி… நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி கண்ணில் கடல் பொங்குதம்மா உந்தன் பெயர் சொல்லுதம்மா நெஞ்சில் ஒருவித ஏக்கம் உன் பார்வை படத் துன்பம் தீரும் காளி உன்னைக் காண வந்தோம் அருள் புரியும் தாயே நாடி வந்த சந்ததிக்கு கதி அது நீயே🌈 பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி --------- **சாந்தமாக்கும் சாந்த சொரூபிணி** ஆலய வழிபாட்டினால் மன அமைதி கிடைக்கலாம். ஆலயத்திலிருந்து வீட்டிற்குச் சென்றபிறகு அந்த மன அமைதி பலருக்கு நிலைத்திருப்பதில்லை. மன நிம்மதி எப்பொழுதும் நிலைத்திருக்க சித்தர்கள் வழி செல்லுதல் வேண்டும். ஆலயத்தை வடிவமைத்த சித்தர்கள்…. அங்கு அருள்பாலிக்கும் தெயவத்திற்குச் சில குண நலன்களை வைத்தார்கள். அவற்றை நினைந்து வேண்டுதல்கள் செய்யும்பொழுது அளவற்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். சந்தனமாரியின் குணநலன்களாக சித்தர்கள் சொல்வது என்ன? அட்டகாளிகளில் ஏழாவதாகப் பிறந்தவள் சந்தனமாரி. எட்டு பேரில் இவள் மிகவும் சாந்தமானவள். கருணையே வடிவானவள். சகோதரிகள் ஏழு பேரும் சிங்கத்தை வாகனமாகக்கொண்டு வலம் வருகின்றனர். ஆனால் சந்தனமாரியோ புள்ளிமானைத் தனது வாகனமாக்கிக் கொண்டவள். உயிர்களை வாழ வைக்கும் மழையைப் பெய்ய வைப்பதால் ஆகாசமாரி என்றும், கார்மேகம் போன்ற கூந்தல் அழகியாக இருப்பதால் சடைமாரி என்றும், சந்தன நிறத்தழகி ஆதலால் சந்தனமாரி என்று வணங்கப்படுகிறாள். வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் சினத்தைக் கைவிட வேண்டும். இதை “ஆறுவது சினம்”….என்று ஒளவைப் பிராட்டியாரும் கூறுகிறார். சினத்தின் தீமையைப் பற்றித் திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகிறார். . தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். (305) ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். (309) ஒருவன் தன் உள்ளத்தில் கூட கோபத்தைப் பற்றி நினைக்காதவனாக இருப்பானேயானால் அவன் விரும்புகின்ற நன்மைகள் எல்லாம் அவனை வந்தடையும். சகிப்புத்தன்மையும், சாந்தகுணமும் நமக்குத் தேவையான மிக முக்கியமான குணநலன்கள். இவற்றை எந்த கல்லூரியும் கற்றுத்தருவதில்லை.. எந்த திரைப்படங்களும் கற்றுத்தருவதில்லை… எந்த தொலைக்காட்சித் தொடர்களும் கற்றுத்தருவதில்லை… …எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை… இவை கிடைக்கும் ஒரே இடம் … இறைவனுடைய பாதம்தான்… இறைவனுடைய பாதம் எங்கே இருக்கிறது… இரண்டு இடங்களில் இருக்கிறது… ஒரு இடம் … … இறைவனுடைய பாதங்களை உங்கள் அகக்கண்ணால் கண்டு இறைவனிடம் சரணாகதி அடையும் நிலை. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் கடவுள் உங்கள் உள்ளத்தில் வருவார்… இன்னொரு இடம்… கோவில் … இறைவனுடைய பாதங்களை உங்கள் புறக்கண்ணால் கண்டு இறைவனிடம் சரணாகதி அடையும் நிலை. உங்கள் உள்ளமோ… அல்லது ஆலயமோ…. சரணாகதி முக்கியம்… நான் ஒன்றுமில்லை … எல்லாமே நீதான் என்ற சரணாகதி… அதிசயம் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கும்… …சாந்த குணம் என்பது அன்பின் ஓர் அடையாளமாகும். “அன்பே சிவம்” . சகிப்புத்தன்மை உள்ளவர்களே சந்தோஷமாக இருக்கிறார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் நியாயமாக நடக்கிறார்கள். வாழ்வில் வசந்தம் வீச சாந்த குணமே முக்கியமான தேவையான ஒர் குணமாக இருக்கிறது.. இந்த சாந்த குணத்தின் அம்சமாகத் திகழ்பவள்தான் சந்தனமாரி அம்பாள்… சந்தனமாரி….சந்தன மேனியை உடையவள். உயிர்கள் வாழ குளிர்ச்சியான மழையைப் பெய்ய வைக்கும் ஆகாச மாரி அவள். கார் மேகங்களைப் போன்ற குளிர்ச்சியான மேகங்களில் வரும் சடைமாரி அவள். அட்டகாளிகளில் ஏழாவதாகப் பிறந்த சந்தனமாரி தம் பக்தர்களுக்குத் தரும் அருளாசி என்ன தெரியுமா? வாரத்தின் ஏழு நாட்களும் உங்களின் சினம் தவிர்த்து சாந்தமாக இருக்க வைப்பதுதான் சந்தனமாரியின் அருளாசி. சந்தனமாரியின் சன்னதிக்கு வருவதால் உங்களுக்குக் கிடைப்பது மன நிம்மதி மட்டுமல்ல… நல்லொழுக்கம் விருத்தி அடையும். நாளடைவில் ஞானமும் கைகூடும். தெய்வீக நலன்கள் உங்கள் வீட்டில் தங்கும். ஓம் சாந்தி.. சாந்தி…சாந்தி…