У нас вы можете посмотреть бесплатно 27/01/2026 உங்கட அப்பா சிங்களவனா..? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
“நீங்கள் பிக்குமாருக்கு ஆதரவு செய்கிறீர்கள்.. நான் ஒரு பெளத்தன் ஆகவே பிக்குமாருக்கு ஆதரவு செய்வேன்.. அப்ப உங்கட அப்பா சிங்களவனா..?” ———— என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகுந்த அறிவு வறட்சியை வெளிப்படுத்தும் கேள்விகளில் இதுவும் ஒன்று. தனிநபரின் மத அடையாளத்தை அவனது இன அடையாளத்துடன் இயல்பாகக் கட்டிப் போடுவது, அடிப்படையில் ஒரு தத்துவப் பிழை மட்டுமல்ல, அது ஒரு அபாயகரமான சமூக மனநிலையின் பிரதிபலிப்பும்கூட. என்னைத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பவர்களை நான் எளிதில் புறக்கணிக்க முடியும். ஆனால் இவ்வாறு மதம், இனம், அடையாளம் ஆகியவற்றை கலக்கி, தன்னம்பிக்கையுடன் அறியாமையை வெளிப்படுத்தும் தற்குறித்தனமான கேள்விகள், தனிநபருக்கல்ல, சமூக ஒற்றுமைக்கே தீங்கானவை. தான் அறியாமையில் உறைந்திருப்பதே தெரியாமல், அதை அறிவாகக் கருதி பேசும் இத்தகைய மனநிலைகள், சமூகத்தில் விமர்சனச் சிந்தனை வளர்வதற்கே தடையாக நிற்கின்றன. இந்தவகையான தற்குறிகள் தான் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு ஆபத்தானவர்கள். ——- நான் ஒரு பெளத்தனாக இருப்பதற்கு என் தந்தை சிங்களவனாக இருக்க வேண்டியதில்லை. அதுபோல, நான் ஒரு இஸ்லாமியனாக இருப்பதற்கு என் தந்தை அரேபியனாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு கிருஸ்தவனாக இருப்பதற்கு என் தந்தை ஒரு கெளகேசியனாக (Caucasian) இருக்க வேண்டியதில்லை. மதம் என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படும் உயிரியல் அடையாளம் அல்ல. அது மனிதன் சிந்தித்து ஏற்கும் ஒரு தத்துவத் தேர்வு. அதேபோல், பொதுவாக “இனம்” என அழைக்கப்படும் இனத்துவ அடையாளமும் மாற்றமற்ற இயற்கை உண்மை அல்ல. மொழி, கலாசாரம், அரசியல் அதிகாரம் மற்றும் வரலாற்றுச் சூழ்நிலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கருத்துருவாக்கமே இனத்துவம் ஆகும். வரலாற்றில் பல சமூகங்கள் காலப்போக்கில் தங்களின் இன அடையாளங்களை மாற்றியுள்ளன. சிலர் புதிய இன அடையாளங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் அரசியல் தேவைக்காக மறுவிளக்கம் செய்துள்ளனர். பெளத்தம் சிங்கள இனத்துக்கு மட்டும் சொந்தமான ஒரு மதம் அல்ல. உண்மையைச் சொன்னால் பெளத்தம் ஒரு மதமே அல்ல. அது ஒரு தத்துவம். அது மனித துக்கத்திலிருந்து விடுதலைக்கான ஒரு தத்துவ வழி. இஸ்லாம் அரேபிய இனத்தின் அடையாளம் அல்ல. அது இறைவன், நீதியும் ஒழுக்கமும் குறித்த ஒரு உலகளாவிய நெறிமுறை. கிறிஸ்தவம் யூத இன எல்லைகளைத் தாண்டி உலக மதமாக மாறியதுபோல், இந்துமதமும் புவியியல் மற்றும் இன எல்லைகளை மீறி பரிணாமம் அடைந்துள்ளது. மதத்தையும் இனத்தையும் நிரந்தரமான, மாற்றமற்ற அடையாளங்களாகக் காட்டும் சிந்தனை, அறிவியலுக்கும் வரலாறுக்கும் முரணானது. இனம் அரசியல் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்படும் சமூகக் கட்டமைப்பு. மதம் மனிதன் சிந்தித்து ஏற்கும் நம்பிக்கை அமைப்பு. இரண்டையும் ஒன்றாக கலப்பது, மதத்தையும் இனத்தையும் அரசியல் ஆயுதங்களாக மாற்றும் அபாயகரமான செயல்முறை. ஒரு அறிவுசார் சமூகத்தில், மதமும் இனமும் பரம்பரைச் சங்கிலிகளாக அல்லாமல், மாற்றம் பெறக்கூடிய மனிதக் கருத்துருவாக்கங்களாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 27/01/2026 +94774842464. #அருண்சித்தார்த் #arunsiddharthjaffna #arunsiddharth