У нас вы можете посмотреть бесплатно ஞானத்தின் பயன் என்ன? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஜீவன் முக்தர்கள் - உதாரணம் ----------------------------------------------------------- ஜீவன்முக்தர்கள் அநேகரை நாம் அறிவோம். ஜனகன் ஜீவன்முக்தனாக ராஜ்யபாரம் செலுத்திவருகிறான். பூர்வகாலத்தில் உதித்த திலீபனும், மானிடருக்கு ஆதி புருஷனான மனுவும், மகா சிரேஷ்டரான மாந்தாதாவும் இவ்விதம் இருந்தவர்களே. அசுரர்களில் பலிசக்கரவர்த்தியும், தானவர்களில் பிரஹ்லாதனும் ஜீவன் முக்தர்களே. இந்திர ஜாலங்களுக்கு அதிபதியாகிய சம்பரன், சம்சாரமாகிய இந்திர ஜாலத்தையும் கடந்தவனாக விளங்குகிறான். அசுர குருவாகிய சுக்கிராசாரியரும் அவர் சிஷ்யனாகிய புதனும் சதா ஆகாயத்தில் சஞ்சரித்தவண்ணம் பூமிக்குப் பலனைக் கொடுத்துவரும் ஆத்ம ஞானிகளே. தேவ குருவாகிய பிரகஸ்பதியும், தன் பத்னியின் நிமித்தம் சந்திரனிடம் சண்டையிட்டபோதிலும் ஆத்ம ஞானியே. சந்திர, சூரியர்களும் அப்படியே. பிரபஞ்சத்தின் உற்பத்திக்குக் காரணமாகிய பிரம்மாவானவர், ஓய்வில்லாமல் இப்பிரபஞ்சம் விஸ்தரித்துக் கொண்டிருந்தபோதிலும், சலிக்காமல் இதில் ஈடுபட்டே இருக்கிறார். விஷ்ணு, ஈசுவரன், சுப்ரமணியர் இவர்களும் இடைவிடாமல் தங்களுக்குண்டான கர்மங்களைச் செய்தே வருகின்றனர். பிருங்கி என்னும் ரிஷி, ஈசுவர பக்தியால் தன் தேகத்திலுள்ள ரத்த மாமிசம் எல்லாம் தியாகம் செய்தார். ஆத்மத்தில் பரிபூரணமாகலயப் பட்டதனால்தான் இவ்வாறு செய்ய முடிந்தது. மூன்று லோகங்களிலும் சதா சஞ்சாரம் செய்து அவ்விடத்தில் நேரும் விஷயங்களையெல்லாம் கவனித்து வரும் நாரதரும் ஆத்ம ஞானி ஆவர். பிருகு, பரத்வாஜர், சுகர், இங்கிருக்கும் விசுவாமித்திரரும் ஜீவன் முக்தர்களே. இன்னும் எவ்வளவோ ஆயிரக்கணக்கான ஜீவன் முக்தர்கள் நமக்குத் தெரிந்தும் தெரியாம்லும் இருக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களைக் கவனித்துவரலாம். சிலர் ராஜய விஷயங்களைக் கவனிப்பதிலும், சிலர் சம்சாரத்தை நடத்துவதிலும் சிலர் உலக வியவகாரங்களைக் கவனிப்பதிலும். சிலர் நாட்டில் வாழ்வதிலும், சிலர் காட்டிலும் இப்படிப் பலவிதமாக இருக்கலாம். சிலர் இதர ஜனங்களுக்குத் தெரியும்படியும், சிலர் கண்ணுக்குப் புலப்படாமலும் இருக்கலாம். இவர் அனைவர்க்கும் மேலாகிய ஆத்மா எப்பொழுதும் எல்லாமுமாக இருந்து பிரபஞ்சத்தின் விஸ்தரிப்பைத் தாங்கிய வண்ணம் இருக்கிறது.