У нас вы можете посмотреть бесплатно கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kollimalaiarapaleeswarar #Sivantemple #temple #templevlog #histroricalplace #vlogtemple #hindutemple #hindu #tamiltemplevlog #tamilnadutemple #southindia #indiantemple #kollihills #mahadeve #hindutemple #tamilshiva #tamilgod #indinangod #explorer #templevideo #templehistory இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்பெயர் புராண பெயர்(கள்): அறமலை, சதுரகிரி[1] பெயர்: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அமைவிடம் ஊர்: கொல்லிமலை மாவட்டம்: நாமக்கல் மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா மலைவாழ் மக்கள் பள்ளிகள் மேற்கோள்கள்கொல்லிமலை – வரலாறு1 2 கல்வி கொல்லிமலை – வரலாறு கொல்லிமலை – வரலாறு விகாஸ் AI மூலம் உங்கள் வாசிப்பை மேம்படுத்துங்கள் நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும். அறிமுகம் வரலாற்றுக் குறிப்புகள் சுற்றுலாத்தலங்கள் ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி கொல்லிப் பாவைக் கோவில் அறப்பளீஸ்வரர் கோவில் வார சந்தை தாவரவியல் பூங்கா தினத்தந்தி செய்திகள் கொல்லிமலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அறிமுகம் இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். கொல்லி மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார்ப்போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால் தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை. நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவும், கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவும், மொத்தத்தில் 441.4 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டுள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது. நாமக்கல்லிலிருந்து கொல்லி மலைக்கு 43 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்து (Mini Bus) செல்கிறது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. செங்குத்தான இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் (Hair Pin Bend) உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார், வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று. இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று. 2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொல்லிமலைக்குச் செல்ல முக்கியமாக இரண்டு பாதைகள் உள்ளன. ஓன்று நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக கோம்பை காடு என்னும் ஊர் வழியாக செல்ல வேண்டும். கோம்பையிலிருந்து 12 மைல் தூரம் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம். மற்றொன்று கொப்பம்பட்டி வைரிசெட்டிப்பாளையம் வழியாக புளியஞ்சோலை சென்று அங்கிருந்து 5 மைல் தூரம் சென்றபின் மலையேறும் தரைமட்டத்தில் இருந்து 2 மைல் சென்று அறப்பளீஸ்வர சுவாமி கோயிலை அடையலாம். இம்மலை சுமார் 40 சதுர மைல் (280 சதுர கிமீ) நிலப்பரப்பும், 5000 க்கும் மேல் உள்ள ஜனத்தொகையையும், 85 கிராமங்களையும் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்கௌண்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம். அந்தக் கொல்லி மலையில் மரங்களில் பாம்புகள் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம், பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காப்பி, அதிகம் விளைகிறது, மான்களும், மயில்களும் அங்கே சுற்றித் திரியும். கொல்லிமலையில் இருந்து சுவேதா நதியும், கோம்பை ஆறு, அய்யாறு, கூட்டாறு, கருவோட்டாறு, கல்லக்குழியில் பஞ்ச நதி போண்ற ஆறுகள் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி காவிரி ஆற்றில் கலக்கின்றது. கொல்லிமலையில் நீர் ஊற்று நிறைந்த இடங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள குன்றுகளில் தேன் கூடுகளைக் காணலாம். இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்தால் இது கொல்லிமலை என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும் அழைக்கப்படுகிறது.