У нас вы можете посмотреть бесплатно எதிரிகளை வெல்ல சக்கரத்தாழ்வார் வழிபாடு |சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்| Sakkarathalvar Vazhipadu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sakkarathalvar Vazhipadu in Tamil - Chakrathalwar Worship Benefits எதிரிகளை வெல்ல சக்கரத்தாழ்வார் வழிபாடு - சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், அன்றைய தினம் ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி /சக்கரத்தாழ்வார் ஜெயந்தி என கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் வரும் திங்கட்கிழமை ஜூன் 29ம் தேதி ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை அள்ளித்தருபவர் சக்கரத்தாழ்வார். அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவை தான். அவற்றை அழித்து மனஅமைதியை தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது. சனிக்கிழமை இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு . சுபங்களை தருபவர், நீண்ட ஆயுளை கொடுப்பவர். நல்வழி காட்டுபவர். சுதர்சனரை வழிபட்டால் வாழ்வில் எல்லா சங்கடங்களும் நீங்கி நன்மை உண்டாகும். எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும் சக்கரத்தாழ்வாரை, நமது அன்பர்கள் அனைவரும் அவரது ஜெயந்தி நன்நாளில் வழிபட்டு பலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தி வணங்குகின்றோம். சுதர்சன காயத்ரி மந்திரம்: ஓம் சுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தன்னோ சக்ர: ப்ரசோதயாத். Sudarshana Gayatri in English: Om Sudharshanaya Vidmahe Maha Jwalaya Dhimahi Tanno Chakrah: Prachodayath. #aalayamselveer #சக்கரத்தாழ்வார்ஜெயந்தி #மஹாசுதர்சனஜெயந்தி