У нас вы можете посмотреть бесплатно முத்தமிழ் விழா 2022 , காவடி நடனம். Students of Smt Thiriveni Sangar, Natyakshetra или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முத்தமிழ் விழா 2022 , காவடி நடனம். Students of Smt Thiriveni Sangar, Natyakshetra 1 Miss. Tharenya Sriharan 2. Miss. Harshika Sivanesan 3. Miss. Aayahee Muruguchelian 4. Miss. Abisha Thilainathan 5. Miss. Harini Thilainathan 6. Miss. Shivani pirabakaran இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறை மீள் உருவாக்கத்திற்கான முத்தமிழ் விழா 2022 அழகான இனிமையான நிகழ்வுகளுடன் பிப்ரவரி மாதம் இருபதாம் நாள் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வினை அழகு தமிழில் எம் இளையோர் திருமதி அஞ்சு ராமதாஸ் செல்வி அர்ச்சனா இலங்கைநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தார்கள். Baba Luxy நிழல் படங்களை எடுத்திருந்தார். அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர். இவ்விழாவின் மூலம் தமிழ்த்துறைக்கு சேகரிக்கப்பட்ட £6100 நிதி தமிழ்த்துறை தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை மீட்டுருவாக்கம் செய்ய வாழ்த்துகிறோம். குறிப்பாக இலண்டன் தமிழ் நிலைய தமிழ்ப்பாடசாலை, கரோ தமிழ் பாடசாலை,லிவர்பூல் தமிழ் கல்விக்கூடம்,அல்பெர்ட்டன் OFAAL தமிழ் பாடசாலை, சட்பறி தமிழ் பாடசாலை,நாட்டியச்சேத்திரா நடனப் பாடசாலை ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த சிறார்களின் நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. #முத்தமிழ் #விழா #2022 #கிராமிய #சுளகு #நடனம் #காவடி #Thiriveni #Sangar #Natyakshetra #SOAS #Tamil #Studies #University #London உயிருக்கும் மேலான செந்தமிழை, புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டில் குடியேறிய தமிழ் மக்களாக வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) அமைப்பு, ‘இலண்டன் பல்கலைக்கழகம் – SOAS (School of Oriental and African Studies) இன் தெற்காசிய கல்வி கூடத்துடன்’ இணைந்து முன்னெடுத்துச் செல்கிறது. கி.பி. 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட SOAS, இலண்டன் பல்கலைக்கழகம், ஆசிய, ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய படிப்பிற்கு உலகப் புகழ் பெற்ற முன்னணி கல்வி நிறுவனங்களுள் முதன்மையானதாகும். முதன்மை வாய்ந்த 1,50,000 ஆவணங்கள், தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்கள் முதலிய பல சிறப்புகளை உள்ளடக்கிய நூலகத்தினை கொண்டு இலண்டனின் மையப்பகுதியில் இவ்வளாகம் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், பல சிந்தனைச் சிற்பிகளையும், 300-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களையும், தொலைதூரக் கல்வியில் பயில்வோர் உள்பட சுமார் 9,500 மாணவர்களையும் கொண்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகம் பயிற்றுவிக்கத் துவங்கிய 20 உலக மொழிகளில் ‘தமிழும்’ ஓன்று! தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற ‘முதல் ஆங்கிலேயர்’ ஆன M.S.H தாம்சன் (இவர் நம் மறைமலை அடிகளின் மாணவர்), இந்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்ட முனைவர் சான் மார் (Dr.John Marr), சுடூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn) போன்றவர்களால், தமிழ் வகுப்புகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டன. புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் நிதிப் பற்றாக்குறை முதலிய பல்வேறு காரணங்களால் தமிழ்க் கல்வி பயில்விப்பு நலிவுற்று பின்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்ட தமிழ்த் துறையை உயிர்ப்பித்து, சிறந்த அறிஞர்களின் மூலம் செம்மை செய்து, உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஐக்கிய இராச்சியம் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தமது உயர் கல்வி படிப்பில் தமிழை முதன்மை மற்றும் ஆராய்ச்சி பாடமாக எடுத்து இலண்டன் மாநகர் – SOAS யில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.