У нас вы можете посмотреть бесплатно சிவ பஞ்சாட்சரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சிவ பஞ்சாட்சரம்: பாடியவர் : V.M.மகாலிங்கம் தயாரிப்பு : கதிரவன் தமிழ் இசை சிவாயநம என்ற நாமமே உயிருக்குப் பயனாவது. எப்படியெனில், பிறப்பற்ற நிலைக்கு ஒரு உயிரை கொண்டு செல்லக் கூடியது 'சிவாயநம' என்னும் மந்திரம் ஆகும். ஒவ்வொரு சமயமும் இறைவனுடன் உயிர் கலந்து நிற்கும் பேரானந்த நிலையைத்தான் முத்தி என்று கூறுகின்றன. ஓர் உயிரின் பயணமும் பிறப்பற்ற நிலை நோக்கி செல்ல வேண்டுமானால் 'சிவாயநம' என்று ஓதுதல் வேண்டும். சி - சிவம் உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம், உடலில் உஷ்ண தன்மை, தவத்தில் பிரகாசமான ஒளியை தருவிக்கிறது. யோகத்தில் இஷ்ட சித்தியை தரும். மோட்சம் தரும் எழுத்து. பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும். வா - வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி, நோய்களை போக்கும், சஞ்சீவி .உடலில் பிராணன், தவத்தில் உயிர் சக்தியை தருவது, தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது. ய - ஆகாயம், சொல் வர்மம், நோக்கு வர்மம், தொடு வர்மம், இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது, உடலில் உயிர், சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம், ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது, பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது. ந - பூமி, உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது, துஷ்டா பிராப்தத்தை போக்குவது, மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது, தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவியை வசியம் செய்வது. ம - நீர்-ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது, உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன், ஈஸ்வரன், மிருத்யு கால ருத்ரன், உமா தேவி ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது, பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது. *** ஒரு முறை நாரதர் தனது தந்தை பிரம்மனிடம் சென்று சிவாயநம என்பதன் பொருள் என்ன என்று கேட்டார். பிரம்மா நாரதரிடம், "நாரதா அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக் கேள் " என்றார்...நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டார் . நாரதர் இதைக் கேட்டதும் அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. அதிர்ச்சியடைந்த நாரதர் , பிரம்மாவிடம் ஓடிச் சென்று , "தந்தையே சிவாயநம பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள் " என்றார். "நாரதா நீ தவறாக புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் போய் கேள் அது பதில் அளிக்கும்.” என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா. நாரதரும் ஆந்தையிடம் கேட்க, ஆந்தையும் கீழே விழுந்து உயிர் விட்டது. "இது என்ன சோதனை என பதறி வந்த நாரதரிடம் , அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போது பிறந்துள்ள கன்று குட்டியிடம் போய் கேள் " என பிரம்மர் கூற , நாரதரும் கேட்ட பொழுதில், கன்றும் உயிரை விட்டது. திரும்பி வந்த நாரதரிடம், பிரம்மா , "இந்நாட்டு மன்னனுக்கு இன்று ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதனிடம் போய் கேள் . பொருள் நிச்சயம் தெரியும் " என்றார். நாரதரும் கை , கால் நடுங்க குழந்தையிடம் போய் கேட்டார். அந்த குழந்தையோ பேசியது. "நாரதரே ! இந்த மந்திரத்தை கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தை ஆனேன் . அதன்பின் கன்றானேன். இப்போதோ மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்கு தந்தது! இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். " என்று குழந்தை கூறியது. சி என்றால் சிவம். வ என்றால் திருவருள். ய என்றால் ஆன்மா. ந என்றல் திரோதமலம். ம என்றால் ஆணவமலம் . திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசி இருக்கும் ஆன்மா , திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து, பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.... பிறவிப்பிணியில் இருந்து விடுபட சிவயநம என்போம். இறைவனின் திருவடிகளை அடைவோம். பஞ்சாட்சர சிவ மந்திரம் : ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய