У нас вы можете посмотреть бесплатно உண்மையான மகாத்மா………. A TRUE MAHATMA или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நவம்பர் 08. சனி உண்மையான மகாத்மா………. அஷ்டமா சித்திகளை செய்து பிறரை ஏமாற்றும் ஒருவர் ஆத்ம ஞானி அல்ல. சித்திகளில் ஆர்வம் காட்டாமல், தன்னை அறிந்து அதில் நிலை பெற்று, பிறருக்கும் “உன்னையே நீ அறிந்து கொள்” என்று யார் உபதேசிக்கிறாரோ அவரே உண்மையான மகாத்மா. —----------------------------------------------- A TRUE MAHATMA A person who deceives others performing ASTAMA SIDDIS is not a SPIRITUAL SAGE. He who shows no interest in SIDDIS, knows HIMSELF, attains stability in it, and advises others to “KNOW THYSELF” is a TRUE MAHATMA. —----------------------------------------------- ஒருவன் மகாத்மாக்கள் பலரை தரிசனம் செய்திருக்கலாம். அவர்கள் அவனிடம் அஷ்டமா சித்திகளை செய்து ஆச்சரியப்பட செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் மகாத்மாக்கள் அல்ல. அவர்கள் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள செய்யும் வித்தைகளாகும். தங்களுடைய வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள செய்யும் யுக்திகளாகும். தன்னை யார்? என்று அறியாத ஆத்மாக்கள் எவ்வாறு மகாத்மாக்களாக முடியும்? அகந்தை உணர்வு அழிய பெற்று தன்னை உணர்ந்த ஆத்ம ஞானியே மகாத்மாவும் ஆவான். ஏனெனில் ஆத்மா என்பது இரண்டற்ற ஒன்று. ஆத்மா மகாத்மா, பரமாத்மா, என்றெல்லாம் பல ஆத்மாக்கள் இல்லை. இருப்பது ஏக வஸ்துவான ஆத்மா ஒன்றே. தன்னை உணர்ந்த ஆத்ம ஞானி சித்திகளில் ஆர்வம் காட்ட மாட்டார் என்பதை பகவான் ரமணர் உள்ளது நாற்பது பாடலில் தருகிறார். சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே-நித்திரைவிட் டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்று பொய்மை தீர்ந்தார் தியங்குவரோ தேர்ந்திருநீ. எப்போதும் சொந்தமான, இதயத்தில் நித்தியமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை தேர்ந்து அந்த நிலையில் நிற்பதே உண்மையான அழிவற்ற பூரண சித்தி. சித்திகள் என்று சொல்லப்படும் மற்றவை எல்லாம் சொப்பனத்தில் அனுபவிக்கப்படும் சித்திகளுக்கு ஒப்பானவைகளே. சத்தியம் அல்ல. சொப்பனத்தில் அடைந்த சித்திகள் நித்திரை நீங்கி பார்க்கும்போது அவைகள் உண்மையோ! இல்லையே. அது போல்தான் உண்மையான ஆன்ம சொரூபத்தில் நிலைபெற்று அதனால் அஞ்ஞான நித்திரை நீங்க பெற்றவர், ஆன்மாவை தவிர சித்திகள் என சொல்லப்படும் பிறவற்றில் ஆசை வைப்பாரோ?. ஆத்ம விசாரம் செய்து தன்னை ஆத்ம சொரூபமாக உணர்ந்து உறுதியாக அதில் நிலை பெற்றவர்கள், மாயை நீங்க பெற்ற மெய்ஞானிகள். ஆத்மா ஒன்றே என்பதால் அதில் சகல சித்திகளும் அடங்கும். இருப்பினும் மெய்ஞானி ஒருவர் அதில் ஆர்வம் காட்ட மாட்டார். சித்திகளில் ஆர்வம் காட்டுபவர் மெய்ஞ்ஞானியாக மாட்டார். சித்திகளில் ஆர்வம் காட்டாத மெய்ஞானியே உண்மையான மகாத்மாவார். சித்திகளில் ஆர்வம் காட்டாமல் உள்முகமாய் திரும்பி “உன்னையே நீ பார்” என்று யார் சொல்கிறார் அவரே உண்மையான மகாத்மா, சத்குருவும் ஆவார். ஆன்மாவை அடைய வேண்டும் என்று உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் அஷ்டமா சித்திகளை திரும்பிப் பார்க்க மாட்டார்கள். சில போலி குருமார்கள் தன்னை நாடிவரும் சீடர்களை ‘இதை செய் அதை செய்’ என்று அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவார்கள். இதை அடையலாம் அதை அடையலாம் என்று ஆசை காட்டுவார்கள். சகல சீவராசிகளிலும் ஆத்மாவாக பிரகாசிப்பவன் “நானே” என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் உபதேசிக்கிறார். ஆத்மாவே இறை சொரூபமாக விளங்கும் போது, அடைவதற்கு என்ன உள்ளது? இவர்கள் எல்லாம் ஒருவனை அவன் சொந்த ஆத்மாவில் இருந்து தடம்மாற செய்யும் தன்னை உணராத குருடர்கள். ஒரு குருடன் எவ்வாறு மற்றொருவருக்கு வழிகாட்ட முடியும்?. இரண்டற்ற ஏகமாய் உள்ள ஆத்மா ஒன்றே சர்வ சக்தி உள்ளதும், தனக்கு அந்நியமாக ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்த ஆசையற்றவரே மகாத்மாவார். அத்தகைய மகாத்மாவே அஷ்டமா சித்திகள் ஆன்மிக தடைகள் என்பதை உணர்ந்தவர். அவர் தன்னை நாடி வருபவர்களுக்கு ஆன்மாவை நாடும் ஆன்ம வித்தையே உபதேசித்து அருள்வார். அவரே உண்மையான மகானும் சத்குருவும் ஆவார். “அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை யெதுவென்று தான்தேர்ந்தி திராஅ” பகவானின் உள்ளது நாற்பது பாடல் வரிகள். வேதங்கள் நீ தேடும் “அது” எனப்படும் “பிரம்மம் நீயே” என்று உபதேசிக்கின்றன. தன் சொந்த ஆத்மா பிரம்ம சொரூபமே என்று அனுபவமாக உணர்ந்து, தன் அனுபவ உண்மையை, அதைவிட உயர்ந்த சத்தியம், சக்தி வேறில்லை என்று சீடனுக்கு மௌனமாக உபதேசிக்கிறாரோ அவர் சற்குரு, மகாத்மா,பரமாத்மா எல்லாம். சூதுசெய் தென்னைச் போதியா தினியுன் சோதி யுருகாட் டருணாசலா “ஓம் தத் சத்” —------------------------------------------------