У нас вы можете посмотреть бесплатно Kuthambai Siddhar Jeeva Samadhi | Kuthambai Siddhar Life History in Tamil | குதம்பை சித்தர் ஜீவசமாதி или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Kuthambai Siddhar Jeeva Samadhi | Kuthambai Siddhar Life History in Tamil | குதம்பை சித்தர் ஜீவசமாதி Mayiladuthurai Mayuranathar Temple - குதம்பை சித்தர் வரலாறு - குதம்பை சித்தர் - மாயவரம் - மயூரநாதர் கோவில் மயிலாடுதுறை - Google Map Co-ordinates https://goo.gl/maps/VodGqHLkiGn ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. . மயிலாடுதுறையில் வாழ்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அத்தனை சிறப்புக்கள் வாய்ந்த ஊர் மயிலாடுதுறை. நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் கலைகளாய வல்லான் கயிலாய நன் மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே -- திருநாவுக்கரசர் காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார். ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான். குதம்பை நீ வைகுண்டம் வர வேண்டாம்.உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது.நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில் ,இங்கே பல யானைகள் இருக்கின்றன.இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு .உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறன்.இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய்.அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும்.அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும்.அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்றான்.குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது.குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார்.மழை பொழிந்து காடு செழித்து.யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று .ஆழ்ந்து நிலையில் இறைவனை வணங்குகிறரோ ,அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால் இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன. தியானச் செய்யுள்: சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே! குதம்பை சித்தர் பூஜா பலன்கள்: இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்.. 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். 3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும். 4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும். 6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை. குதம்பைச் சித்தர் பதினாறு போற்றிகள்: 1. சிவனை பூசிப்பவரே போற்றி! 2. ஹடயோகப் பிரியரே போற்றி! 3. சூலாயுதம் உடையவரே போற்றி! 4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி! 5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 6. ஜோதி சொரூபரே போற்றி! 7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி! 8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி! 9. நாட்டியப்பிரியரே போற்றி! 10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி! 11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி! 12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி! 13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி! 14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி! 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.