У нас вы можете посмотреть бесплатно கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேஸ்வரர் கோயில் | தாயின் கருவில் மீண்டும் பிறவாத நிலையை தரும் தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள் #சற்குணநாதேஸ்வரர்_கோயில் #மறுபிறவி_நிவர்த்தி_தலம் திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி 126/274) இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 126 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 63வது தலம். இந்திரன் , ருத்ர கணத்தவர்கள் , பிறவிப்பிணி தீர சற்குண மன்னன் வழிபட்ட தலம். எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது. சிவஸ்தலம் பெயர்:-திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது) இறைவன் : சற்குணநாதேஸ்வரர். அம்பாள் : சர்வாங்க நாயகி. தல விருட்சம்: வில்வம். தீர்த்தம்: எம தீர்த்தம். புராண பெயர்: கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி. தற்போதைய பெயர்: கருவேலி மாவட்டம்: திருவாரூர். #மறுபிறவி_இல்லை இத்தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் 'கரு இல்லை' என்ற பொருளில் 'கருவிலி' எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம். தலச்சிறப்பு இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதே ஆகும். எனவே இவ்வூர் இறைவன் 'சற்குணேஸ்வரர்' எனப்படுகிறார். அம்பாள் 'சர்வாங்க சுந்தரி' என்றழைக்கப்படுகிறார். பொது தகவல் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம்.இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள். இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை.இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம்.இது கோவிலுக்கு வெளியே உள்ளது.கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும். தலபெருமை முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது.அவள் மறுபிறவியில், இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள்.அது போலவே, இத்தலத்து இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை.அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள்.இதனால் தான் இவ்வூர் "கரு இல்லை'' என்ற பொருளில் "கருவிலி'' எனப்பட்டது.காலப்போக்கில் கருவேலி என மருவியது.கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம். இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் "சற்குணேஸ்வரர்'' எனப்படுகிறார்.அம்பாள் "சர்வாங்க சுந்தரி'' எனப்படுகிறாள். தல வரலாறு சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது.யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான்.அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள்.தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன.தேவர்கள் நடுங்கினர்.அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர்.நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன.பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார். உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் திருமால் கூறினார்.இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது. திருவிழா மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை. பிரார்த்தனை🍁 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை.அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். அமைவிடம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கூந்தலூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து கோயில் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9442932942 கோயில் Google map link https://maps.app.goo.gl/SseJM9PwYJRe6... if you want to support us via UPI id k.navaneethan83@ybl Join this channel to get access to perks: / @mathina தமிழ்