У нас вы можете посмотреть бесплатно மங்கள ரூபிணி | Mangala Roopini with Lyrics Tamil | Aadi Tuesday Special Amman Song | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Mangala Rupini Madhiyani Soolini - Tamil Lyrics Vocal : Trivandrum Sisters Music : Sivapuranam D V Ramani Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals #ammansongs#mangalaroopini#aadiammansongs #tamildevotionalsongs#vijaymusicalkhanvel பாடல் : மங்கள ரூபிணி மதியணி சூலினி - தமிழ் பாடல்வரிகள் குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள் இசை : சிவபுராணம் D V ரமணி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள் Listen to this song on spotify using the link below : மங்கள ரூபிணி | Mangala Rupini - https://open.spotify.com/track/5bRqZY... பாடல்வரிகள் : மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்திடுவாள் தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பண பண பம்பண பறையொளி கூவிட பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய் கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய் சுடர்தரு அமுதே சுருதிகள் கூறு சுகமதை தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி