У нас вы можете посмотреть бесплатно இந்தியாவுக்கு மிக அருகில்.. | கடலுக்கு நடுவில் ஒரு அற்புதக் கோவில் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்தியாவுக்கு மிக அருகில்.. | கடலுக்கு நடுவில் ஒரு அற்புதக் கோவில் | #ChummaOruTrip | #jaffnavlog #chummaorutrip #jaffnavlog #tamilculture #jaffnakovil #nainativu #tamilnadu #tamilvlog #tamilnaduvlog சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே. சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இத்தீவின் மறுபெயர்களாவன, நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் என்பனவாம். ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர். நாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயன என அழைக்கப்பட்டிருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது. இத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வட கீழ் திசையில் நாகபூசணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டுவித்தாரெனவும் மதுரை வைசியர்களிடமிருந்து பெற்ற ஏடுகள் கூறுகின்றன. நயினார்பட்டார் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தன் ஞாபகத்தைப் பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார். காலப்போக்கில் நயினார்பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரினதும் செல்வாக்கும் விருத்தியடைய ‘நாக’ என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று. இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாகபூசணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன. நயினார்பட்டரின் 20 ஆம் தலைமுறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூசணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினார்தீவு என்ற சொல்லில் ‘ர்’ விடப்பட்டு நயினாதீவு ஆகியது. நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது. ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன. அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788 இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலயத்தில் 1951, 1963, 1983, 1998, 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களில் 1958, 1986 ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது. இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ்டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் 1.4.1998 முதல் நடைபெறுகின்றது. வன்னியும் வேம்பும் இவ்வாலயத்தின் தல விருட்சங்களாக விளங்குகின்றது. 1986 ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டு பேர் கொண்ட அறங்காவலர் சபையினர் இவ்வாலயத்தை பரிபாலனஞ் செய்து வருகின்றனர். History Credit: www.http://nainathivu.com