У нас вы можете посмотреть бесплатно மதுரை உணவைத் தேடி ஒரு பயணம் 🥰 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மதுரை உணவைத் தேடி ஒரு பயணம் 🥰😜🫶👌👍🙏 தொழில் ரீதியாக மதுரை செல்ல வேண்டிய ஒரு சூழல். அந்தப் பயணத்தில், வழியிலிருந்த சில உணவகங்களில் ருசித்து ரசித்த அனுபவத்தை இங்கே 😜👍🙌 இப்படிப் பயணிக்கும் போதெல்லாம் புதிய இடங்களில் நமக்கு வழிகாட்டி “Google” அல்லது “Instagram” பிரபலங்களின் வீடியோக்கள்தான். அதைப் பார்த்துத்தான் அந்த புதிய உணவகங்களைத் தேர்ந்தெடுத்தோம். இதுவும் அதுபோன்றதே 🙏 புரட்டாசி விரதம் முடிந்தவுடன் இந்த பயணமும் அமைந்ததால், 100% Pure Non-Veg என்ற இலக்குடன் புறப்பட்டோம் 🙌🤞😜 திண்டுக்கல் – காலை 9.00 மணி ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்: இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாத அளவுக்கு குறுகலான சந்தில் அமைந்த சிறிய உணவகம். பழைய செட்டிநாடு வீட்டில் நடத்தப்படுவது இதன் தனிச்சிறப்பு. காலை சிற்றுண்டியிலேயே அசைவம் – வீட்டு முறை சமையல். சாரல் மழை, தல வாழை இலையில் ஆவி பறக்கும் மென்மையான இட்லி, கூடவே சுடச்சுட வந்த வெள்ளை மட்டன் சாப்ஸ் குருமா, இரண்டு சட்டினி… ஆஹா! அந்தந்த ஊருக்கே உரிய தனிச் சுவை இதிலும் இருந்தது 👍🙏 நாம் ரசித்து ருசித்த உணவு: • மட்டன் சாப்ஸ் வெள்ளை குருமா • பூப்போல இட்லி • மட்டன் சாப்ஸ் கலந்த கலக்கி • நெய் ரோஸ்ட் மதுரை – காலை 11.30 மணி மதுரை ஃபேமஸ் – விளக்குத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா இதை மட்டும் “Must Try!” சொல்லலாம். மதுரையில்தான் கிடைக்கும் ஒரு தனிச்சிறப்பான குளிர்பானம் 😋 ஆதிகாலத்து ஒரிஜினல் நெய்மிட்டாய் கடை: வீட்டுக்கு வெறும் கையோடப் போக முடியாது இல்லையா 😅 அதனால் கொஞ்சம் காரம், கொஞ்சம் இனிப்பு வாங்கினோம். அங்கு அல்வா அளவோடு சாப்பிடலாம் — அருமை 🤞 நாம் ரசித்து ருசித்த உணவு: • கோதுமை அல்வா • திரட்டுப்பால் அல்வா மதிய உணவு – மதுரை கோனார் மெஸ் மதுரை என்றாலே அசைவம், அசைவம் என்றாலே மதுரை 😋 மிகவும் பிரபலமான ஹோட்டல் இது. பார்க்கிங் வசதி இல்லாது, மெயின் ரோட்டிலே அமைந்த சிறிய இடம் — கீழ் தளத்தில் 10 பேருக்கு, மேல் தளத்தில் 20 பேருக்கு இடம். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற அசைவ உணவகம். வெளியூர்வாசிகளுக்கு சற்று நெரிசல், சிரமம் இருக்கலாம். நாம் ரசித்து ருசித்த உணவு: • மட்டன் பிரியாணி • மட்டன் கோலா உருண்டை • மட்டன் சஆப்ஸ் ஃப்ரை இரவு உணவு – மதுரை மீனாட்சி பன் பரோட்டா கடை மதுரை தூங்கா நகரம் என்பர், அந்த நகரின் இரவைக் காண வேண்டுமானால், பொடிநடையாக தெப்பக்குளம் நோக்கி நடந்தால் இந்த பன் பரோட்டா கடை கிடைக்கும். அங்குள்ள “Food Street” கூட சூப்பர்! மதுரை மக்கள் கண்டுபிடித்த “பன் பரோட்டா” — சுடச்சுட பிச்சி போட்டு அசைவ குருமாவில் ஊறவைத்து சாப்பிட்டால்… Must Try! 🫶 நாம் ரசித்து ருசித்த உணவு: • இலை கிழி பரோட்டா • பன் பரோட்டா • நாட்டுக்கோழி பிச்சி போட்ட ரோஸ்ட் மதுரை திருவிழாவுக்கும் அசைவ உணவிற்கும் சிறந்தது என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை 😋 ஆனால், என்னைப் போல புதிய இடங்களை ஆராயும் பயண பிரியர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — இங்கே கூறிய ஓட்டல்கள் உள்ளூர் மக்களுக்கே பொருந்தும். பார்க்கிங் வசதி குறைவு, இடம் குறைவு போன்ற சிரமங்கள் இருக்கும். மண் சார்ந்த, ஊர் சார்ந்த உணவை விரும்புபவர்கள் முயற்சி செய்யலாம்; இல்லையெனில், நீங்கள் செல்லும் பாதையிலேயே பல பிரபலமான வசதியான உணவகங்கள் உள்ளன 👍 எந்த ஊரு உணவு எப்படி இருந்தாலும் எங்க ஊரு உணவு எங்களுக்கு The Best🙌🫶🏻 எங்க ஊர் (Krishnagiri) பக்கம் வந்தீங்கன்னா சோதனை முறையில் நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய சில உணவுகள்🤞 1. ஆரிய பவன் - சூடான இட்லி, சாம்பார் வடை 2. விருந்தவன் - மதிய உணவு / காலை சிற்றுண்டி (சிறுதானியம் சார்ந்த இயற்கை உணவு) 3. மங்களம் - அசைவ உணவுக்கு 4. சேகர் களி Hotel - அசைவம் மதிய உணவு மட்டும். 5. ARS வாசவி Cafe காலை சிற்றுண்டி அனைத்தும் ஒரு அனுபவமே 🙏❤️