У нас вы можете посмотреть бесплатно எறும்புகள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எறும்புகள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் இவ்வுலகத்தில் ஊர்ந்து திரியும் விலங்கினங்களும் மற்றும் பறவைகளும் சமுதாயங்களாக (Communities) வாழ்கின்றன என்று அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக ஊர்வனவற்றில் எறும்பை எடுத்துக் கொண்டால், இவைகள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்காக அவைகளுக்கு சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் பறவைகளும் தனித்தனி சமுதாயங்களாகவே வாழ்வதாக கூறுகிறார்கள். அவைகள் தங்களுக்குள் பேசி மகிழ்கின்றன, விளையாடுகின்றன, அன்பு செலுத்தி காதல் செய்கின்றன, உழைத்து, வேட்டையாடி தங்கள் குடும்பத்தை, குஞ்சுகளை காப்பாற்றுகின்றன. மேலும் பறவைகள் மிகவும் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பெற்றுள்ளன. சில கடல் பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பறந்து சென்று இரை தேடிவிட்டு, பிறகு தங்களின் இனப்பெருக்கத்திற்காக தாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அவைகள் சென்ற அதே பாதையிலேயே ஒவ்வொரு ஆண்டும் திரும்பி வருவதாக பறவைகளின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பறவைகளும் விலங்கினங்களும் மனதர்களைப் போலவே தகவல் பரிமாற்றங்களைச் செய்வதோடு சமுதாயங்களாக வாழ்ந்து வருகின்றன. எறும்புகள் பற்றிய அதிசயத் தகவல்கள் சில : 1, அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும் , வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும் , ஆண் எறும்பு சில மாதமும் உயிர்வாழ்கின்றன . (பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது ) 2, ஒரு எறும்பு கூட்டத்தில் ( கூட்டில் அல்லது புற்றில் ) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன 3, ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும் . அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை . 4, எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் ( 2 அங்குலம் ) வரை உள்ளன . 10000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம் , பங்கஸ் , தேன் என பல வகைகளில் அடங்கும் . 5, மிகவும் சிறந்த மோப்ப சக்தி ( வாசனை நுகரும் சக்தி ) , கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சுவாசப்பைகள் இல்லை . 6, எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன . 7, எறும்பு பற்றிய கற்றல் ( ஆராய்ச்சி ) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது . 8, எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது . 9, உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட்டம் அமேசான் காட்டில் இருப்பதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன . 10, மிகவும் திடகாத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது . 11, குடியிருப்பு இடங்களான நிலம் , மரம் , நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகசிறந்த உயிர் தப்பி வாழும் ( SURVIVAL ) உயிரினங்களில் முக்கியமானதாகவும் உள்ளது . 12, எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு , தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு , தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்களாக உள்ளன. 13, நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு. நிலநடுக்கத்தை முன்கூட்டியே எறும்புகள் அறியும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 14,உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது. மிகச்சிறிய உயிரினமான எறும்பிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. @naturetamil7395 #tamil #tamilgeneralknowledgequestionswithanswers #tamilnews #generalknowledgetamilquestions #naturetamil #tamilquiz #tamilstatus #generalknowledge #nature #news #animal #environment #life #service #world