У нас вы можете посмотреть бесплатно முருகன் வேல் மாலை | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முருகன் வேல் மாலை இயற்றியவர் : துரை நாகராஜன் பாடியவர் : தன்யஸ்ரீ இசை வடிவம் : கண்மணிராஜா ஒளிப்பதிவு : கோபி ஒலிப்பதிவு : விஜயகுமார் ஒருங்கிணைப்பு : சுப்ரமணியன் நிர்வாகத் தலைமை : விஜயஜெயந்தி முருகன் வேல் மாலை பைம்புனல் நடுவினில் பங்கயம் மீதினில் பகலவன் ஒளியென வந்தவனே கார்த்திகை பெண்களின் கண்மணி எனவே கனிவுடன் வளர்ந்த கனியமுதே பார்வதி அள்ளி அணைத்திட ஒன்றாய் ஆகியே நின்ற அறுமுகனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே காண்பவர் கண்கள் இமைத்திட மறுக்கும் கலையழகுடனே திகழ்பவனே தத்தித் தவழ்ந்து செய்யும் குறும்பை தாயும் ரசித்து மகிழ்ந்தனரே கண்ணொரு அழகு கையொரு அழகு முழுதாய் கண்டவர் யார் எவரோ சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே மின்னலை நகையாய் மேனியில் அணிந்து கன்னம் குழிவிழ நகைப்பவனே கொடுமையை அடக்கிட குழந்தையின் வடிவில் குமரன் பெயருடன் வளர்ந்தவனே சீர்மிகு சிக்கலில் வேலது வாங்கியே சிறப்புகள் செய்த கோமகனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே நாரத முனிவர் செய்திட்ட பிழையால் தோன்றிய ஆட்டுக் கடாவினையே அடக்கியே தனது வாகனமாக்கி மூன்று உலகையும் ஆண்டவனே ஆணவ பிரம்மனை ஓதுக பிரணவம் கேள்வியால் சிறையில் அடைத்தவனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே பிரம்மனை விடுதலை செய்திடச் சொன்ன தந்தைக்கு குருவாய் இருந்தவனே உருத்திரர் அங்குசம் அம்புடன் தண்டத்தை படைக்கலமாக்கிக் கொண்டவனே யுகம்யுகமாக அசுரர்கள் பிடியில் வதைபட்ட அமரரை காத்தவனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே தேவ தச்சன் நிறுவிய நகரது திருச்செந்தூரில் எழுந்தவனே சிவனை வேண்டியே உருத்திர பாசு பதமெனும் வலிமை அடைந்தவனே வீர பாகுவை தூதனாய் அனுப்பி நீதியை காத்து நின்றவனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே அறுமுகன் வழங்கிய வாய்ப்பினை ஏற்றிட மறுத்தான் சூர பதுமனுமே அழிவுக்கு வழியை அவனே வகுத்து அறுமுகச் சிவனை எதிர்த்தனனே வேலின் திறத்தை அறியும் வாய்ப்பை அழிவின் விளிம்பில் பெற்றனனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே காந்தள் மலரை சூடியக் கருணை பெருங்கடல் எங்கள் வேலவனே ஒளியுடன் கையில் இருக்கும் வேலது ஒன்பது மலைகளை துளைத்திடுமே எதிர்த்தவர் உயிரை குடித்தபின் குழந்தைபோல் குமரன் கையில் தவழ்ந்திடுமே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே பூக்களைக் கிள்ளி பறிப்பது போலவே அரக்கர்கள் தலையைக் கொய்திடுமே புயலது போலவே புழுதி பறக்க போர்க்களம் புகுந்து வென்றிடுமே விதியினை எழுதும் மதியின் வடிவம் வேலின் வடிவில் இருக்கிறதே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே மாயாபுரியில் தாரகன் மாண்டான் மாயம் புரிந்தது வேல்த்திறனே கிரவுஞ்ச மலையை துளைத்து அமரரை மீட்டு வந்ததும் வேல்த்திறனே பானுகோபனை பயங்கொள்ளச் செய்து புலம்பிட வைத்ததும் வேல்த்திறனே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே தயிரினுள் புகுந்து வெண்ணெய்யை பிரிக்க கடையும் மத்தினை ஒத்ததுபோல் கடலினுள் மறைந்த அசுரர்கள் சேனையின் உயிரினை பிரித்து எடுத்ததுவேல் பகைவர்க்கு எமனாய் பக்தருக் குறவாய் பாய்ந்து வந்து நின்றிடும்வேல் சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே ஆழ்கடல் புகுந்து நீள்மரம் எனவே நின்ற அச் சூரனை கொன்றதுவே வெல் எனும் சொல்லே வினையால் நீண்டு வேலென மாறிக் கொல்கிறதே வேலை வணங்கிட ஞானமும் யோகமும் வாழ்வில் ஒன்றாய் சேர்ந்திடுதே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே வேலுடன் மயிலும் சேவலும் இணைந்து காவல் துணைநலம் சேர்த்திடுமே அடியவர் மனநிலை அறிந்து மயிலும் தரிசனம் தந்து காத்திடுமே அச்சம் அகன்றிட இச்செகம் புலர்ந்திட சேவலும் செவ்வேள் என்றிடுமே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே விடுதலை பெற்ற அமரர்கள் முருகனை மருமகன் ஆக்கிட விரும்பினரே திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கரத்தினை பற்றிட இசைந்தான் முருகனுமே இருமணம் புரிந்திட்ட முருகனின் வாழ்வில் முன்கதை ஒன்றும் இருக்கிறதே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே பிரணவத்தின் பொருளை அகத்தியர் அறிய உரைத்தான் முருகக் கடவுளுமே அவனது அழகிலே மனதினை கொடுத்தனர் திருமால் புதல்வியர் இருவருமே இனியொரு பிறப்பிலே இருவரை மணப்பேன் வரமது தந்தான் முருகனுமே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே 15 ஆனந்த வல்லியே இந்திரன் மகளாய் அமரர்கள் உலகில் வளர்ந்தனளே சுந்தரவல்லியோ வள்ளிக் குறத்தியாய் வளர்ந்தனள் குறிஞ்சி நிலத்தினிலே தணிகை மலையிலே காதலின் கரம்பற்றி வாக்கினை காத்தான் முருகனுமே சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே சென்னிறம் கொண்டவன் என்பதால் முருகனை சேயோன் என்று சொல்லிடுவார் சித்தியை வழங்கி சித்தம் தெளிய வைப்பதால் சித்தன் என்றிடுவார் சங்கம் வளர்த்த செந்தமிழ் தந்ததால் சங்கத் தலைவன் ஆகிடுவான் சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே வேற்படை உடையவன் என்பதனாலே வேலவன் என்ற பெயர் கொண்டான் வலிமை கொண்ட தோளினை கொண்டதால் கந்தன் என்னும் பெயர் பெற்றான் சிவனுக்கும் குருவாய் இருந்தவன் அதனால் சிவகுரு என்றே சிறப்பித்தார் சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே எங்கும் நிறைந்த இன்பத்தின் வடிவே சிவமே ஆகி நின்றதுவாம் தீமையை அழித்திட தீப்பொறியாக சிவனே வந்தார் முருகனுமாய் முருகனும் சிவனும் ஒன்றே என்பது முதிர்ந்த ஞானத் தத்துவமாம் சரவணபவ எனும் மந்திரம் சொல்லிட சகல நலன்களும் வாய்த்திடுமே Kovil Dharisanam Instagram link : https://www.instagram.com/tv/Cb8EQn0h... Kovil Dharisanam Facebook link : https://fb.watch/ctl4TbGuvr/