У нас вы можете посмотреть бесплатно Immuttum Jeevan Thantha ||Tamil ChristianKeerthanai ||VedanayagamSastriar ||SastriarMrs.Sarah Martin или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Immuttum Jeevan Thantha Album : Raja Raja Pidha Lyric : Sangai Vedanayagam Sastriar Introduction : Prof.Martin Devaprasath Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin Music : Clement V. Sastriar Editing : D.Karthikeyan Digital on : D.K.Enterprises Produced by: Prof.Martin Devaprasath, The Matins பாடல் வரிகள் இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். — இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். —- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம், வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் — இம்மட்டும் 3. பரமதற்கு நேராக வர நடக்கிறதற்காக பல நாளும் தெய்வாவியால் ஆளும் தரம தாலத்தியந்த பணிவதாய் கேட்டு வந்த சகல வரங்களையும் தாரும் குருமாநரையை கொண்டு திறமாய் வேதநாயகன் குணம் தரும் பதமிணங்க வன் புகு வணங்க வந்தெம்மை மணம் செய் தன்புற பாடலின் பொருள் பல்லவி நம்மை மீட்க வந்தவர் . தம்மையே பலியாகத் தந்தார். இதனால் நன்மை கிடைத்தது. அற்புதமாக அது வந்தடைந்தது சரணங்கள் 1. காலங்கள் சொல்லைப் போல கழிந்து போகும். அது தண்ணீரைப் போல வடிந்து விடும். கனவைப் போல ஒழிந்து விடும் . இளமை மறைந்துவிடும். ஆற்றல் குறைந்து போகும். காரணம் இப்பூவுலக வாழ்வு நிலையற்றது. இவ்வாழ்வு வரைந்து வைத்த பொம்மைப்போன்றது. நீர்க்குமிழியையும் புகையையும் போன்றது. இத்தகைய நிலையற்ற உலகத்தின் தலைவர் நம்மை தேடிவந்து அருள் மொழிகளை எடுத்துச் சொல்லி அன்புடன் அணுகுகின்றார் 2. பலவகைப்பட்ட துன்பங்கள் பயங்கள் ஆகியவற்றைக கடந்து உயர்வான பாதையில் தொடர்ந்து நடந்தோம், பலம் நிறைந்த தீமைகளை வென்றதோடு, பலவீனபடுத்தும் ஆசையையும் கொன்றுவிட்டோம். வஞ்சகரின் பகைமைக்குத் தப்பிவிட்டோம், கலி என்று சொல்லப்படுவதை எல்லாம் தாண்டி ஆண்டவரின் மீட்பைக் கண்டோம். உலர்ந்த உள்ளத்தோடு கேட்டின் பாதையில் ஒரு நொடிப்பொழுது தவறினோம் எனினும் தெளிந்த வழியில் நடக்கிறோம் 3. பரலோகத்தை சென்றடைய வேண்டிய வழியில் செல்ல ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியின் ஆளுகை என் வாழ்வில் வேண்டும். என் தகுதிக்கு ஏற்ற எல்லா விதமான தாலந்துகளையும், நான் தாழ்மையோடு உம்மிடம் கேட்டதையும் எனக்கு தாரும். எனக்கு ( வேதநாயகன் ) போதிக்கிற என் குருக்கள் எல்லோரின் நல்லாலோசனைகளையும் நான் கேட்டு திறமையாய் உம்மை பாடுகின்றேன். உம் குணம் எனக்கு நீர் தர அதை நான் பெற்றுக் கொண்டு, உம்மையே நான் வணங்க நீர் என்னை ( திருச்சபை ) அன்புக் கூர்ந்து மணந்தீர்