У нас вы можете посмотреть бесплатно நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்கும் ரேவதி நட்சத்திரம் |Rishabhanantha Astrologer|Revathi Natchathiram или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#rishabanandhar #revati #natchathirapalan #bakthiinfinity #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்கும் ரேவதி நட்சத்திரம் |Rishabhanantha Astrologer|Revathi Natchathiram -------------------------------------------------------------------------- கும்பகோணத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது நாதன் கோவில். விண்ணகரம் என்ற பெயர் வைகுண்டத்தைக் குறிக்கும். விண்ணகரம் என்று பெயர் கொண்ட மற்ற திவ்யதேசங்கள் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவை. கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று திப்பிராஜபுரம் அருகில் மேற்கே செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து இன்னொரு வழியும் இருக்கிறது. இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பழையாறை என்ற ஊர் அமைந்துள்ளது. இது சோழர்களின் தலைநகராக வழங்கிய ஊராக இருக்கலாம். ஆனால் இப்போது ஒரு குக்கிராமமாகத்தான் காட்சி தருகிறது சிவபெருமானின் வாகனமான நந்தி ஒருமுறை விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றபோது, அங்கே துவாரபாலகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், துவாரபாலகர்களின் சாபத்துக்கு ஆளானார். அதனால் நந்திக்கு உடல் முழுவதும் வெப்பம் ஏற்பட்டது. தன் சாபத்தைப் போக்கிக்கொள்ள அவர் சிவபெருமானின் யோசனைப்படி செண்பகவனம் என்ற இடத்தில் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார். விஷ்ணு அவருக்குக் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. இந்த ஊர் நந்திபுரம் என்று பெயர் பெற்றது. நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இதற்கு நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மகாலக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் தான் இடம் பெற வேண்டும் என்று வேண்டி செண்பக வானம் என்ற இந்த இடத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். திருமகளின் நாதனாகப் பெருமாள் இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார் என்பதையும் நாதன் கோவில் என்ற பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம். மூலவர்: ஸ்ரீனிவாசன். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் உற்சவர்: ஜகந்நாதன். தாயார்: செண்பகவல்லி. பிரகாரத்தின் இறுதியில் பெருமாளை நோக்கியபடி கிழக்கு நோக்கி தனிக்கோவில் நாச்சியாராக அமர்ந்திருக்கிறார். விமானம்: மந்தார விமானம் புஷ்கரணி: நந்தி புஷ்கரணி. கர்ப்பக்கிருகத்தில் பிரம்மாவும், நந்தியும். பெருமாளை வணங்கியபடி இருக்கிறார்கள் . மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும், உற்சவர் பெயரிலேயே இந்தக் கோவில் ஜகந்நாதர் கோவில் என்றும், நாதன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வாரால் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்து பாடல்களில் பெருமாளை கிருஷ்ணனாகவும், அடுத்த ஐந்து பாடல்களில் ராமனாகவும் நினைத்துப் பாடி இருக்கிறார். தொலை பேசி : 0435 2417575 / +91 98430 95904 / +91 94437 71400 --------------------------------------------------------------------------- ஓம் நமோ நாராயணாய For Business : Email : [email protected]