У нас вы можете посмотреть бесплатно திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில் Thiruppavai Pasuram 23 #76 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்பாவை பாசுரம் 23 ‘மாரி மலை முழைஞ்சில் Thiruppavai Pasuram 23 #76 மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23) பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம். விளக்கம்: எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள். உண்மை! “பெரிதினும் பெரிது கேள்” அல்லவா? Just as the fierce lion crouching in sleep inside a mountain-den during rains on becoming awake, open its fire-emitting eyes, raising its mane and shaking all over, comes out with loud roar and steps out majestic way, even so, may you the lord of enchanting bluish hue as that of the kaya-flower emerge from your holy shrine and come out, blessing us by your gait and be seated on the perfectly suited and well deserving throne and then you may inquire us the purpose of our visit and grace us.