Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



குதம்பைச் சித்தர் பாடல்கள் 6 | Kudhambai | Siddhar songs | Mathiraja | TKS Matric | Siravai Adheenam

101: பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு லங்கோ டேதுக்கடி குதம்பாய் லங்கோ டேதுக்கடி? 102: தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு நாடி வருவதுண்டோ? குதம்பாய் நாடி வருவதுண்டோ? 103: போம்போது தேடும் பொருளில் அணுவேனும் சாம்போது தான்வருமோ? குதம்பாய் சாம்போது தான்வருமோ? 104: காசினிமுற்றாயுன் கைவச மாயினும் தூசேனும் பின்வருமோ? குதம்பாய் தூசேனும் பின்வருமோ? 105: உற்றார் உறவின ஊரார் பிறந்தவர் பெற்றார்துணை யாவரோ? குதம்பாய் பெற்றார்துணை யாவரோ? 106: மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப் பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய் பொய்ப்பணி ஏதுக்கடி? 107: விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி? 108: சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள் யானையும் நில்லாதடி! குதம்பாய் யானையும் நில்லாதடி! 109: செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம் தங்காது அழியுமடி! குதம்பாய் தங்காது அழியுமடி! 110: கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம் கூடவே வாராதடி! கும்பாய் கூடவே வாராதடி! 111: நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால் செல்வன் நிச்சயமே குதம்பாய் செல்வன நிச்சயமே. 112: செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும் எய்த வருவனவே குதம்பாய் எய்த வருவனவே. 113: முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்தியும் பின்வருமே குதம்பாய் பத்தியும் பின்வருமே. 114: இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது நிச்சய மாகுமடி குதம்பாய் நிச்சய மாகுமடி. 115: வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால் நல்ல துறவாமடி குதம்பாய் நல்ல துறவாமடி. 116: ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற ஓசையைக் கேட்டிலையோ குதம்பாய் ஓசையைக் கேட்டிலையோ? 117: தேக்கிய ஆசையைச் சீயென்று ஒறுத்தோரே பாக்கிய வான்களடி குதம்பாய் பாக்கிய வான்களடி. 118: இன்பங்கள் எய்திட விச்சை உறாதார்க்குத் துன்பங்கள் உண்டாமடி குதம்பாய் துன்பங்கள் உண்டாமடி. 119: துறவிகள் ஆளாசை துறந்து விடுவரேல் பிறவிகள் இல்லையடி குதம்பாய் பிறவிகள் இல்லையடி. 120: கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல் நல்ல விரதமடி குதம்பாய் நல்ல விரதமடி.

Comments