У нас вы можете посмотреть бесплатно இந்தியா கையில் புதிய ஆயுதம்... பாகிஸ்தானுக்கு எமனே இதுதான் Pinaka LRGR 120 | Ind vs Pak | DRDO | RAW или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சக்தி வாய்ந்த ராக்கெட் குண்டை இந்தியா சோதனை செய்து அதிர வைத்துள்ளது. Pinaka Long Range Guided Rocket 120 என்பது தான் இந்த ராக்கெட் குண்டு பெயர். சுருக்கமாக பினாகா எல்ஆர்ஜிஆர் 120 என்று நம் ராணுவம் சொல்கிறது. இதை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே இந்தியா தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட இது ஒரு ஏவுகணை மாதிரி தான். நீண்ட தூரம் பறந்து சென்று எதிரிகள் இலக்கை தூள் தூளாக்கும் சக்தி கொண்டது. பினாகா எல்ஆர்ஜிஆர் 120 ராக்கெட் குண்டை இப்போது தான் முதல் முறையாக இந்தியா சோதித்துள்ளது. முதல் சோதனையே வெற்றி அடைந்து விட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் தான் பினாகா ராக்கெட் குண்டின் முதல் சோதனை நடந்தது. ஏவி விட்ட இடத்தில் இருந்து சரியாக 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த இலக்கை மிகத்துல்லியமாக தகர்த்தது. ராக்கெட் குண்டின் வேகம், தாக்கும் திறன், துல்லிய தன்மை அனைத்தும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. முதல் சோதனையே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் நிலையில் பினாகா எல்ஆர்ஜிஆர் 120 ராக்கெட் குண்டுகள் விரைவில் நம் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக பாகிஸ்தானுக்கு இது சிம்ம சொப்பனமாக விளங்கும். காரணம், இந்த வகை ராக்கெட் குண்டின் முக்கிய நோக்கமே எதிரி நாட்டின் பீரங்கி, கவச வாகனங்களை தகர்ப்பது தான். அந்த வகையில் எல்லையில் பாகிஸ்தான் நிலை நிறுத்தும் பீரங்கி படையை பினாகா குண்டுகள் சிதைத்து விடும். 120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் என்பதால், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சேதத்தை விளைவிக்க முடியும். பினாகா ரகத்தில் ஏற்கனவே பினாகா மார்க்-1, பினாகா மார்க்-2 ராக்கெட் குண்டுகள் உள்ளன. முதன் முதலில் 1990-களில் பினாகா மார்க்-1 ராக்கெட் குண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்ததால் 1999ல் நடந்த கார்கில் வாரில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. நல்ல ரிசல்ட் கிடைத்ததால் பினாகா மார்க்-1 வகை ராக்கெட் குண்டுகளை பெரிய அளவில் இந்தியா பயன்படுத்த ஆரம்பித்தது. அதன் பிறகு தான் பினாகா மார்க்-2 வகை குண்டுகளையும் தயாரித்தது. பினாகா மார்க்-1 ராக்கெட் குண்டை வைத்து 40 கிமீ தூர இலக்கை தாக்க முடியும். பினாகா-2 ராக்கெட் குண்டு 75 கிமீ வரை பறந்து சென்று அடிக்கும். ஆனால் இவற்றை எல்லாம் விட சக்தி வாய்ந்த பினாகா எல்ஆர்ஜிஆர் ராக்கெட் குண்டு, 120 கிலோ மீட்டர் பறந்து சென்று ருத்ரதாண்டவம் ஆடக்கூடியது. இது Guided வகையை சேர்ந்தது என்பதால், எதிரி இலக்கை குறித்து வைத்து விட்டு அதை துல்லியமாக சிதைக்க முடியும். பினாகா ரக ராக்கெட் குண்டுகளை ஏவ Pinaka Multi Barrel Rocket Launcher இருக்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்தது. அனைத்து வகை பினாகா குண்டுகளையும் இதன் மூலம் ஏவி விடலாம். இதில் எதிரி நாடுகளை கண்காணிக்கும் ராடார் வசதி உண்டு. இந்த லாஞ்சரில் இருந்து வெறும் 44 நொடியில் 6 ராக்கெட் குண்டுகளை ஏவி விட முடியும். அதே போல் எதிரி நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, எளிதில் இவற்றை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சென்று விட முடியும். பினாகா நீண்ட தூர ராக்கெட் குண்டு சோதனை வெற்றி பெற்ற நிலையில், அதற்காக உழைத்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். #PinakaLRGR120 #IndiaVsPakistan #DRDO #RAW #IndianDefense #DefenceTechnology #MilitaryStrength #ArtillerySystems #BorderSecurity #NationalSecurity #DefenseResearch #IndianArmy #DefenseNews #PakistaniMilitary #StrategicDefense #WeaponSystems #IndigenousDevelopment #DefenseInnovation #CrossBorderTensions# #PinakaLRGR120 #IndiaVsPakistan #DRDO #RAW #IndianDefense #DefenceTechnology #MilitaryStrength #ArtillerySystems #BorderSecurity #NationalSecurity #DefenseResearch #IndianArmy #DefenseNews