У нас вы можете посмотреть бесплатно சிவபெருமான் சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த ஸ்தலம் Oondreeswarar Temple Poondi | ஊன்றீஸ்வரர் கோவில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடல் பெற்ற ஸ்தலம் • Thiruvalidhayam Temple Chennai| Paadi siva... இக்கோயிலானது பூண்டி செல்லும் வழியில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு பார்த்த இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன . அதிகமாக மக்கள் தெற்கு வாயிலேயே பயன்படுத்துகிறார்கள் . தெற்கு வாயில் முகப்பில் அன்னையின் சுதை சிற்பம் உள்ளது , உள்ளே நுழைந்தவுடன் இடது புறத்தில் தற்போதைய காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் உள்ளது , இப்போது நாம் தெற்கு நோக்கிய அம்பாளின் வாசலை காணலாம் , நாம் வலது புறமாக சென்றால் கிழக்கு நோக்கிய வாசல் உள்ளது , அதன் முன் பலிபீடம் ,கொடிக்கம்பம் மற்றும் நந்தி மண்டபத்தை தரிசிக்கலாம் , ஒரு நிலை கோபுர வாசல் வழியாக நாம் உள் நுழைந்தால் நேராக இறைவன் சன்னதியை காணலாம் . இறைவனின் கருவறை உள்ள முன் மண்டபத்தில் இடது புறம் பாலா விநாயகர் உள்ளார் , கருவறை முன்பு துவாரகபாலகர்கள் உள்ளார்கள் . கருவறை முன் உள்ள நந்தி ஒரு கொம்பு உடைந்து காணப்படுகிறது இது சுந்தரரால் வீசப்பட்ட ஊன்றுகோலால் உடைத்துபோனதாக வரலாறு கூறுகிறது . நந்தி அருகே சுந்தரர் சிலை கண்பார்வை அற்று ஊன்றுகோல் ஊணியபடி இருக்கிறார் . இறைவன் சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். இறைவனுக்கு பின்னால் ஸ்வாமி ,அம்பாள் பஞ்சலோக சிலைகள் உள்ளன . உள் பிரகாரத்தை வளம் வந்தால் விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி சன்னதிகள் உள்ளன . கருவறை கோஷ்டத்தில் கணபதி ,தட்சணாமுர்த்தி ,லிங்கோத்பவர் ,பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளார்கள் . அப்படியே வளம் வந்தால் தாயார் மின்னொளியம்மை சன்னதியை அடையலாம் . கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாக தோன்றி வழிகாட்டியதால் இவருக்கு மின்னொளியம்மை என்ற பெயர் ஏற்பட்டது . முன்மண்டபத்தில் நவகிரஹ சன்னதி 63 நாயன்மார்கள் சிலைகள் ஆகியவைகள் உள்ளன . கொடிக்கம்பத்தின் வலது புறத்தில் காலா பைரவர் தனி சன்னதியில் உள்ளார். சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் , திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை இறைவன் முன்பு தான் இவ்வூரை விட்டும் உன்னை விட்டும் எங்கும் செல்லமாட்டேன் என்று இறைவன் முன்பு வாக்குறுதி கொடுத்து திருமணம் செய்துகொண்டார் . வாக்குறுதி தவறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூர் புறப்பட தயாரானார் அவர் ஊர் எல்லையை கடக்கும்போது இறைவன் அவர் கண்களை பறித்தார் , சுந்தரர் தன் தவறை உணர்ந்து திருமுள்ளவயலில் உள்ள கோயிலில் வணங்கிவிட்டு திருவெண்பாக்கம் கோயிலுக்கு வரும்போது உமையவள் அவருக்கு மின்னலாக ஒளிஅமைத்து வழிகாட்டினால் , இதனலாலேயே இவருக்கு மின்னொளியம்மனை என்ற பெயர் ஏற்பட்டது . திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு புலம்பி “நீ கோயிலில் உளாயோ ?” என மிகவும் மனம் நொந்து வினவினார் . அதற்கு இறைவன் “உளோம் போகீர்” அதாவது இருக்கிறேன் போய்வாருங்கள் என அயலார் போல் கூறி கண்ணொளி இழந்த சுந்தரருக்கு ஊன்றுகோல் ஒன்றை வீசியருளினார் . இதனாலேயே இவருக்கு ஊன்றீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது . கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன் கண்ணை அளிக்காமல் ஊன்றுகோலை அளித்ததால் , சுந்தரர் கோபித்துக்கொண்டு அக்கோலை வீசியெறிய அது இறைவன் முன் படுத்திருந்த நந்தியின் கொலம்பில்பட்டது , இதனால் கொம்பு ஒடிந்த பாலநந்தி இன்றும் ஒற்றை கொம்புடன் இத்தலத்தில் உள்ளார் . அம்பாள் சுந்தரரிடம், “மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும் என்று கனிவாக கூறினாள். பின்னர் இத்தலத்தை விட்டு சென்று சுந்தரர் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரை பாடி இடக்கண்ணையும் , திருவாரூர் தியாகராசரை பாடி வலது கண்ணையும் பெற்றதாக வரலாறு உண்டு . #aanmeegam #sivan #திருவெம்பாக்கம் #ஊன்றீஸ்வரர் #oondreeswarar #padalpetratemple #sundarar #nalvar #sivankovil #sivantemple #சிவாலயம் #hindupilgrimage #thiruvannamalaisongs #poondi #276padalpetrasthalam #santhoshlifecoach #lifeguidance #aanmeegamthagaval #aanmegam