У нас вы можете посмотреть бесплатно Jeevasamathy Siddhar Dindigul Srimath Otha Swamygal | திண்டுக்கல் ஓத ஸ்வாமிகள் வரலாறு | Documentary или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திண்டுக்கல் ஸ்ரீமத் ஸ்வாமிகள் வாழ்க்கை வரலாற்று பதிவுகள்...... https://www.google.com/amp/m.dinamala... திண்டுக்கல் மலைக் கோட்டையின் மேற்குப் புறமாக (கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம்) ஜீவ சமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள் புரிந்து வருகிறார் இந்த சுவாமிகள். யார் இந்த சுவாமிகள்? இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது? பெற்றோர் யார்? பூர்வாஸ்ரமம் என்ன? - இப்படிப் பல கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை சொல்ல முடியாது என்றாலும். சுவாமிகளின் சரித்தரத்தில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களைப் பார்ப்போம். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் - சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே மிகவும் சிலிõர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நடசத்திரத்தில் தோன்றியவர் ஒத சுவாமிகள். ஆதிரை திருநட்சத்திரம் ஈசனின் ஜன்ம நட்சத்திரம் ஆயிற்றே? என்று சொல்ல தோன்றுகிறதா? ஆம்! காசியில் வாழும் ஸ்ரீவிஸ்வநாதரின் ஆசியோடும் அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஒத சுவாமிகள். அது மட்டுமல்ல... சுவாமிகளின் அவதாரத்தைக் கண்டு ஆசி வழங்குவதற்கு மும்மூர்த்திகளும் அவர் ஜனித்த கிராமத்துக்கே வந்தார்கள் என்றால் பிரமிப்பாக இருக்கிறதா? பிரமிக்க வைக்கும் சுவாமிகளின் திரு அவதாரத்தைப் பார்ப்போம். பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம். ஒத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒரு முறை வட மாநிலங்களுக்கு க்ஷேத்திராடனம் சென்றார். வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படிதான் இருக்கும். யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்குக் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து, ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சந்நிதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா.... இந்தக் காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாக கூடிய சீக்கிரம் பிறக்கப் போகிறான், பார் என்று அங்கே ஒர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர் அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான க்ஷேத்திரங்களை தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத் திரையில் ஒடிக் கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லிப் பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வாமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஒடின, காசி விஸ்வநாதரின் அருளால் மணி வயிறு வாய்க்கப் பெற்றார் பரமேஸ்வரரின் துணைவியார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே, உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு, வீட்டின் தனியான ஒர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டுக்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார். பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப்போவதாகத் திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே பெரும் அவஸ்தையுடன் மனைவியானவள் அலறிக்கொண்டிருக்கும்போது. கணவனுக்குத் தவிப்பில்லாமல் இருக்குமோ? ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்த விதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கனகம்பீரமாக, அட்சர சுத்தமாக கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும் அவரின் உறவினர்களும் பிரமித்தனர். மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்புதாங்க முடியவில்லை. எனவே கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்துபோனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. பரமேஸ்வர ஐயரின் மனைவி அப்போது பிரசவத்திருந்த அந்த ஆண் சிசு புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது. கண்களில் அதீதமான ஒரு பிரகாசம் இழையோடியது. குழந, மெள்ள ஆரம்பித்தாள்: என் கண்களால் நான் கண்ட இந்தச் சம்பவத்தை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. தெய்வீக அம்சம் முகத்தில் ததும்பும் மூன்று பேர் பிரசவ காலத்தில் இங்கே தோன்றினார்கள். காண்பவரை மயக்கும் ஒரு வித பிரகாசம் அவர்களிடம் இருந்தது. ஒருவர் நெற்றியில் திருநீறும், இரண்டாமவர் திருமண்ணும், மூன்றாமவர் சந்தனமும் தரித்திருந்தனர். எனக்கோ வியப்பு கலந்த அதிர்ச்சி. பிரசவம் நடக்கின்ற இந்த அறைக்குள் ஆண்மக்களாகிய நீங்கள் வந்திருக்கிறீர்களே.....யார்? என்று கேட்டேன். முதலாமவர் கயையில் இருந்து வந்திருப்பதாகவும், இரண்டாமவர் காசியில் இருந்து வந்திருப்பதாகவும், மூன்றாமவர் பிரம்ம கபாலத்தில் இருந்து வந்திருந்ப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது நீங்கள் பார்க்கும் இந்த ரோஜாப்பூக்களும், வெளியில் இருந்தபோது ஒலித்த வேத ஒலியும் அவர்களுடைய செயல்களாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. அவர்கள் இந்த அறைக்குள் இருந்தபோது ஒரு வித மயக்கம் என்னை ஆட்கொண்டது. மருத்துவச்சி சொன்ன தகவலைக் கேட்ட பரமேஸ்வர ஐயர், வந்தவர்கள் யாராக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டார். காசி விஸ்வநாத ரின் அருளோடு பிறந்த இந்தக் குழந்தையை ஆசிர்வதிக்க மும் மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மெய் சிலிர்த்தார். அவருடைய கண்கள் கலங்கின. தனது வாரிசான அந்தச் சிசுவை - வருங்கால ஞானியை உச்சி முகர்ந்து தழுவினார். பிறகு, பூஜையறைக்குப் போய் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி சொன்னார்.