У нас вы можете посмотреть бесплатно Naadha Brahmam | Sri Mahaperiyavav Potri Song | Lyrics : Dr. R.Ganesh или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
108 போற்றி 1. அன்னையே போற்றி, தந்தையே போற்றி சரணாலய சங்கரரே போற்றி 2. ஆனந்தமருள் குருநாதா போற்றி 3. இன்னருள் கணபதி நீயே போற்றி 4. ஈராறு கரத்தோனும் நீயே போற்றி 5. எங்கும் நிறை ஈசன் நீயே போற்றி 6. ஏகாந்த காமாக்ஷி நீயே போற்றி 7. ஐயன் திருமால் நீயே போற்றி 8. ஒன்பது க்ரஹங்களும் நீயே போற்றி 9. ஓரிக்கை தனில் வளர் ஒளியே போற்றி 10. ஒளஷதமாம் தனி மருந்தே போற்றி 11. ஈச்சங்குடியுறை ஈசனே போற்றி 12. விழுப்புரம் விழுமிய விமலா போற்றி 13. கலவைப் பதிவளர் கதிரே போற்றி 14. பாலத்துறவியானாய் போற்றி 15. வேதத்தின் கரை கண்டாய் போற்றி 16.தவமே! அருந்தவநிதியே போற்றி 17. ஒளிரும் ஞானப் பொலிவே போற்றி 18. ஓம்கார தத்துவப் பொருளே போற்றி 19. ஆதிசங்கர அவதாரா போற்றி 20. அறுபத்தி எட்டாம் குருவே போற்றி 21. காமகோடி பீட சிகாமணி போற்றி 22. ஏகாம்பரனே! எந்தையே போற்றி 23. மூககவி வழித்தோன்றலே போற்றி 24. பக்தர்தம் உள்ளம் நிறைந்தாய் போற்றி 25.மறைகளைக் காக்கும் மாமுனி போற்றி 26. பசுக்களைக் காத்திடும் பசுபதியே போற்றி 27. பசிப்பிணி போக்கிடும் பரிவே போற்றி 28. ஆலயத் திருப்பணி காரணா போற்றி 29.உறவற்றோரின் உறவே போற்றி 30.பாதகம் நீக்கிடும் பரமனே போற்றி 31. சைவத் தத்துவப் பொருளே போற்றி 32. வைணவத் தத்துவப் பொருளே போற்றி 33. மனவிருள் நீக்கிடும் மதியே போற்றி 34. கனிவே! கற்பகத்தருவே போற்றி 35. அடைக்கலம் தந்திடும் அரசே போற்றி 36. துயர்களைக் களைந்திடும் தூயரே போற்றி 37. தூயத் துறவின் எல்லையே போற்றி 38. ஒளி மிகு ஞான ஜோதியே போற்றி 39. வேதனை தீர்த்திடும் வேந்தரே போற்றி 40.தெளிவும் அறிவும் அருள்வாய் போற்றி 41. தீனரைக் காக்கும் திருவே போற்றி 42.சோதனை தீர்க்கும் சோதியே போற்றி 43. சங்கடம் தவிர்த்திடும் சக்தியே போற்றி 44. சித்தம் நிறைந்த சிவமே போற்றி 45. திருவேங்கடனும் நீயே போற்றி 46. நான்முக தேவனும் நீயே போற்றி 47. அனுஷத்தின் அனுக்கிரஹமே போற்றி 48. ஞானத் தத்துவக் கடலே போற்றி 49.மோனத்தவம்புரி முனியே போற்றி 50. காமாட்சியின் கருணை வடிவே போற்றி 51. யோகிகளுக்குள்ளே யோகியே போற்றி 52. துறவிகளுக்கெல்லாம் துறவியே போற்றி 53.சித்தருக்கெல்லாம் சித்தரே போற்றி 54. ஞானியர்க்கெல்லாம் ஞானியே போற்றி 55. கண்களுக்கு இனிய காவியனே போற்றி 56.காவியுள் காவியம் படைத்தாய் போற்றி 57. அல்லல் தீர்க்கும் அருள் மழை போற்றி 58. அஷ்ட சித்திகளும் அறிந்தோய் போற்றி 59. நவநிதி அருளும் நலமே போற்றி 60. புண்ணியத் திருவே! புனிதனே போற்றி 61. பூரண நலம் அருள் பூரணா போற்றி 62. அற்புத சொற்பதம் அருள்வோய் போற்றி 63. மௌனம் பேசும் மொழியே போற்றி 64. தத்தாத்ரேய ரூபமே போற்றி 65. தாயின் பரிவு தருவோய் போற்றி 66. தந்தையின் நேசம் பொழிவோய் போற்றி 67. எல்லா மதமும் ஏற்றாய் போற்றி 68. பட்டும் பகட்டும் ஒழித்தாய் போற்றி 69. அன்னைக்குத் தாடங்கம் அணிவித்தாய் போற்றி 70. உத்தர சிதம்பரம் உகந்தாய் போற்றி 71. காலடி ஸ்தம்பம் அமைத்தாய் போற்றி 72. மனிதமே புனிதம் என்றாய் போற்றி 73. குளிரும் மதியின் ஒளியே போற்றி 74. நுண்கலைகள் பல வளர்த்தாய் போற்றி 75. வாழ்வின் நெறிமுறை வகுத்தாய் போற்றி 76.தர்ம நெறிமுறைகள் தந்தாய் போற்றி 77. ஆய கலைகள் அறிந்தாய் போற்றி 78. ஆழக்கடலின் அமைதியே போற்றி 79. ஆறு மதங்களும் போற்றுவோய் போற்றி 80. அனைத்து உயிர்களின் அன்பா போற்றி 81. பேரின்பம் அருளும் பேரொளி போற்றி 82. புனித யாத்திரை செய் புண்யா போற்றி 83. பண்டிதரும் பணியும் பாதா போற்றி 84. சரணடைந்தோரின் அபயமே போற்றி 85. திக்கற்றோர்க்கருள் தெய்வமே போற்றி 86. நடமாடும் தெய்வம் நீயே போற்றி 87. ஆலின் நிழலாய் அருள்வோய் போற்றி 88. ஆண்டுகள் நூறு ஆண்டாய் போற்றி 89. உலகம் போற்றும் உத்தமரே போற்றி 90. பன்மொழி அறிந்த பண்டிதரே போற்றி 91. பதிகம் பாசுரம் போற்றினாய் போற்றி 92. உருவாய் அருவாய் அருள்வோய் போற்றி 93. தவறாத தவநெறி உடையாய் போற்றி 94. ஜெயேந்திர குருவை அளித்தாய் போற்றி 95. விஜயேந்திர குருவை அளித்தாய் போற்றி 96. ஜகம் புகழும் ஜகத்குருவே போற்றி 97. பார்புகழ் பரமாச்சாரியார் போற்றி 98. தன்னிகரில்லாத் தவநிதியே போற்றி 99. பாரதத்தின் தவப்புதல்வா போற்றி 100. துறவின் இலக்கணமானாய் போற்றி 101. அத்வைதப் பிரச்சார மணியே போற்றி 102. சாந்தம் தவழும் முகத்தாய் போற்றி 103. முக்காலமும் அறிந்த மூர்த்தியே போற்றி 104. சுத்தஸ்படிக குணநிதியே போற்றி 105. திவ்ய புண்ய சரித்திரரே போற்றி 106. அஞ்ஞான இருள் நீக்கினோய் போற்றி 107. சத்தியத்தின் மறு உருவே போற்றி 108. காஞ்சி மஹா பெரியவரே போற்றி சரணாலய சங்கரரே போற்றி போற்றி சரணாலய சத்குருநாதா போற்றி சரணாலய சத்குருநாதா போற்றி