У нас вы можете посмотреть бесплатно The Sea Shell Shop in Dhanushkodi |ஒரிஜினல் முத்து பவளம் வலம்புரி சங்கு கண்டுபிடிப்பது எப்படி ? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
COLLECTION OF JEWELLERY VIDEO • Видео BLOG https://thanimaitraveller.blogspot.co... முத்து ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டையப் பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் முத்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது முத்து பொதுவாக ஒரு இரத்தினக் கல்லாகவே கருதி மதிக்கப்படுகிறது. முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட்டு அல்லது [கல்சைட்போன்ற படிக வடிவிலுள்ள கால்சியம் கார்பனேட்டையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது. முத்து அரிதாகக் கிடைக்கக்கூடிய விலைமதிப்புள்ள நவரத்தினங்களில் ஒன்று.பெர்சிய வளைகுடா,செங்கடல்,கட்ச் வளைகுடா,மன்னார் வளைகுடா,பாக் ஜல சந்தி பாேன்ற பல இடங்களில் விரவி காணப்படுகின்றது. இந்தியாவில் காணப்படும் பியுஃபிகடா இனமே வணிக முக்கியத்துவம் வாய்ந்தது.முத்துபடுகைகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிப்பிகள் எடுக்கப்படுகின்றன.ஒவ்வாெரு சிப்பிக்குள்ளும் ஒரு முத்து உருவாகிறது.தூத்துக்குடி பகுதியில் முத்து உற்பத்தி மிக அதிகமாகபதிவு செய்யப்பட்டுள்ளன.பாண்டிய நாடு முத்துடைத்து என்று சாெல்லப்படுவதுண்டு. நம் நாட்டில் முத்து வளர்ப்பு பற்றிய பயிற்சியை சி.எம்.எப்.ஆர்.ஐ வழங்குகிறது. பவளம் அல்லது பவழம் (coral) உயிரினமாகும். பவளம் நிடேரியா (Cnidaria)தொகுதியைச் சேர்ந்த, அந்தோசோவா (Anthozoa) வகுப்பைச் சேர்ந்தவையாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவைச் சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு/சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்ப நீர்க்கடல்களில் காணப்படுகின்றன. இதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். பவளம் கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி இவை கால்சியம் கார்பனேற்றைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர். இந்தப் பவளக்கொடித் திட்டுகள் சேர்ந்து இறுகிப் பாறையாகி தீவுகள் ஆகும். இவற்றைப் பவளத்தீவு என்பர். வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கு பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை. வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன. நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிபிக் பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன. ஸ்படிக மாலை (Spadigam Malai) ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சார்ந்தது. இது பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்ட நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் அடைந்தவை. இந்த ஸ்படிக பாறையை சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்கின்றனர். 1 முதல் 10 வரை தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கும். அதில் முதல் தரம் வாய்ந்த ஸ்படிகம் மிகவும் தெய்வீக சக்தி கொண்டவை. ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஸ்படிகம் சிறப்பு மிக்க பயன்களை அள்ளி தருபவை