У нас вы можете посмотреть бесплатно டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே - Dingri Dingale - Sri Lankan Tamil Song of 70s - 80s или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#எம்மவர்இசைமழை NO COPYRIGHT INFRINGEMENT INTENDED - THIS IS PURELY FOR ENTERTAINMENT & DOCUMENTING PURPOSES எம்மவர் துள்ளிசைப் பாடல்கள் - டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே பாடலுக்கு இசையமைத்தவர் SS வேதா எனும் வேதாச்சலம். இவர் இலங்கையில் சிங்கள படங்களுக்கு இசையமைத்து தன் இசைஅமைப்பாளர்’ வாழ்க்கையை ஆரம்பித்தவர். இதன் தாக்கமோ இவர் தமிழ் படங்களில் பல பைலா-துள்ளிசைப் பாடல்கள் இடம்பெற்றதன் காரணம்? இவர் இசையமைத்த முதல் தமிழ் திரைப்படம் அன்பு எங்கே (1958). இப்படத்தில் ‘டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே’ துள்ளிசைப் பாடல் எல்லோரையும் தாளம்போடவும் ஆடவும் வைத்தது. 50களின் இறுதியிலிருந்து 60களின் இறுதிவரை இப்பாடலைப் பாடாமல் நிறைவடைந்த களியாட்டமோ அல்லது திருமண பிறந்த நாள் வைபவங்களோ இல்லையென எமது பெற்றோர் கூறுவார்கள். பின்னால் வெளிவந்த வேதாவின் பல படங்களிலும் துள்ளிசைப் பாடல்கள் தவறாமல் இடம்பெற்றன. பாடலை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா அல்லது வீ. சீதாராமனா என்பதில் ஒரு மயக்கம். சீதாராமன் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. சீதாராமனுக்கு ‘டிங்கிரி டிங்காலே‘ என முதல் அடியை எடுத்து கொடுத்தவர் வேதா. காரணம் தனது பாடல்களால் பிரபலமான ‘டிங்கிரி மெனிக்கே’ சிங்கள படப்பெயரின் ‘டிங்கிரி’யில் வேதாவுக்கு இருந்த காதல் ‘டிங்கிரி டிங்காலே’வாக காரணமென்றும் வீட்டில் சொல்லக் கேட்டதுண்டு. துள்ளிசைப் மெட்டுகளால், வேதாவின் பாடல்களுக்கு எங்கள் வீட்டு விசேட நிகழ்வுகளில் நல்ல மௌசு இருந்ததும் உண்மை. இதைவிட 'டிங்கிரி டிங்காலே' சிங்களத்தில், ஸ்டிவன் சில்வா. அன்டன் ஜோன்ஸ், டெஸ்மன்ட் சில்வா, ஜிப்சிஸ் என பலரால் மறுபிறவி எடுத்த ஒரு பாடல் என்பதும் இங்கு தவறாமல் குறிப்பிடப்படவேண்டிய விடயம். ஒரு திருப்தி, ஏனைய தென்னிந்திய இசையமைப்பாளர்கள் - பாடகர்கள் போல் ரீமிக்ஸ்ஸில் பாட்டு மெட்டின் கழுத்தை நெரிக்கவில்லை, இசைக்கருவிகளில் மட்டுமேயான மாற்றத்துடன் துள்ளிசைக்கு ஏற்றாற்போல் மேடைகளுக்காகவும் இருவட்டுக்காகவும் மெருகுடன் இப்பாடல் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. SVRம் தன் பங்கை திறம்பட செய்துள்ளார் என்றே சொல்லவேண்டும். SVR என்று இரசிகர்களால் அறியப்பட்ட பாடகர் “எம்மவர்” S.V.R. கணபதிப்பிள்ளை மெல்லிசை, துள்ளிசை, திரையிசை என்று ஒரு சுற்று வந்தவர். பாடகர் முத்தழகுவுடனும் இசையமப்பாளர் செல்வராஜாவுடனும் சேர்ந்து செயல்பட்டவர். முத்தழகுவின் ‘ஸப்தஸ்வரம்’ நிகழ்ச்சியில் இவர் பங்கு நிறையவே இருந்தது. SVR இளமையிலேயே எம்மை விட்டு பிரிந்தது இலங்கை இசை உலகிற்கு உண்மையில் துரதிர்ஷ்டமே. பாடல் – டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே மூல இசையமைப்பு – S வேதா இயற்றியவர் – வீ. சீதாராமன் படம் – அன்பு எங்கே (22 – 01 -1958) புதிய இசை பின்னணியில் பாடுவது – SVR கணபதிப்பிள்ளை Song – Dingri Dingale Meenatchi Dingri Dingale Cover version Original Music Score – S. Vedha Lyrics - V. Seetharaman Film – Anbu Enge (January 22nd, 1958) Cover Version By – SVR Kanapathipillai #70-80களில்எம்மவர்இசைமழை-இன்றும்இனிமை.!! #SriLankanTamilSongof70s-80s