У нас вы можете посмотреть бесплатно கடவுள் எப்படிப்பட்டவன்? யார் இறைவன்? கவிஞர் கண்ணதாசன் தத்துவ வரிகள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கடவுள் எப்படிப்பட்டவன்? யார் இறைவன்? கவிஞர் கண்ணதாசன் தத்துவ வரிகள் #kannadhasan who is God in Tamil Music Credits : • Rāga Rāmkali | Improvisation on Sitar ஹலோ பிரண்ட்ஸ், கடவுள் எப்படிப்பட்டவன் ? யார் இறைவன் ? என்பதற்கு கவியரசன் கண்ணதாசன் சொன்ன தத்துவ வரிகள் இதோ... இந்த பதிவை கடைசி வரைக்கும் கேளுங்க, இதைவிட சிறப்பா கடவுள் பற்றி யாரும் சொல்லிட முடியாது... முதல்ல கடவுள் எப்படிப்பட்டவன் அப்படின்னு கவிப்பேரரசு கண்ணதாசன் சொல்லும் ஆன்மீக தத்துவம் இதோ... ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். அவன் தான் கடவுள்! பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான். பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். அவன் தான் கடவுள்! பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான். அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான். பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். அவன் தான் கடவுள்! கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். அவன் தான் கடவுள்! ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை மானுக்குக் கொடுப்பான். பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான். அவன்தான் கடவுள்! அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான். அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். அவன் தான் கடவுள்! தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். அவன்தான் கடவுள்! நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். அவன் தான் கடவுள்! புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். அவன் தான் கடவுள்! கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். அவன் தான் கடவுள்! மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். பின்னிருந்து இயக்குவான். அவன் தான் கடவுள்! தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான். உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். அவன் தான் கடவுள்! Actual ah, கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம்.... இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?" என கிண்டலாக கேட்டனர்... அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அந்த அற்புதமான தத்துவம் இதோ... இந்த கவிதை வரிகள் பாடலாக 1962 வருடம் வெளியான வளர்பிறை என்ற திரைப்படத்தில கே.வி. மகாதேவன் மயக்கும் இசையில, நம்ம டி.எம். சௌந்தரராஜன் அய்யா அற்புதக் குரலில் கேட்கவே அற்புதத்தில் அற்புதமா இருக்கும்... யார் இறைவன் என்பதற்கு இதைவிட அற்புதமான தத்துவ பாடல் இருக்கவே முடியாது... அந்த அற்புத தத்துவ வரிகள் இதோ உங்களுக்காக... பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன் முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் வெள்ளருவிக் குள்ளிருந்து மேலிருந்து கீழ்விழுந்து உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன் வானவெளிப் பட்டணத்தில் வட்டமதிச் சக்கரத்தில் ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன் அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே ஆசைமலர் பூத்திருந்தால் நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன் கற்றவர்க்குக் கண் கொடுப்பான் அற்றவர்க்குக் கை கொடுப்பான் பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனைபின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன் பஞ்சுபடும் பாடுபடும் நெஞ்சுபடும் பாடறிந்து அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்ஆறுதலைத் தந்தருளும் இறைவன் கல்லிருக்கும் தேரைகண்டு கருவிருக்கும் பிள்ளை கண்டு உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதைஉண்டுகளிப் போர்க்கவனே இறைவன் முதலினுக்கு மேலிருப்பான் முடிவினுக்குக் கீழிருப்பான் உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன் நெருப்பினில் சூடு வைத்தான் நீரினில் குளிர்ச்சி வைத்தான் உள்ளத்தின் உள் விளங்கி உள்ளுக்குள்ளே அடங்கி உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன். கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன் சின்னஞ்சிறு சக்கரத்தில் ஜீவன்களைச் சுற்ற வைத்து தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்தழுவிக் கொண்டால் அவன் தான் இறைவன் தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் -அவன் தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்! உண்மை தாங்க, எல்லாம் அவன் செயல்! ஜெயகாந்தன் அற்புதமா சொல்லுவாரு... மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம். அன்பே சிவம்! நன்றி! வாழ்க வளமுடன்! #tamilkavithai #tamilkavithaigal #kannadasan #tamilquotes #god #motivation