У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "பாரம்பரியம் !"16.04.2024 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
" பாரம்பரியம்!" நமது அபிமான இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில்! *************************************** இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மாதமிருமுறை செவ்வாய்க்கிழமைகளில் ஒலிபரப்பாகிவரும் " பாரம்பரியம் " நிகழ்ச்சித் தொடரில் இன்று செவ்வாய் 2024 ஏப்ரல் 16ஆம் திகதி இரவு 8.15க்கு முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பு வழங்கி வளம் சேர்த்தோர் வரிசையில் நேயர்கள் நன்கறிந்த சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி அஷ்ஷெய்க் O.L.அமீர் அஜ்வத் (நளீமி) அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு தமது வானொலிப் பங்களிப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 1990களில் இவர் முஸ்லிம் சேவைக்காக "இளைஞர் இதயம் " நிகழ்ச்சியைத் தொடராக நடத்தியபோது இளைஞருக்கு வழிகாட்டும் பயனுள்ள பல அம்சங்களை ஒவ்வொரு வாரமும் வழங்கி அவர்கள் வாழ்வில் வளர்ச்சி காண வழிகாட்டியதன் மூலம் நேயர்களது பேரபிமானம் பெற்றார். அதேபோல் இஸ்லாமிய நற்சிந்தனை, திருக்குர்ஆன் விளக்கம், ஆங்கில மொழியில் ஸஹர் சிந்தனை போன்றவற்றையும் காலத்துக்குக் காலம் வழங்கியிருக்கிறார்! ஜாமியா நளீமியா, பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணி மற்றும் சட்ட முதுமாணிப் பட்டங்கள் பெற்று 1997ல் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்! தற்போது இலங்கை வெளிவிவகார அமைச்சில் மேலதிகச் செயலாளராக விளங்கும் O.L அமீர் அஜ்வத் அவர்கள் ஏற்கனவே ஓமான் மற்றும் யெமன் நாடுகளிலும் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றியுள்ளதோடு வெகுவிரைவில் சவூதி அரேபியாவில் நமது தூதுவராகப் பொறுப்பேற்கக் காத்திருக்கின்றார் என்பது குறிப்பிடக் கூடியதாகும்.அன்னாருக்கு எமது நேயர்கள் சார்பாக எமது நெஞ்சார் ந்த அன்பு நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும். வழமைபோல் நிகழ்ச்சிக்கான அதிதியை மிகவும் சிரமங்களைச் சுமந்தவாறு தேடித்தேர்ந்து , தனது சிறப்பான நேர்காணல்மூலம் நேயர்களை மகிழ்வித்திருக்கிறார் நமது பாரம்பரியக் கதாநாயகர் இலங்கை வானொலியின் சிரேஷ்ட கலைஞர் கலாபூஷணம் அல்ஹாஜ் M.S.M.ஜின்னாஹ் அவர்கள்.அன்னாருக்கு நெஞ்சார்ந்த எமது பாராட்டுக்கள் நன்றிகள்.மேலும் நிகழ்ச்சியைத் தரமாகத் தயாரித்தளித்துவரும் முஸ்லீம்சேவைப் பணிப்பாளர் சகோதரி.M.J.பாத்திமா றினூசியா அவர்களுக்கும் , கடமைநேர அறிவிப்பாளருக்கும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கும் எமது நன்றிகளுடன் நல்வாழ்த்துக்கள்! ( பிற்குறிப்பு:- புகைப்படம் மற்றும் முக்கிய தகவல்கள் எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் கலாபூஷணம் அல்ஹாஜ் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்களது முகநூலில் இருந்து பெற்றுக்கொண்டவையாகும்.எனவே எனது நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்குத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.ஜஸாக்கல்லாஹ்ஹைர் அன்பு அறிவிப்பாளரவர்களே!) அன்பு அபிமான நேயர் என்றும் ****************************** எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) 0777161224. - 0754551230. """"""""""""""""""""""""""""""""""""""""""""" (17.04.2024 - 2.33 PM)