У нас вы можете посмотреть бесплатно சிறுமலை சுற்றுலா இடங்கள் | SIRUMALAI HILLS | DINDUGAL TOURIST PLACES | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Sirumalaihillstrip,#Dindukagalsirumalaitouristplaces #sirumalaihills கூட்டமே இல்லாத சூப்பரான சுற்றுலா தலம்.. இந்த இடத்த பத்தி தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க.. | Sirumalai Places to Visit அடிக்கர வெயிலுக்கு ஊட்டி,கொடைக்கானல் போலாம்னு பிளான் பண்ணி கூட்டநெரிசலுக்கும்,போக்குவரத்து நெரிசலுக்கும் பயந்து அந்தப் பிளான்னா கைவிட்டவங்க எத்தனை பேர்? கவலை படாதீங்க அதில் நானும் ஒருவரே… அந்த சமயத்தில் தான் எனது நண்பர் ஒருவர் மலைகளின் சின்ன இளவரசி பற்றி பகிர்ந்தார். என்னது சின்ன இளவரசியா?.. மலைகளின் இளவரசி தெரியும் அது ஏன்னா சின்ன இளவரசினு யோசிக்கரிங்களா? அப்போ வாங்கா சுற்றிபார்ப்போம். மலைகளின் சின்ன இளவரசி என்று செல்லமாக அழைப்பது சிறுமலை. சிறுமலை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 6000 ஏக்கர் பரப்பளவுள்ளவை. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்க சுற்றிபார்க்க என்னதான் இருக்கு? இருக்கு, இயற்கையோடு கொஞ்சும் முக்கியமான இடங்களை ரசித்துக்கொண்டே சுற்றி பார்ப்போம் வாருங்கள்..! அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் மலையின் உச்சியில் சரிவான பகுதியில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும். உயர் கோபுரம் மலையில் ஏறும் போது 17வது கொண்டை ஊசி வளைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் உச்சியில் நின்று பார்த்தால் அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் சிறுமலையின் மற்ற மலைத்தொடர்களை இப்பகுதியில் நின்று காணலாம் . சஞ்ஜீவனி மலை சிறுமலையின் ஒருபகுதியாக உள்ள இம்மலையில் தான் ராமாயனத்தில் ராவனனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டறிய ஐயமுற்று சஞ்சிவினி மலையையே தூக்கிச் சென்றபோது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது. சாதியாறு சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன. அகஸ்தியர்புரம் அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது. மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. வெள்ளிமலை அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். வெள்ளிமலை முருகன் கோவில் மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் அமைந்துள்ளது. சரி சரி நண்பர்களோடு செல்வோர்க்கு பொழுதுபோக்கு எதுவும் இல்லையா? சொல்கிறேன் கேளுங்கள் இளைஞர்களுக்கு பிடித்தவகையில் மலையேற்றமும் செல்லலாம். Join this channel to get access to perks: / @arimapayanam