У нас вы можете посмотреть бесплатно வாதம்,பித்தம்,கபத்தின் குற்றங்களை சரி செய்யும் அரிசி-இரத்தசாலி அரிசி-Rakthashali Rice-9486072414 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வாதம்,பித்தம்,கபத்தின் குற்றங்களை சரிசெய்யும் இரத்தசாலி அரிசி அரிசி ரகத்திலேயே மிக பழமையான ஒன்று பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவர்களால் மருந்தாகவும்,நோயாளர்களுக்கு உணவாகவும்,துணை மருந்தாகவும் கொடுத்துவருகின்றனர்.இரத்தசாலி நெல் ரகம் 110 முதல் 120 நாட்கள் வயதுள்ள குட்டையான சென்னை ரகம்,சம்பா பருவத்திற்க்கு ஏற்ற ரகம்.இயல்பாகவே நெல் வயலில் அதிகம் எலி காணப்படும்,இரத்தசாலி பயிரிட்டுள்ள வயலில் இதன் வாசனைக்கு இருமடங்கு எலிதொல்லை உண்டு, மேலும் நெல்மணிகள் உதிரும் தன்னை சற்று அதிகம் எனவே பராமரிப்பு இந்த ரகத்திற்கு அதிகம் தேவை கை அறுவடைதான் செய்து நல்லது,இதுவும் ஒரு காரணம் தற்போது இந்த ரகம் அழிந்துவர . இரத்தசாலி என்று பெயர் வர காரணம் நெல் தோல் மற்றும் அரிசி நிறம் இரத்த நிறத்தை ஒத்து காணப்படுவதாலும்,இரத்தம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் அகற்றுவதே ஆகும் கேரளாவில், மலப்புரம்,மத்திய திருவிதாங்கூர், வடக்கு கேரளம்,கன்னியாகுமரியில் சிலபகுதியிலும் பயிரிடப்பட்ட ரகமாகும்,அழிவின் விளிம்பில் இருந்த இந்த ரகத்தை தற்போது சில விவசாயகள் மீட்டு மறுபடியும் பயிர்செய்து வருகின்றனர்,தமிழ்நாட்டிலும் தற்போது பயிரிட தொடங்கி உள்ளனர்.. வாதம்,பித்தம் மற்றும் கபம் நாடி நிலைகளை சுத்தி செய்து அதன் இயல்பில் இயங்க கேரள பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் இரத்தசாலி அரிசியை பலநூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்தார்கள்,தற்போது வெகுசிலரே பயன்படுத்தி வருகின்றனர். இரத்தசாலி அரிசி பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர் கூறி இரத்தசாலி அரிசியின் பயன்கள் கீழே தொகுத்து கொடுத்துள்ளோம்.. நலிந்து மெலிந்து இருப்பவர்களை புஷ்டியாக்கும் இரத்தசாலி சோறு. நரம்பு பலவீனத்தை களைகிறது,உடல் வலிமைக்கு உதவும் இரத்தசாலி கஞ்சி. இரத்த அழுத்தம்,சிறுநீரக கோளாரு ,நீரிழிவு நோயாளிகளுக் துணை உணவாகவும்,மருந்தாகும் கொடுத்து வருகின்றனர். தாய்பால் சுரப்பு குறைவுள்ளவர்களுக்கு இரத்தசாலி அரிசி,பனைவெல்லம்,ஏலக்காய்,பசும்பால் கலந்த கஞ்சி நல்ல பலன்தரும் அலர்ஜி,தோல் நோய்,கர்ப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிறு தொந்தரவு,கல்லீரல் தொந்தரவுகளுக்கு உணவாக கொடுக்கலாம். மலமிலக்கி ஆக செயல்படும்.சிறுநீர் எரிச்சல் சரி செய்யும் உமிழ்நீர் சுரப்பு பற்றாகுறை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், பிரசவத்திற்கு பின் வரும் மலசிக்கல்,செரிமான கோளாறுகளுக்கு நல்ல உணவாகும். அரிசி கழுவிய நீரில் உடலை கழுவ தோல் அழற்சி குணாக தொடங்கும்.தோல் நோய்களுக்கு வெண்ணையிடன் கலந்து பூசலாம். மஞ்சள் பொடியுடன் சம அளவு இரத்தசாலி அரிசி பொடி கலந்து பசை போல வீக்கத்தின் மேல் இட்டு துணி வைத்து கட்ட நல்ல பலன் தரும். இவ்வாறாக ஒரு அரிசியே மருந்தாகவும்,மருந்தே உணவாகவும் செயல்படும் அரிசியில் இரத்தசாலி அரிசிக்கு எப்போதும் நல்ல இடம் உண்டு. இரத்தசாலி அரிசி கிடைக்கும் தேவைப்படுவோர் அணுகவும் சதுரகிரி இயற்கை அங்காடி 9486072414