У нас вы можете посмотреть бесплатно டார்ஜீலிங் - Darjeeling Tourist places in tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Darjeeling:- Darjeeling Toy Train Journey video:- (Chennai to Darjeeling Route) • Darjeeling Toy Train Journey - Chennai To ... இந்தியாவில் இருக்குற இயற்கை ரசிகர்கள் கட்டாயம் போகவேண்டிய இடம் டார்ஜிலிங். ஆங்கிலேயர் காலத்திலேயே உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான டார்ஜிலிங் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு எப்படி செல்வது, என்னென்ன செய்வது, என்னவெல்லாம் காண்பது, செல்ல வேண்டிய காலம், எங்கே தங்கலாம், தங்கும் விடுதிகள், உணவுகள் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒன்று திரட்டி உங்களுக்கு வழங்குவதுதான் இந்த பதிவு. வாங்க டார்ஜிலிங்குக்கு போலாம். இது மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து வடக்கு திசையில் இமய மலை நோக்கி பயணித்தால் டார்ஜிலிங்கை அடைய முடியும். கிட்டத்தட்ட இமயமலை அடி வாரத்தில் அமைந்துள்ளது இந்த டார்ஜிலிங். கொல்கத்தாவுக்கும், டார்ஜிலிங்குக்கும் இடையில் நேரடி பேருந்து அல்லது விமான சேவை வசதிகள் இல்லை. அதே நேரத்தில் கொல்கத்தாவிலிருந்து பாக்டோக்ராவுக்கு விமான சேவை உள்ளது. பாக்டோக்ராவிலிருந்து 68 கிமீ தொலைவில் அமைந்துள்ளது நம் விருப்பத்துக்குரிய சுற்றுலாத் தலமான டார்ஜிலிங்.நீங்கள் குறைந்த அளவு காலம் என்றாலும் கூட 3 நாட்களாவது தங்க வேண்டும். அப்போதுதான் டார்ஜிலிங்க்கின் மொத்த அழகையும் ரசித்து விட்டு திரும்ப முடியும். அல்லது நீங்கள் மிக முக்கியமானவற்றை மட்டும் காண வேண்டும் என்றால், 2 நாட்கள் போதுமானது. அதற்கும் குறைவாக நீங்கள் சென்றீர்கள் என்றால் உங்களின் சுற்றுலா முழுமை பெறாது. சுற்றுலாவை முழுக்க முழுக்க ரசித்து அனுபவிக்க வேண்டுமா ? ஒரு வாரம் அதாவது 7 நாட்களாவது திட்டமிடுங்கள். ஏழு நாட்கள் டார்ஜிலிங்கில் திரிந்து அனைத்து இடங்களையும் அனுபவியுங்கள். எங்கெங்கே செல்வது என்னென்ன செய்வது என்பன குறித்து தொடர்ந்து காண்போம். டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே  1800ம் ஆண்டுகளிலேயே துவக்கப்பட்ட பொழுது போக்கு ரயில் சேவையான இது யுனெஸ்கோவின் பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. படாஸியா லூப் மற்றும் போர் நினைவு மண்டபம் சுதந்திர போராட்டம் மற்றும் இந்திய தேசிய போர்களில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த உள்ளங்களுக்காக இந்த போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. லாயிட்ஸ் தாவரவியல் பூங்கா பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள் நிரம்பிய இந்த பூங்கா சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை அதிகம் பெறுகிறது. டார்ஜிலிங் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி இடத்தில் இந்த பூங்கா மட்டுமே உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஹேப்பி பள்ளத்தாக்கு டீ எஸ்டேட் ஸ மகிழ்ச்சி பூங்கா என அழைக்கப்படும் டீ தோட்டம் டார்ஜிலிங் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. காரணம் இங்கு உள்ளே சென்றதும் அவர்களுக்கு காணக் கிடைக்கும் பச்சை பசேலென்ற அழகிய காட்சிதான். இங்கு பார்வையாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர். கேபிள் கார் பயணம் டார்ஜிலிங் நகரத்தை அடுத்த ரங்கிட் பள்ளத் தாக்குக்கு செல்ல இந்த கேபிள் கார் பயன்படுத்தப் படுகிறது. கண்ணுக்கு மிக அருகில் மேகங்களை தரிசனம் செய்து இந்த காரில் பயணிக்கலாம். டைஹர் ஹில்ஸ் டார்ஜிங்கிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த டைஹர் ஹில்ஸ். இங்கிருந்து சூரிய உதயத்தின் முதல் கதிரை நீங்களே நேரிடையாக கண்டு மகிழலாம். பட்டாசியா லூப் டார்ஜிங்கிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பட்டாசியா லூப். இங்குள்ள பொம்மை ரயில் முழுமையாக 360 டிகிரி சுழன்று நிற்கும். நைட்டிங்கால் பூங்கா இது டார்ஜீலிங் ல் இருந்து 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நைட்டிங்கால் பூங்கா. இங்கு மிகப் பெரிய சிவன் சிலை ஒன்று அமைந்துள்ளது. நீர் ஊற்று ஒன்று இசைக்கேற்ப ஆடுவது இந்த இடத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. டார்ஜிலிங்க் ராக் கார்டன் டார்ஜிங்கிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த டார்ஜிலிங்க் ராக் கார்டன் சிங்கலீலா தேசிய பூங்கா டார்ஜிங்கிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சிங்கலீலா தேசிய பூங்கா டார்ஜிலிங் அமைதி பகோடா டார்ஜிங்கிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த டார்ஜிலிங் அமைதி பகோடா சந்தக்பு டிரெக்கிங் டார்ஜிங்கிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சந்தக்பு டிரெக்கிங் டீஸ்டா ஆற்று பயணம் மற்றும் சாகசங்கள் இந்த ஆறு நேரடியாக இமய மலையிலிருந்து வருவதாலும், இதன் வேகத்தாலும் அழகிய வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறது. ஷாப்பிங்க் இமய மலையின் மடியில் அமர்ந்து கொண்டு கோடையினை வரவேற்கும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பல அழகிய பொருள்களை ஷாப்பிங் செய்ய விரும்புவார்கள். இங்கு டீ மிக முக்கியமான பொருளாகும். இங்கு வரும் பலர் டீ வாங்கி செல்வார்கள். நறுமணமும், சுவையும் அதிகமாக கொண்ட டீ தூள்கள் இங்கு கிடைக்கிறது. நேரு தெருக் கடை இங்கு நிறைய கடைகள் வரிசையாக அமைந்துள்ளன. உடைகள், அலங்காரப் பொருள்கள் என நிறைய இங்கு ஷாப்பிங் செய்யலாம். கம்பளி ஆடைகள், புத்தகங்கள், ஓவியங்கள், கூர்க்கா கத்தி, புத்தர் சிலைகள் என நிறைய கிடைக்கும். பட்டாசியா லூப் கடைத் தெரு:- வீட்டு உபயோக பொருள்கள், கம்பளி ஆடைகள்,பெண்களுக்கான அலங்கார பொருள்கள் என பல ஷாப்பிங் அம்சங்கள் இங்குள்ளன. கூம் மானஸ்டரி மார்க்கெட் திபெத்தியன் பௌல்ஸ், வழிபாட்டு சக்கரங்கள், வழிபாட்டு கொடிகள், சுவர் ஓவிய ஒட்டுக்கள், பெண்களுக்கான ஹேன்ட் பேக்குகள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன