У нас вы можете посмотреть бесплатно ஒயில் கும்மி | விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி | நவீன் பிரபஞ்ச நடனக்குழு | Oyil Kummi | பகுதி 1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உயிர் வாழ மண்ணின் மரம் வேண்டும்” கௌமார மடாலயமும், நவீன் பிரபஞ்ச நடனக்குழுவும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு #ஒயில்_கும்மி_நடன_நிகழ்ச்சி சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் முனைவர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அருளார்ந்த தலைமையில் கார்த்திகை 8 ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது, ஒயில் கும்மி நடன ஆசிரியர் நவீன் தலைமையில் அவரிடம் பயிற்சி பெற்ற 250 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கைகளில் தேங்காய் தொட்டிகளையும், மண் சார்ந்த மரக்கன்றுகளையும் ஏந்திக்கொண்டு நடனமாடினர். நிகழ்வில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர், திரு. கே.ஆர்.நாகராஜ், சமூக சேவகரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.சபையின் பிரதிநிதியுமான, திரு. நித்தியானந்தம், அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் மேனாள் வேந்தர், திரு. குழந்தைவேல், காங்கேயம் காளைகள் ஆய்வு மைய நிறுவனர், திரு. கார்த்திகேய சிவசேனாபதி, கொங்கு பண்பாட்டு மைய தலைவர், திரு. ஆதன் பொன்குமார், நம்ம நவக்கரை குழுமம், திரு.மகேஸ்வரன், அருள் நந்தி ஏஜென்சி செயலாளரும், ஆன்மீகச் சொற்பொழிவாளருமான, திரு. அனந்தகிருஷ்ணன், க்ரியா கிரீன்ஸ் இயக்குனரும், கிக்கானி பள்ளியின் மேனாள் தலைமையாசிரியையுமான திருமதி. இராஜாமணி சிவக்குமார், தமிழக அரசு கலை பண்பாட்டு துறையின் கோவை மண்டல கண்காணிப்பாளர் திருமதி. காளியம்மாள், தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளைத் தலைவர், திரு. ரமேஷ் (எ) இர.மயூரநாதன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தார்கள். மண்சார்ந்த மரங்களை நடவேண்டும், தேங்காய் தொட்டிகளை பயன்படுத்தி மரங்கள் வெட்டப் படுவதை தடுக்க முடியும் என்ற கருத்தும் இந்த விழிப்புணர்வு நடனம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. கௌமார மடாலயம், நவீன் பிரபஞ்ச நடனக்குழு, தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளை, நம்ம நவக்கரை குழுமம் ஆகியவை இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.