У нас вы можете посмотреть бесплатно அதிசயங்கள் நிகழ்ந்த சீர்காழி சட்டநாதர் கோயில் | sirkazhi sattanathar koil | Sura Musica l или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அதிசயங்கள் நிகழ்ந்த சீர்காழி சட்டநாதர் கோயில் . தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்திருக்கிறது அருள்மிகு சட்டநாதர் கோயில்.இந்த கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில். ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இத்திருக்கோயில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய திருத்தலம். தேவாரத் தலங்கள் இருநூற்று எழுபத்தி நாலில் அருள்மிகு சட்டநாதர் கோயில் பதினான்காவது தலமாக விளங்குகிறது. உலகமே கடல் நீரால் சூழ்ந்தபோது சீர்காழி அழியாமல் நின்றதைக்கண்ட சிவபெருமான் , தோணியில் வந்து இருகரையும் சேர்ந்ததால் தோணிபுரம் என்று அழைக்கப்படுகின்றது .சீர்காழி தலமானது பனிரெண்டு காரணப்பெயர்களை கொண்டுள்ளது தன் வலிமை அழிந்த கண்ணபிரானால் ஏவப்பட்ட காளிங்கன் என்னும் பாம்பு பூஜித்தமையால் ஸ்ரீகாளிபுரம் என்றும் நாளடைவில் மருவி காழி சீர்காழியானது என்பர் இத்திருக்கோயிலில் திருமுருகன், திருமால், மாகாளி ,பிரம்மன் ,பிரஹஸ்பதி இந்திரன், சூரியன், அக்னி ,ஆதிசேடன், ராகு கேது ,வேதவியாசர் முதலானோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றவர்களாவர். இக்கோயில் சிவபெருமான் சட்டநாதராக காட்சி தருகிறார். பைரவர் கோலத்திலும் நின்று ஆகாச பைரவர் அவதாரமாக காட்சி தருகிறார். சீர்காழி இரட்டைத்தெருவில் வாழ்ந்துவந்த சிவபாத கிருதயர்- புனிதவதி ஆகியோரது மனம் உருகிய வழிபாட்டின் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானே மகனாக பிறக்கும்படி அருள்புரிந்தார். அதேபோன்று ஏழாம் நூற்றாண்டில் ஒரு திருவாதிரை திருநாளன்று திருஞானர் பிறந்தார். திருஞானர் மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் தனது தந்தையுடன் சட்டைநாதர் கோயிலுக்கு சென்றார். சம்பந்தரை கோயிலில் உள்ள பிரம்மதீர்த்த குளக்கரையில் அமரவைத்துவிட்டு சிவபாதகிருதயர் குளத்தில் மூழ்கி மந்திரத்தை ஜெபித்தபடி நீராடினார். சிறிது நேரமாகியும் தனது தந்தை வெளியே வராததால் திருஞானர் மலை மீது காட்சி அளிக்கும் தோணியப்பரை நோக்கி அம்மே அப்பா என்று அழுதார். இதனை கண்ட சிவபெருமானும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் அழும் குழந்தையிடம் வந்தனர். அப்போது சிவபெருமான் உனது குமரன் அழுகிறான் இவனுக்கு உன்னுடைய தனத்திலிருந்து பாலூட்டுவாயாக என்று திருவாய் அருளினார். அதேபோன்று பார்வதியும் தனத்திலிருந்து பாலை பொற்கிண்ணத்தில் எடுத்து குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டினார். அதுமுதல் சம்பந்தராக இருந்தவர் ஞானசம்பந்தராக போற்றப்பட்டார். பின்னர் சுவாமி ,அம்மன் ஒருசேர நின்று காட்சி தந்து மறைந்தனர். நீராடி வந்த சிவபாதகிருதயர் திருஞானசம்பந்தர் கடைவாயில் பால் ஒழுகுவதைக்கண்டு யாரிடம் பால் வாங்கி குடித்தாய் என்று கிண்ணத்தை பறித்து தூக்கி எறிந்தார். அந்த கிண்ணம் எதிரில் இருந்த சுவரில் மோதி நின்றது. தற்போதும் அந்த சுவடை கோயிலில் காணலாம். பின்னர் ஒரு குச்சியால் ஞானசம்பந்தரை அடித்து யாரிடம் பால் குடித்தாய் என்றார். அப்போது திருஞானசம்பந்தர் தனது சுட்டுவிரலால் அம்மையுடன் தோன்றிய அப்பனை சுட்டிக்காட்டி தோடுடைய செவியன் எனத்தொடங்கும் முதல் திருப்பதிகத்தை பாடினார். இதனை பார்த்த சிவபாதகிருதயர் தெய்வகுழந்தையான திருஞானசம்பந்தரை வணங்கி கொண்டாடினார். அதுமுதல் வேதநெறி தழைத்தோங்க தலங்கள் தோறும் சென்று திருஞானசம்பந்தர் சிவனை நோக்கி திருப்பதிகங்கள் பாடிவரலானார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விமரிசையாக பத்து நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிவேதித்த பாலை பக்தர்கள் உண்டு மறுமுலைப்பாலுண்ட பேறு அடைகின்றனர். இந்த பாலை குடிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஞானகுழந்தையாகவும் அறிவாற்றலுடனும் உலகம் போற்றுபவராகவும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். சீர்காழி பெரிய கோயில் என்னும் சட்டநாதர் கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. இக்கோயில் நான்கு கோபுர அமைப்புகளுடன் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் திரிநிலைநாயகிஅம்மன் சட்டநாதர் தோணியப்பர் உமாமகேஸ்வரி திருஞானசம்பந்தர் ஆகிய ஸ்வாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். மேலும் திருஞான சம்பந்தர் சன்னதியில் பெருமான் லிங்கவடிவாகவும் அம்மையார் ஸ்திரசுந்தரி என்ற திருநாமத்தில் அருள் பாலிக்கிறார். திருக்கைலாயத்தை தனக்கு சிறப்பிடமாக கொண்டு வீற்றிருக்கின்ற சிவபெருமான் குருமூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும் லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோயி ல் கொண்டருளியும் சங்கம மூர்த்தமாக அன்பர்களுக்கு வேண்டுவன அளித்தும் அருள் செய்துவருகிறார். இம்முன்று மூர்த்தமாக பல கோயில்களில் தனித்தனியே எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் இங்கு மூன்று மூர்த்தனைகளாக ஒருங்கே அருளி இருப்பது சிறப்பு. சிவன் பார்வதி கைலாய காட்சியாக வேறு காணமுடியாத அற்புத தரிசன காட்சியாகும். தோணியப்பர் உமாமகேஸ்வரி ஸ்வாமிகளுக்கு ஆண்டுக்கு எட்டு முறை தைலக்காப்பு எனும் சாம்பிராணி தைலம் சாத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் இப்பெருமான் வீதியுலா வருவார். இக்கோயிலின் மலைமீது ஏறுபவர்கள் ஆண்களாக இருந்தால் சட்டை அணியாமலும் பெண்களாக இருந்தால் தலையில் பூ அணியாமல் செல்வது ஐதீகம். திருஞான சம்பந்தர் இக்கோயிலில் சுவாமி சன்னதிகளுக்கு இடபக்கத்தில் அம்மன் சன்னதிகளுக்கு நடுவில் தனி சன்னதியில் மூலவராக அருள்பாலிக்கிறார். இவ்வமைப்பு அம்மையருக்கு இடையே முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற சோமாஸ் கந்த வடிவை நினைவூட்டுவதாக உள்ளது. அதேபோல் உற்சவர் திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வர சுவாமி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் சன்னதியில் நாள்தோறும் ஞானப்பால் வழங்கப்படுகிறது. அதேபோல் திருஞானசம்பந்தருக்கு ஆண்டுக்கு ஏழு முறை சிறப்பு வழிபாடு புறப்பாடு நடைபெறுகிறது. TITLE: ADHISAYANGAL NIKALNTHA SIRKAZHI SATTANATHAR KOIL SCRIPT : V.RANJANI VIDEO: M.SURA MAYILVAKANAN MUSIC:ARAVIND SIDDHARTHA EDITING: K.S.MANIOLI PRODUCTION : SURA MUSICAL #sivan #sirkazhi #suramusical