У нас вы можете посмотреть бесплатно ரஷாதீ, பூகாரியின் சரக்கில்லா உருட்டுகளுக்கு அடையார் ஆலிமின் பதில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஷஃபான் 15ம் இரவு. Pj உங்களை கை விட்டு விடுவான். நீங்கள் கைசேதப்படுவீர்கள். ♣️பராஅத் இரவு என்றால் என்ன? "" "" "" "" "" "" "" "" "" "" "" "" ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும். இப்பெயர்கள் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது. நூல் ரூஹுல் பயான் பாகம் 13-பக்கம் 110,111 ♣️ ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பது சுன்னத்தா? கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான். அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822 ♦️ ஒரு நாள் இரவு நான் நாயகம் ﷺ அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ﷺ அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ﷺ அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299) ஆகவே இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் தெளிவாகின்றது. ♦️ பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ﷺ அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ﷺ அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நூல் மிஷ்காத் 1 305 ♦️ கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான். இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837 ♦️ கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான். அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390 ♦️ கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன். அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல் அஹ்மத் 6642 ♣️ ஷஃபான் மாதம் பிறை 15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம் ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம பெறவும், மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'. ♦️ அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபிகள் ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு நூல் : இப்னுமாஜஹ்:1388